வயிற்றில் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன தெரியுமா.?

Advertisement

வயிற்று புற்றுநோய் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வயிற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான அறிகுறிகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாகவே இந்த புற்றுநோய் பிரச்சனைகள் ஆண் , பெண் என்ற இரு பாலினத்தவர்க்கு இருக்கும் பிரச்சனைகள் ஆகும். இந்த வயிற்று புற்றுநோய் ஏற்படுவதால் பல பிரச்சனைகளையும் உண்டாகிறது, பொதுவாகவே புற்றுநோய் பாதிப்புகளில் உயிர் இழந்தவர்கள் அதிகமாவே இருக்கிறார்கள்,  மேலும் இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகளை முன்னதாக தெரிந்துகொண்டால், இது போன்ற பிரச்சனைகளுக்கான தீர்வுகள் கிடைக்கும், மேலும் இந்த புற்றுநோய்க்கான அறிகுறிகளை பார்க்கலாம் வாங்க.

 

வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள்

வயிற்று புற்றுநோய் என்றால் என்ன?

வயிற்று புற்றுநோய் என்பது வயிற்றின் உட்புற பகுதில் இருந்து ஆரம்பமாகி, பிறகு வெளிப்புற சுவர்களுக்கு பரவுகின்ற ஒருவகையான புற்றுநோயாகும். இந்த நோய் படிப்படியாக உருவாகும் புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் வயிற்றில் பரவும் பொழுது மற்ற உடல் உறுப்பு பாகங்களையும் சேதம் அடைய செய்கிறது. இது போன்ற புற்றுநோய்களின் அறிகுறிகள் தெரிந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது. இது போன்ற வயிற்று புற்றுநோய்கள் பெரும்பாலும் சீனாவில் அதிக அளவில் இருக்கிறது,  இந்த புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு காரணம் நம் சாப்பிடும் உணவு பழக்கவழக்கங்களே முக்கியமான காரணமாகும்.

வயிற்று புற்றுநோய் அறிகுறிகள்:

இந்த வயிற்று புற்றுநோய் அறிகுறிகள் இரண்டு விதமாக உள்ளது அதாவது, ஆரம்ப நிலை அறிகுறிகள், முற்றிய நிலை அறிகுறிகள் என இரண்டு வகை உள்ளது, இவற்றால் ஏற்படும் அறிகுறிகளை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஆரம்ப நிலை அறிகுறிகள்:

வயிற்று புற்றுநோய் ஆரம்ப நிலையில் ஒரு சில பேருக்கு எந்தவிதமான அறிகுறிகளும் இருக்காது, ஆனால்  அதில் ஒரு சிலருக்கு புற்றுநோய் கட்டி வயிற்றில் வளர தொடங்கும் பொழுது பல விதமான பிரச்சனைகளை உண்டாகிறது, அவை என்னவென்று தெரிந்துகொள்ளம்.

  • பசி உணர்வுகள் குறைந்து காணப்படும். 
  • உணவுகள் கொஞ்சமாக சாப்பிடும் பொழுது அதிகமாக சாப்பிட்டதுபோல உணர்வுகள் இருக்கும். 
  • உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக இழைப்பது. 
  • உணவுகள் சாப்பிடும் பொழுது குமட்டல்.
  • செரிமான கோளாறுகளால் ஏற்படும் வாந்தி.
  • தொப்புள் இருக்கும் பக்கிதியில் வலி. 
  • மலம் கழிக்கும் பொழுது இரத்தம் வெளியேறுவது. 
  • உடல் சோர்வு பிரச்சனைகள்.

முற்றிய நிலை அறிகுறிகள்:

வயிற்று புற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொழுது பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அதாவது அந்த கட்டி பெரிதாக வளரும் பொழுது பெருங்குடல் மற்றும் கல்லீரலை அதிக அளவு பாதிப்பு அடைய செய்கிறது.

  • வயிற்று புற்றுநோய் முற்றிய பிறகு அதிகப்படியான வாந்தி.
  • பசிக்கும் உணர்வுகள் முழுவத்துவமாக இழப்பு.
  • வயிற்றில் நீர் சேர்வதினால் வயிறு உப்புதல். 
  • மிகவும் குறைந்த எடை 
  • தோல் பகுதிகள் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுதல்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்
Advertisement