என் பள்ளி கட்டுரை தமிழ் | En Palli Katturai
Enathu Palli Katturai in Tamil: நம் பெற்றோர்களுக்கு அடுத்தது நமக்கு ஒழுக்கத்தையும், அறிவையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது நம் பள்ளி கூடம் தான். பல அறிஞர்களையும், மருத்துவர்களையும், சாதனையாளர்களையும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்துவது பள்ளியும், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் தான் என்பதை யாராலும் மறக்க முடியாது. பள்ளி வாழ்க்கையை யாராலும் மறக்க முடியாது,. எவ்வளவு வயதானாலும் அதனை நினைத்து பார்த்து கொண்டிருப்போம். இப்படி பல தலைவர்களை உருவாக்கி கொண்டு வரும் பள்ளியை பற்றிய சிறப்புகளை இந்த பதிவில் கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.
எங்கள் பள்ளி தமிழ் கட்டுரை:
குறிப்பு சட்டகம்:
முன்னுரை |
பள்ளி சூழல் |
வகுப்பறை சூழல் |
கழிவறை வசதி |
கல்வி அறிவு |
சத்துணவு |
விளையாட்டு மைதானம் |
முடிவுரை |
முன்னுரை:
- இந்த உலகத்திற்கு பல ஒழுக்கமுள்ள மனிதர்களை உருவாக்கும் பயிற்சி கூடம் தான் இந்த பள்ளி கூடம். இளம் வயதில் இருந்தே முற்போக்கு சிந்தனைகளையும், ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் எப்படி வாழ வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவு புகட்டும் அறிவு கூடங்கள் நாம் படிக்கும் ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் தான்.
பள்ளி சூழல்:
- என் பள்ளியில் பார்ப்பவர்களை கவரும் அளவிற்கு மரங்களும், செடிகளும், பூந்தோட்டங்களும் நிறைந்து இருக்கும். என் பள்ளியின் கட்டிடங்கள் மிகவும் உயர்ந்த கட்டிடங்களாக இருக்கும். உயரமாக இருந்த போதிலும் மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பு அமைப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. எனது பள்ளியில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. என் பள்ளி வளாகம் குப்பைகள் இல்லாமல் தூய்மையாகவும், குப்பைகளை போடுவதற்கு ஆங்காங்கு குப்பை தொட்டிகளும் உள்ளன.
வகுப்பறை சூழல்:
- எனது பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளது. வகுப்பறைகள் மிகவும் வெளிச்சமுடனும், காற்றோட்டமாகவும் இருக்கும். அனைத்து வகுப்பறைகளின் Board-களிலும் மாணவர்களின் வருகை பதிவு குறிக்கப்பட்டிருக்கும்.
- மாணவர்களுக்கு என தனித்தனியாக Activity கொடுத்து அவர்களை பாராட்டும் விதமாக அவர்கள் செய்த Activity-ஐ வகுப்பரையின் சுவர்களில் ஒட்டப்பட்டு இருக்கும். தலைமை ஆசிரியர் அறிவிக்கும் முக்கிய அறிவிப்புகளை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக ஒலிபெருக்கி பொருத்தப்பட்டிருக்கும்.
கழிவறை வசதி:
- பள்ளியில் மாணவ/ மாணவிகளுக்கென தனித்தனி கழிவறை வசதி உண்டு. கழிவறையை பயன்படுத்திய பின் அதை தூய்மைபடுத்துவதற்கென பணியாட்களும் இருப்பார்கள்.
- கை கழுவும் இடத்தில் கையை எப்படி முறையாக கழுவ வேண்டும் என்ற விளக்க படமும் இருக்கும்.
கல்வி அறிவு:
- என் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவர்களுடன் நன்கு பழகுவதால் எனது பள்ளி வாழ்க்கை சிறப்பானதாகவே இருக்கிறது. மேலும் ஆசிரியர்கள் அனைவரும் அன்பாகவும் பாடத்தை எளிதில் புரியும் படியாகவும் நடத்துவார்கள். அதனால் என் பள்ளி மாணவர்களது கல்வி சிறப்பாக உள்ளது.
- எனது பள்ளியில் மாணவர்களின் கல்வியை அடுத்த நிலைக்கு கொண்டு போவதற்காக அறிவியல் கூடமும், நூலகமும், கணினி பயிற்சி கூடமும் இருக்கும். கல்வி அறிவோடு ஒழுக்கமும் கிடைக்க வேண்டும் என்று என் பள்ளியில் NCC, NSS போன்ற குழுக்களும் உள்ளன.
சத்துணவு:
- மாணவர்கள் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்று சத்துணவு கூடங்கள் உள்ளன. சத்துணவு கூடத்தில் வாரத்திற்கு ஒரு முறை முட்டை, வாழை பழம், வேக வைத்த பயிறு, கொண்டை கடலை போன்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
- மாணவர்களின் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு தகுந்தாற் போல யோகா வகுப்புகள் எடுக்கப்படும்.
விளையாட்டு மைதானம்:
- என் பள்ளியில் மாணவர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று நன்கு பயிற்சி பெற்ற P.T ஆசிரியர்கள் உள்ளனர்.
- என் பள்ளியில் இருக்கும் விளையாட்டு மைதானம் பெரிதாகவும், சுத்தமாகவும் இருக்கும். மாணவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு பொருட்களும் வழங்கப்படும்.
முடிவுரை:
- என் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நல்ல சிந்தனைகள் உடையவர்களாகவும், நாளைய சமுதாயத்தை நல்ல வழியில் கொண்டு போகும் தூண்களாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வி அறிவை புகட்டும் பாடசாலையாக மட்டும் என் பள்ளி இல்லாமல் பல விஷயங்களை அறிந்து கொள்ளும் இடமாகவும் என் பள்ளி விளங்குகிறது.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Tamil Katturai |