தொழிலாளர் தினம் கட்டுரை | Tholilalar Dhinam Katturai
மக்களின் அடையாளமாக விளங்கும் ஒரு தினம் உழைப்பாளர் தினம். பெரும் தலைவர்களுக்கும் மட்டுமே சிலையும், அவர்களுக்கு என ஒரு சிறப்பான தினமும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மனிதர்களுக்கும், இந்த நாட்டையே தனது தோளில் சுமந்து நிற்கும் உழைப்பாளர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று கொண்டாடப்படும் ஒரு தினம் தான் உழைப்பாளர் தினம். உழைப்பாளர்கள் தினம் ஆண்டு தோறும் மே 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்றைய கட்டுரை பதிவில் உழைப்பாளர்களை கௌரவிக்கும் விதமாக கொண்டாடப்படும் உழைப்பாளர் தின கட்டுரையை படித்தறியலாம் வாங்க.
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
மே தின வரலாறு |
உழைப்பாளர்களின் முக்கியத்துவம் |
தொழிலாளர்களை மதிப்போம் |
முடிவுரை |
முன்னுரை:
- Ulaipalar Dhinam Speech in Tamil: இந்த உலகம் ஒவ்வொரு நொடியும் இயங்குவதற்கு மனிதனின் உழைப்பு இன்றியமையாததாக உள்ளது.
- கடின உழைப்பு இருந்தால் இந்த உலகத்தில் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து தான் தங்களுடைய உழைப்பின் மூலம் மக்கள் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
- மானிடர்கள் உழைப்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு தான் ஆனால் நாள் முழுக்க வேலை பார்த்து கொண்டிருக்கும் உழைப்பாளர்களுக்கு மகிழ்ச்சி என்பது எட்டாத கனியாகவே உள்ளது. இன்றும் உழைத்து தங்களுடைய பொருளாதார நிலை உயராத மக்கள் பலர் உள்ளனர்.
உழைப்பே உயர்வு கட்டுரை |
மே தின வரலாறு:
- Labour Day Speech in Tamil: முன்பு எல்லாம் மக்கள் இடைவெளி இல்லாமல் உழைத்து கொண்டேதான் இருந்தார்கள், அதனை எதிர்க்கும் விதமாக அமெரிக்காவில் எட்டு மணி நேரம் வேலை, எட்டு மணி நேரம் ஓய்வு மற்றும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க வேண்டும் போராட தொடங்கினார்.
- இந்த போராட்டம் 1886-ம் ஆண்டு நடந்தது. இதில் பல லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்டு போராடினர். இதில் பல உழைப்பாளர்கள் கொல்லபட்டனர்.
- பின்னர் தொழிலாளர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து உழைப்பாளர்கள் ஒன்று திரண்டு போராடி வெற்றி கண்டனர்.
- உழைப்பாளர்கள் ஒன்றுபட்ட தினத்தை போற்றும் விதமாகவும், தொழிலாளர்களின் முக்கியத்துவத்தை போற்றும் விதமாகவும் உலக தொழிலாளர்கள் தினம் மே மாதம் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
உழைப்பாளர்களின் முக்கியத்துவம்:
- Labour Day Katturai in Tamil: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உபயோகப்படுத்தும் பொருள் உழைப்பினால் வந்தது தான். காலையில் சாப்பிடும் தட்டில் ஆரம்பித்து இரவு உறங்கும் கட்டில் வரை அனைத்தும் தொழிலாளர்களின் உழைப்பில் வந்தது தான்.
- ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அந்த நாட்டில் உள்ள மக்களின் உழைப்பினால் வந்தது. உழைப்பாளர்களை போற்றும் விதமாக “உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்குமில்லை” என்ற பாடலும் உள்ளது.
தொழிலாளர்களை மதிப்போம்:
- உழைப்பு என்பது அனைவருக்கும் சமம் தான். கந்தல் துணியை அணிந்து வேலை செய்தாலும், கதர் சட்டையை அணிந்து வேலை செய்தாலும் உழைப்பு உழைப்பு தான்.
- நம் நாட்டில் குறைவாக சம்பளம் வாங்குபவர்களை மதிக்க கூடாது என்றும், உயர்வாக சம்பளம் வாங்குபவர்களை மதித்து நடக்க வேண்டும் என்ற மனநிலை உள்ளது.
- திருட்டு, பொய், சட்டத்திற்கு புறம்பான செயல் எதுவும் செய்யாமல் பார்க்கும் எந்த வேலையாக இருந்தாலும் அது உயர்ந்தது தான் என்று என்ன வேண்டும்.
முடிவுரை:
நம்முடைய வாழ்க்கை பயணத்தில் சாதனை படைக்க கடின உழைப்பு அவசியம். பூமி சுழல்வதை நிறுத்தி விட்டால் உலகம் இயங்குவது நின்று விடும், அது போல உழைக்க தவறும் மனிதனால் வாழ்வில் சாதனையை படைக்க முடியாது. எனவே வியர்வையை சிந்தும் கரங்கள் உயரட்டும், நாளைய உலகை இனிதே ஆளட்டும்.
உழைப்பின் மூலம் இந்த நாட்டை உயர்த்தும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்..!
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள் |
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |