நீர் மேலாண்மை கட்டுரை | Neer Melanmai Katturai in Tamil

Advertisement

நீரின் முக்கியத்துவம் கட்டுரை | Neer Melanmai Katturai

நீரின் தேவை இந்த உலகில் வாழும் அனைவருக்கும் இன்றியமையாதது. இதை தான் திருவள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்ற குறள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தண்ணீர் அதிகம் கிடைக்கக்கூடிய மழைக்காலத்தை விட, நீர் கிடைக்காத கோடை காலத்தில் தான் தண்ணீர் தேவை அதிகமாக உள்ளது என்றே சொல்லலாம். நிலத்தடி வறண்டு காணப்படுவதால் நீரின் அளவும் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் நீரின் மேலான்மையை உயர்த்த வேண்டும். நாம் இந்த தொகுப்பில் நீர் மேலாண்மை பற்றி கட்டுரை வடிவில் தெரிந்து கொள்வோம் வாங்க.

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
நீர் மேலாண்மையின் முக்கியத்துவம்
நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கான காரணம்
நீரை சேகரிப்பதற்கான வழிகள்
முடிவுரை

முன்னுரை:

நீர் மேலாண்மை கட்டுரை: தண்ணீர் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் சொல்ல வேண்டும். நீரின் முக்கியத்துவத்தை அறிந்து நம் முன்னோர்கள் பலவழியில் நீரை சேமித்தனர். தாவரங்கள், விலங்குகள், பூச்சிகள் உயிர் வாழ்வதற்கு காற்று எவ்வளவு முக்கியமோ அதே போன்று நீரும் முக்கியம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

மழைநீர் சேகரிப்பு கட்டுரை

நீர் மேலாண்மையின் முக்கியத்துவம்:

  • Neer Melanmai Katturai in Tamil: முன்னோர்கள் நீரை சேமிப்பதற்காக தான் குளம், ஏறி, கால்வாய் போன்றவற்றை உருவாக்கினார்கள். மழை பெய்யும் போது அந்த நீர் யாருக்கும் உபயோகப்படாமல் கடலில் சென்று கலக்க கூடாது, அதனை சேகரிக்க வேண்டும் என்று குளம், ஏரி, கால்வாய்களை அமைத்தனர்.
  • இப்படி குளம், ஆறு, ஏரி, குட்டைகள், ஊருணிகள், அணைகளில் நீர் சேமிக்கப்படுவதனால் நிலத்தடி நீர் மட்டமும் உயரும், நிலம் வறண்டு போவதும் தடுக்கப்படும்.

“குளம் தொட்டு காவு பதித்து வழி சீத்து உழம்தொட்டு
உழுவயல் ஆக்கி வளம்தொட்டு பாகுபடும் கிணற்றோடு
என்று இவை பார்படுத்தால் சொர்க்கம் இனிது” என்று சிறுபஞ்சமூலம் கூறுகிறது.

  • நமக்கு பசித்தால் சாப்பிடுவதற்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போன்று விவசாயம் செழிப்பாக இருக்க நீர் அவசியம்.

நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கான காரணம்: 

  • Neer Melanmai Katturai in Tamil: நீர் மாசடைவதாலும், ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதனாலும் நீரின் வளம் குறைந்து வருகிறது.
  • நீரின் தேவையை உணர்ந்த அரசர்கள் பல லட்ச கணக்கில் செலவு செய்து அணைகளை கட்டினார்கள். ஆனால் இப்பொழுது தண்ணீரை பற்றி கவலையில்லாமல் கட்டடங்களை கட்டி வருகின்றனர். இதனால் ஏரிகள், குளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் மழைக்காலங்களில் வெள்ளமும், கோடை காலத்தில் நீர் வறட்சியும் காணப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

நீரை சேகரிப்பதற்கான வழிகள்:

  • Neer Melanmai Katturai: நீர் மேலாண்மை அடைவதற்கு கிணறுகள், குளங்கள் போன்றவற்றை அமைத்து நீரை சேமிக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இருக்கின்ற குளங்கள், கால்வாய்களை பராமரிக்க வேண்டும். சிறு ஓடைகளில் குறுக்கே தடுப்பனைகள் கட்டி மழை நீரை சேமிக்கலாம்.
  • சில நாடுகள் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து நீர் மேலாண்மை செய்கின்றனர். மழை நீர் சேமிக்கப்பட்டாலே உலகில் உள்ள தண்ணீர் பஞ்சம் தீர்ந்துவிடும்.

முடிவுரை:

நீர் மேலாண்மை கட்டுரை: மற்ற நாடுகள் எல்லாம் நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்து மழை நீரை சேமிக்க ஆரம்பித்து விட்டன. நீரை சேமித்தால் தான் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற தண்ணீரை பின்னால் வரும் சந்ததியினருக்கு நாம் கொடுக்க முடியும். விவசாயமும், நம் சந்ததிகளும் நன்றாக வாழ்வதற்கு நீர் மேலாண்மை அவசியம்.

இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை  விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Tamil Katturai

 

Advertisement