இயற்கை வேளாண்மை கட்டுரை | Iyarkai Velanmai Katturai in Tamil

Iyarkai Velanmai Katturai in Tamil

இயற்கை வேளாண்மை தமிழ் கட்டுரை | Iyarkai Velanmai Katturai in Tamil

இயற்கை விவசாயம் பற்றிய கட்டுரை: வணக்கம் நண்பர்களே இன்றைய கட்டுரை தொகுப்பில் இயற்கை வேளாண்மை கட்டுரை பற்றி பார்க்கலாம். ஒவ்வொரு நாட்டினுடைய முதுகெலும்பும் விவசாயம் ஆகும். விவசாயம் உணவுக்கு மட்டும் இல்லாமல் அதைச் சார்ந்த தொழிலுக்கும் பயன்பட்டு வருகிறது. வேளாண்மையின் முக்கியத்துவம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறது என்றே சொல்லலாம். நாம் இந்த பதிவில் இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவத்தை கட்டுரை வடிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
செயற்கை வேளாண்மை தீமைகள்
வேளாண்மையின் முக்கியத்துவம்
இயற்கை வேளாண்மையின் நன்மைகள்
பயிர்கள்
முடிவுரை

முன்னுரை – இயற்கை வேளாண்மை கட்டுரை:

  • வேளாண்மையின் முக்கியத்துவத்தை அறிந்ததால் தான் அனைத்து முன்னனி நாடுகளும் போட்டி போட்டு பாதுகாத்து வருகின்றன. இயற்கை வேளாண்மை நாட்டில் வளர வேண்டும் என தமிழக அரசு 1966-ம் ஆண்டு பசுமைப் புரட்சி கொண்டு வரப்பட்டது.

செயற்கை வேளாண்மை தீமைகள் – Iyarkai Velanmai Tamil Katturai:

  • பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக அனைத்து நாடுகளும் தானியங்களும், காய்கறிகளும் அதிகமாக வேண்டும் என செயற்கை உரங்களை பயன்படுத்தி விரைவான விளைச்சலை பெற ஆரம்பித்து விட்டன. இப்படி அனைத்து வேளாண்மையிலும் செயற்கை உரங்களை பயன்படுத்துவதால் காய்கறிகளில் இருக்கும் ஊட்டச்சத்து குறைவது மட்டும் இன்றி மண்ணின் வளத்தையும் பாதிக்கின்றன.
  • ஊட்டச்சத்து குறைந்த காய்கறிகளை, தானியங்களை சாப்பிடுவதால் குழந்தைகள் இளம் வயதிலேயே நோய்வாய்ப்படுகின்றன. இவை மனிதர்களின் உடலை தாக்குவதோடு சுற்றுப்புற சூழலையும் மாசடைய செய்கின்றன. செயற்கை உரங்கள், பூச்சி மருந்துகள் செடிகளுக்கு விஷ தன்மையை கொடுக்கிறது.

இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் – Iyarkai Velanmai Katturai in Tamil:

  • நம்முடைய மண் வளத்தையும், இயற்கையையும் பாதுகாப்பதற்கு இயற்கை வேளாண்மை சிறந்த ஒன்று. இயற்கை வேளாண்மையை விவசாயத்தில் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது, மண்ணின் தன்மை சிதைவடையாமல் இருக்க உதவுகிறது.

இயற்கை வேளாண்மையின் நன்மைகள்:

  • இயற்கை வேளாண்மையில் தரமான விதை, மண்புழு உரம், பசுந்தாள் உரம், சாணம், உதிர்ந்த இலைகள், மக்கும் குப்பைகள், உபயோகப்படுத்தப்பட்ட காபீ தூள் போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுவதால் நல்ல மகசூல் கிடைப்பதோடு, சத்துள்ள காய், கனிகளும் கிடைக்கின்றன. நிலங்களின் தன்மையை மீட்டு எடுப்பதற்கும் இயற்கை வேளாண்மை பெரிதும் உதவுகிறது.
  • உடலுக்கு தீங்கற்ற உணவு உற்பத்திகளை மேற்கொள்வதற்கும், ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் இயற்கை வேளாண்மை அவசியம்.

பயிர்கள் – Iyarkai Velanmai Katturai in Tamil:

  • இயற்கை வேளாண்மைக்கு நெல், கோதுமை, மக்காச்சோளம், கடலை, ஆமணக்கு, கடுகு, எள், பருத்தி, கரும்பு, இஞ்சி, மஞ்சள், மிளகாய், தேயிலை, வாழை, சப்போட்டா, பப்பாளி, தக்காளி, கத்தரி, வெள்ளரி போன்ற பயிர்களை பயிரிட்டால் அமோக விளைச்சலை விவசாயத்தில் பெறலாம்.

முடிவுரை – இயற்கை வேளாண்மை கட்டுரை:

  • ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு நீர் எவ்வளவு அவசியமோ அதே போன்று மனிதன் நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வதற்கு சத்துள்ள உணவு அவசியம்.
  • இயற்கை வேளாண்மை சுற்றுப்புறத்திற்கு நன்மையையும், மனிதர்களுக்கு சத்துள்ள உணவுகளையும் கொடுக்கிறது. இயற்கை உரங்களை பயன்படுத்தி வேளாண்மையை பெருக்குவது இப்பூமியில் வாழும் அனைவரின் கடமையாகும்.

நோயில்லா உலகை படைக்க! இயற்கை வேளாண்மையை பின்பற்றுவோமாக!

நீரின்றி அமையாது உலகு கட்டுரை
மழைநீர் சேகரிப்பு கட்டுரை

 

இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை  விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Tamil Katturai