எங்கள் ஊர் கட்டுரை | Engal Oor Katturai in Tamil

Engal Oor Katturai in Tamil

எங்கள் ஊர் பற்றிய கட்டுரை | En Oor Katturai in Tamil

நாம் எங்கு பிறந்து வளர்ந்தோமோ அந்த இடம் நமக்கு சொர்க்கம் தான். ஒவ்வொருவருக்குமே அவர்கள் வாழ்ந்து வந்த ஊர் சிறப்பான இடம் தான். கிராமம் என்றாலே நிறைந்த குளங்கள், வயல் வெளிகள், அழகிய கோவில்கள், நெருக்கமான வீடுகள் போன்றவை காட்சியளிக்கும். அதுவே நகரம் என்று பார்த்தால் சற்று கிராமங்களை விட மாறுபாடு இருக்கும். கிராமமோ, நகரமோ எங்கு வாழ்ந்தாலும் நம்முடைய சொந்த ஊர் நமக்கு எப்போதும் கிடைத்த பாக்கியம் என்றே சொல்லலாம். நாம் இந்த பதிவில் எங்கள் ஊர் பற்றிய கட்டுரையை பார்க்கலாம் வாங்க..

தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை

பொருளடக்கம்:

முன்னுரை 
எங்கள் ஊரின் சிறப்பு 
அயல்நாடுகளுக்கு செல்வது 
மறக்க முடியாத நினைவுகள் 
முடிவுரை 

முன்னுரை:

சொர்க்கமே என்றாலும் அது நம் ஊற போல வருமா? எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா? என்ற பாடலின் வரிக்கேற்ப ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய சொந்த ஊரானது அமைந்திருக்கிறது. எங்கள் ஊரின் அழகை பற்றி கூறினால் நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வளவு சிறப்பு நிறைந்துள்ளது எங்கள் ஊரில்.

எங்கள் ஊரின் சிறப்பு:

நான் வசிக்கும் அழகான ஊரில் தண்ணீர் வற்றாத ஆறு, ஏரிகள் மற்றும் குளங்கள். விடுமுறை என்றாலே நானும் என் நண்பர்களும் குளிப்பதற்கு ஊரில் அமைந்துள்ள நீர் நிலையங்களுக்கு சென்று குளித்து மகிழ்ச்சியாக இருப்போம்.

எங்கள் ஊரில் வருடந்தோறும் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும். அன்றைய தினத்தில் எங்கள் வீட்டில் அனைத்து உறவினர்களும் வந்து வீடு களைகட்டி காட்சியளிக்கும். மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து திருவிழாவில் கலந்துகொண்டு கடவுளை வணங்கிவிட்டு அங்குள்ள விளையாட்டு பொருள்களையெல்லாம் வாங்கிவிட்டு வீடு திரும்புவோம்.

நான் படித்த பள்ளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நினைவிடம் ஆகும். நான் இன்று நல்ல நிலைமையில் இருப்பதற்கு முக்கிய காரணம் முதலில் என் தாய், தந்தையர். அதன் பிறகு எனக்கு கல்வி அறிவு புகட்டிய எனது ஆசிரியை பெருமக்கள்.

பள்ளி முடித்துவிட்டு மாலை வீடு திரும்பியவுடன் வீட்டு நண்பர்களுடன் கபடி, பழுங்கி, கிரிக்கெட் போன்ற பல விளையாட்டுக்கள் விளையாடியது மறக்க முடியாத ஒன்று.

உழைப்பே உயர்வு கட்டுரை

அயல்நாடுகளுக்கு செல்வது:

அழகான அமைதியான எங்கள் ஊருக்கு நிகராக வேறு எந்த ஊரும் இனிமேலும் வந்துவிட முடியாது. அனைத்து சாதியினரும் அண்ணன், தம்பி, மச்சான் என்று வாழும் சிறந்த ஊர். வேலை என்று வந்துவிட்டால் நமது சொந்த ஊரையே விட்டு செல்லும் வாய்ப்பு அனைவர்க்கும் ஏற்படக்கூடிய வருத்தமான ஒன்று. உழைப்பதற்காக தமது சொந்த ஊரை விட்டு வெளியேறிய அனைவருக்கும் சொந்த ஊரின் நினைவுகளை ஒரு போதும் மறக்க முடியாது. அந்த நினைவுகள் பசுமையானவை எங்கு சென்றாலும் எங்கள் ஊர் என்று பெருமை பேசாமல் இருப்பவர் எவரையும் பார்க்க முடியாது.

மறக்க முடியாத நினைவுகள்:

தன் அழகான குடும்பம், வீடு, மறக்க முடியாத பக்கத்துக்கு வீட்டினர்கள், சிறுவயது நண்பர்கள், சிறுவயதில் ஓடி திரிந்த வயல் வெளிகள், பள்ளி சென்ற நினைவுகள், கொண்டாடி திரிந்த கோவில் திருவிழாக்கள், பாசத்தை பொழியும் உறவினர்கள், எங்கள் ஊரின் நினைவுகள் உலகத்தின் எந்த கோடியில் இருந்தாலும் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. மனிதர்கள் நாள் முழுவதும் உழைத்து களைத்த பின்னர் ஓய்வெடுக்க தாய் மடியினை தேடுவது போல வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊரை தான் எல்லோரும் தேடுவார்கள்.

முடிவுரை:

பிறப்பு முதல் தன்னுடைய சொந்த ஊரிலே வாழ்கின்ற பாக்கியம் அனைவருக்கும் கிடைத்துவிடாது. அப்படி அந்த வாழ்க்கை கிடைத்தவர்கள் உண்மையில் பாக்கியசாலிகள்தான். மனித வாழ்க்கையானது மிகவும் குறுகியது. அந்த வாழ்வை நமக்கு பிடித்தபடியாக வாழ்வது தான் மிகவும் அவசியமானதாகும். அதனை நிச்சயமாக எங்கள் ஊர் எனக்கு வழங்கும் என்று நான் நம்புகின்றேன்.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Tamil  Katturai
SHARE