வாயில் புற்றுநோய் வருவதற்கான சில அறிகுறிகள்

mouth cancer symptoms in tamil

வாய் புற்றுநோய் 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வாயில் வரும் புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே புற்றுநோயில் அதிகமான வகைகள் உள்ளது, அதில் குறிப்பாக வாயில் வரும் புற்றுநோய்  பிரச்சனைகளை முன்னதாவே தெரிந்துகொள்வதன் மூலம், இது போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் , மேலும் புற்றுநோய் வருவதற்கு காரணம் என்னவென்றும், அதன் அறிகுறிகள் என்னவென்றும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

இந்த அறிகுறிகள் இருக்கா..? அப்போ இது குடல்வால் பிரச்சனையாக தான் இருக்கும்..?

வாய் புற்றுநோய் என்றால் என்ன?

வாய் புற்றுநோய் என்பது வாயில் உள்ள நாக்கு, உதடு, வாயின் கீழ் தளம், தொண்டை போன்ற இடங்களில் வரும் கட்டி அல்லது புண்கள் தான் வாய் புற்றுநோய் என்று சொல்லப்படுகிறது. இந்த நோய்களை அலட்சியமாக விடாமல் ஆரம்ப நிலையிலே கவனித்து வருவது மிகவும் அவசியம். இந்த நோயினால் பல உயிர்கள்  இறந்துருகிறது. இந்த வாய் புற்று நோயானது வாய் பகுதி மட்டுமல்லாமல் தலை பகுதிகளிலும் பாதிப்பு அடைய செய்கிறது. இதுவே வாய் புற்றுநோய் என்று சொல்லப்படுகிறது.

வாய் புற்றுநோய் வர காரணம்:

வாயில் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, சிகரெட், பீடி, பான்மசாலா போன்ற போதை பொருட்களை வாயில்அடக்குவதன்  மூலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

சிறு வயதிலே சிலருக்கு வரும் புற்றுநோய்களுக்கான காரணம் பல் துலக்குவதில் கவனமாக இல்லாமல் இருப்பது, வாய் பகுதிகளை ஒழுங்காக தூய்மை செய்யாமல் இருப்பது மற்றும் பலவிதமான நோய்களின் தாக்கம் போன்றவற்றால் இது போன்ற பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

வாய் புற்றுநோய் அறிகுறிகள்:

வாயில் புற்றுநோய் பொதுவாக முதிர்ந்த நிலைகளிலில் வரும் என்றும் சொல்லப்படுகிறது. வாய்களில் வலிகள் போன்ற எந்தவிதமான பிரச்சனைகள் இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவர் அல்லது பொது மருத்துவரை அணுகுவது மிகவும் நல்லது.

வாயில் இரத்த கசிவு, பல் ஆடுதல், தேவையில்லாமல் பல் கொட்டுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் இதற்கான முக்கிய பிரச்சனையாகும்.

வாய் பகுதியில் வெள்ளை நிறம் அல்லது இளம்சிவப்பு போன்ற நிறங்கள் மூன்று வாரத்திற்கு மேல் இருந்தால் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

அதேபோல் வாய் பகுதில் கட்டி மற்றும் தடித்து இருந்தால் வாய் புற்றுநோய்க்கான முக்கிய காரணமாகவும் இருக்கிறது. மேலும் கழுத்து உள்பகுதியில் கட்டிகள் போன்றவை இருந்தாலும் வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

சாப்பிடுவதில் சிரமம், எச்சி முழுங்கவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் வாய் புற்றுநோய்க்கு முக்கிய அறிகுறிகள் ஆகும். அதேபோல் தொண்டை பகுதில் தொடர்ந்து வலி இருந்தாலும் இதற்கான அறிகுறியாகும்.

மேலும் பேசுவதில் சிரமம் மற்றும் பேசுவதில் மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டாலும் வாய் புற்றுந்நோய்க்கான முக்கிய அறிகுறியாகும். இது போன்ற அறிகுறிகள் தென்பாட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.

 

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்