2nd Baby Pregnancy Symptoms in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் இரண்டாவது கர்ப்பம் அறிகுறிகள் (Second Baby Pregnancy Symptoms in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். ஒவ்வொரு திருமணமான பெண்களுக்கும் தாய்மை என்பது மிகவும் முக்கியமான ஒரு தருணமாக இருக்கிறது. அதுவும் கருவில் குழந்தை உருவான நாள் முதல் அது பிறக்கும் வரை எண்ணற்ற ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் தான் அதிகமாக இருக்கும். அதுவும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எது ஆரோக்கியத்தை அளிக்கும் என்று பார்த்து பார்த்து 10 மாதம் வரையிலான உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். அந்த வகையில் இத்தகைய செயல் ஆனது ஒருவருக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் கூட சிறிதும் குறையாமல் காணப்படுகிறது. இவற்றை எல்லாம் சரியாக செய்து வந்தாலும் கூட ஒரு சிலருக்கு கர்ப்பமாக இருப்பதற்கானா அறிகுறிகள் என்ன என்பது கூட தெரியாமலே இருக்கிறது. எனவே இன்று 2-வது கர்ப்பத்தின் போது பெண்களுக்கு தோன்றும் அறிகுறிகள் என்னென்ன என்பது பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
இரண்டாவது கர்ப்பம் அறிகுறிகள் | 2nd Pregnancy Symptoms in Tamil:
அதிக உடல் சோர்வு:
நீங்கள் 2 வது குழந்தை கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் உங்கள் உடல் மிகவும் சோர்வாக இருக்கும். முதல் குழந்தையை விட இரண்டாவது குழந்தைகளு உங்கள் உடல் அதிகமான சோர்வு கொண்டிருக்கும். எனவே உங்களுக்கு அதிகப்படியான உடல் சோர்வு இருந்தால் இது ஒரு அறிகுறியாகும். குறிப்பாக 2 மாதங்கள் சோர்வு அதிகமாக இருக்கும்.
மார்பக மாற்றங்கள்:
கர்ப்ப காலத்தில் மார்பகத்தில் மாற்றம் ஏற்படும். முதல் இரண்டு வாரங்களுக்கு மார்பகத்தில் மாதரம் காணப்படும். அதாவது மார்ப்கத்தில் வலி மற்றும் மென்மையான உணர்வு போன்ற அறிகுறிகள் இருக்கும்.
காலையில் மயக்கம்:
2-வது முறை கர்ப்பமாக இருக்கும் போது காலையில் எழுந்ததும் வாந்தி மற்றும் குமட்டல் என இதுபோன்ற அறிகுறிகள் தான் அதிகமாக தோன்றும். ஆகையால் இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு தோன்றினாலும் அதனை அலட்சியப்படுத்தீர்கள்.
மாதவிடாய் காலத்தில் வலி இல்லாமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் |
பெருத்த வயிறு:
முதல் முறை நீங்கள் கர்ப்பமாக இருப்பதை காட்டிலும் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் போது வயிறு கொஞ்சம் பெரியதாகவும், சற்று விரிந்ததாகவும் காணப்படும். மேலும் பசி என்பது அடிக்கடி காணப்படும்.
சிறுநீர் கழித்தல்:
பொதுவாகவே கர்ப்ப காலத்தில் அதிகமாக சிறுநீரை கழிப்பீர்கள். முதல் கற்பதிலும் அதிகமாக சிறுநீரை கழித்திருப்பீர்கள். அதேபோல இரண்டாவது தடவையும் அதிகமாக சிறுநீரை கழிப்பீர்கள்.
அதேபோல் முதுகு வலி என்பது அதிகமாக இருக்கும். எனவே மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் இல்லாமல் வேறு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அதனை உடனே மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
மாதவிடாய் நிற்க போகிறது என்பதை இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்..
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |