கழுத்து சுளுக்கு பிடித்தால் என்ன செய்வது | Symptoms of Muscle Sprain in Neck in Tamil
பொதுவாக இந்த பிரச்சனை அதிகளவு வந்துள்ளது. அப்படி என்ன பிரச்சனை என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த பதிவை படிக்கும் பாதி பேருக்கு இந்த பிரச்சனை இருக்கும் அதாங்க சுளுக்கு, பாதிப்பேருக்கு தூங்கி எழுந்ததும் கழுத்தை திருப்பவே முடியாது. நல்லதா இருந்தோம் ஆனால் நமக்கு ஏன் கழுத்து வலிக்கிறது என்று கேள்வி இருக்கும். வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வார்கள் தலையணை சுளுக்கு என்பார்கள். ஆனால் அது எல்லாருக்கும் வருமா அல்லது அது சுளுக்கு தான் என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது என்று அதற்கு என்ன அறிகுறி இருக்கும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Symptoms of Muscle Sprain in Neck in Tamil:
வெளிப்படையான காயங்கள் இல்லாமல் அடிபடும் போதும் அல்லது, வேகமான நடக்கும் போது தடுமாறுவது, ஒரு பொருளை வைத்து வேகமான அடிக்கும் போதும், முக்கியமான இரவு நேரங்களில் ஒரே மாதிரியா உறக்கம் என இதுபோன்ற தவறான செயல்களால் தான் இந்த சுளுக்கு ஏற்படும். அடிபட்டவுடன் வலி ஏற்படும். ஆனால் அது சுளுக்கு என்று அறிவது எப்படி..?
கழுத்து சுளுக்கு அறிகுறி:
இது எதனால் ஏற்படுகிறது என்றால் இரவு நேரங்களில் ஒரே நிலையில் தூங்குவது மற்றும், ஒரே வடிவத்தில் கழுத்தை அசைக்காமல் வைத்து தூங்கினால் மறுநாள் காலையில் ஒரு பக்கம் மட்டுமே திருப்ப முடியும். அதேபோல் அன்னார்ந்து மேல் பக்கத்தை பார்க்க முடியாது. அதேபோல் கழுத்தை எப்போதும் போல் திருப்பும் போது வலி அதிகமாக ஏற்படும். தலையின் பின் பக்கம் வலி ஏற்படும்.
அதேபோல் சிலருக்கு அதிகமான சுளுக்கு இருந்தால் மயக்கம், காதுகளில் வலி, சோர்வு, உணர்வின்மை என்று அறிகுறிகள் ஏற்படும்.
கால்களில் சுளுக்கு அறிகுறி:
அதிகமாக கால்களில் அடிபடும் போது ஏற்படும். அப்போது கால்களில் சுளுக்கு இருந்தால் அடிபட்ட இடத்தை விட மற்ற இடங்களில் வீக்கம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் சரியாக நடக்க முடியாமல் போய்விடும். வேகமாக நடந்தால் வலி ஏற்படும்.
இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதற்கான சரியான தீர்வை தேடிக்கொள்ள வேண்டும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉👉சுளுக்கு குணமாக என்ன செய்வது?
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |