நரம்பு தளர்ச்சி அறிகுறிகள் | Symptoms of Nervous Breakdown in Tamil

Advertisement

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள் | Symptoms of Nervous Breakdown in Tamil

நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம். ஆனால் இதுமாதிரி இல்லாமல் நமது உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது என்றால் நாம் ஆரோக்கியமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருக்கிறோமா இல்லையா என்பதனை நமது உடல் சில அறிகுறிகள் மூலம் அதனை நமக்கு தெரியப்படுத்துகிறது. நம்மில் சில இதுபோன்ற அறிகுறியினை பெரியதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் எதையும் ஆரம்பத்திலேயே கவனித்தால் அதனை சரி செய்து விடலாம். ஒருவேளை அதனை கவனிக்காமல் விட்டு விட்டால் அது பெரிதாகி சில விளைவுகள் வந்து விடும். அந்த வகையில் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மாதிரியான அறிகுறிகள் இருக்கிறது. ஆகாயல் இன்று நரம்பு தளர்ச்சிக்கான அறிகுறிகள் என்னென்ன என்று தெரிந்துக்கொண்டு வருமுன் காத்து மகிழ்ச்சியாக வாழலாம் வாருங்கள்.

சர்க்கரை நோய் அறிகுறிகள்

நரம்பு தளர்ச்சி என்றால் என்ன..?

 நமது மூளையில் மயிலின் என்ற வேதிப்பொருள் சிறியதாக இருக்கும் பல நரம்புகளை ஒன்றாக இணைத்து பெரிய நரம்பாக ஊடுருவி மூளையில் உள்ள தசைகளுக்குள் இருக்கிறது. இத்தகைய பெரிய நரம்பிற்கு நாம் நினைக்கும் கட்டளைகள் மூளைக்கு போய் சேருவதில் தடை ஏற்படுவதே நரம்பு தளர்ச்சி ஆகும்.  

நரம்பு தளர்ச்சி வருவதற்கான காரணம்:

நரம்பு தளர்ச்சியானது சரியான தூக்கமின்மை, மன உளைச்சல், அதிர்ச்சியான தகவல்களை கேட்டல் மற்றும் அதிர்ச்சியான சம்பவங்களை பார்த்தல் போன்ற நிகழ்வுகள் காரணமாக வருகிறது என்று சொல்லப்படுகிறது.

காச நோய் அறிகுறிகள்

நரம்பு தளர்ச்சி அறிகுறிகள்:

symptoms of nervous breakdown in tamil

நாம் இயல்பாக இருப்பதில் மாற்றங்கள் காணப்படுதல். அதாவது மனசோர்வு, திடீரென அழுதல் மற்றும் எரிச்சலாக இருப்பதாக உணர்தல் இதுபோன்ற அறிகுறிகள் நரம்பு தளர்ச்சிக்கான அறிகுறிகளில் அடங்கும்.

இரவில் சரியான தூக்கம் இல்லாமல் இருத்தல் மற்றும் எந்த விதமான காரணமும் இல்லாமல் திடீரென உடல் எடை குறைந்து காணப்படுதல் இத்தகைய அறிகுறிகள் காணப்பட்டாலும் அதனை உடனடியாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

எப்போதும் இல்லாமல் சாப்பாட்டினை சாப்பிடாமல் மறுப்பது அல்லது சாப்பாட்டினை பார்த்தவுடன் வெறுப்பாக தோன்றுவது போன்ற உணர்வு இந்த அறிகுறிகளும் நரம்பு தளர்ச்சிக்கான அறிகுறிகளாகும்.

நீங்கள் வழக்கமான செயல்கள் செய்வதில் திடீரென மாற்றம் காணப்படுதல் மற்றும் தனியாக யாரிடமும் பேசாமல் எந்த நேரமும் சிந்தித்து கொண்டு இருத்தல் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தாலும் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவது உடல் நலத்திற்கு நல்லது. ஏனென்றால் இதுவும் நரம்பு தளர்ச்சிக்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.

வாய் வறட்சியுடன் இருத்தல் மற்றும் உடலில் அதிகப்படியான வியர்வை சுரத்தல் இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு வந்தாலும் நரம்பு தளர்ச்சிக்கான அறிகுறியாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்⇒ நரம்பு தளர்ச்சி குணமடைய உணவுகள்..!

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil
Advertisement