புவி வெப்பமடைதல் கட்டுரை | Global Warming Essay in Tamil | Puvi Veppam Adaithal in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் இன்றைய பதிவு ஆனது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில் எண்ணற்ற மாசுபாடு பிரச்சனை ஆனது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அத்தகைய மாசுபாடுகள் அனைத்தினாலும் நாம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றோம் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இன்று புவி வெப்பமடைதலுக்கான கட்டுரை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் இந்த பதிவின் வாயிலாக புவி வெப்பமடைதலுக்கான கட்டுரையினை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
புவி வெப்பமடைதல் கட்டுரை | Global Warming in Tamil Essay | Puvi Veppamayamathal Katturai in Tamil:
குறிப்புச் சட்டகம்:
- முன்னுரை
- காலநிலை மாற்றம்
- புவி வெப்பமடைதல்
- புவி வெப்பமடைதலுக்கான காரணங்கள்
- விளைவு
- முடிவுரை
முன்னுரை:
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகம் ஆனது எவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கிறதோ அந்த அளவிற்கு மாசுபாட்டில் பின்னோக்கி செல்கிறது. இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி ஆனது நிறைய வகையான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
மேலும் புவிவெப்பமடைதல் என்பது வளிமண்டல அடுக்குகளின் மொத்த வெப்பநிலை ஆனது அதிகரிப்பதை குறிக்கிறது. இவ்வாறு வெப்பநிலை அதிகரிப்பால் பனி பாறைகள் அனைத்தும் மிக விரைவாக உருகும் நிலை ஏற்படுகிறது. புவி வெப்பமடைந்து இந்த சூழல் ஏற்படுவதால் நாம் நிறைய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
காலநிலை மாற்றம்:
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி ஆனது ஒவ்வொரு வருடமும் நிறைய வகையான கால நிலை மாற்றங்களை கொண்டிருக்கிறது. இவ்வாறு ஏற்படும் காலநிலை மாற்றங்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
அதாவது மக்கள் தொகையின் எண்ணிக்கை அதிகரிப்பால் அதற்கான தேவையினை பூர்த்தி செய்ய அதிகமான இயற்கை வளங்கள் தேவைப்படுகிறது.
இவ்வாறு இயற்கை வளங்கள் எடுத்து தயாரிக்கப்படும் தொழில்நுட்ப வளர்ச்சியால் கழிவுகளின் அளவு ஆனது மோசமாக இருக்கிறது. இதன் விளைவாக ஒவ்வொரு இடத்திலும் அதிகமான வெப்பநிலை, மழைப்பொழிவு, பனி பாறைகள் மற்றும் சூறாவளி என இதுபோன்ற காலநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது.
புவி வெப்பமடைதல்:
புவி வெப்பமடைதல் என்பது கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற வாயுக்கள் அதிகரிப்பதால் பூமியானது அதனுடைய இயல்பு நிலையில் இல்லாமல் வெப்பமடைகிறது. இத்தகைய நிலைக்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணமாக அமைகிறது.
இதன் படி பார்க்கும் போதும் 1950-ஆம் ஆண்டில் கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழ்கள் 6 பில்லியன் டன்களாகவும், 1990–ஆம் ஆண்டில் சுமார் 22 பில்லியன் டன்களாகவும் அதிகரித்து இருக்கிறது. ஆனால் தற்போது இத்தகைய உமிழ்கள் 35 பில்லியன் டன்களை தோராயமாக எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய கட்டுரை |
புவி வெப்பமடைதலுக்கான காரணங்கள்:
- காடுகளை அழித்தல்
- வாகனங்களில் இருந்து வெளிவரும்
- தொழிற்சாலைகளில் வெளிவரும் வாயுக்கள்
- நிலத்தில் மீத்தேன் எடுத்தல்
- எரிமலை வெடிப்பு
மேலே சொல்லப்பட்டுள்ள செயல்களை நாம் தெரிந்தோ அல்லது தெரியமலோ செய்வதன் விளைவாக நமக்கு கிடைத்து என்னவோ புவி வெப்பமடைவதற்கான விளைவுகள் தான். ஆகவே மேலே கூறியுள்ள பல்வேறு காரணங்களை தவிர்ப்பதன் மூலம் புவி வெப்பமடைதலை தவிர்க்கலாம்.
விளைவு:
- காடுகளில் ஏற்படும் தீ
- கடல் நீர் மட்டத்தின் அதிகரிப்பு
- பூமியின் மேற்பரப்பு வறட்சி அடைதல்
- மக்களின் வாழ்விடம் இழப்பு
- நோய்தொற்று அதிகரிப்பு
- வறுமை அதிகரித்தல்
- சூறாவளி அல்லது வெள்ளம்
மேலே சொல்லப்பட்டுள்ள பக்க விளைவுகள் இல்லாமல் இதர சில பின் விளைவுகளும் புவி வெப்பமடைவதால் ஏற்படுகிறது. நாம் நிறைய வகையான முன்னெச்சரிக்கையினை செய்தாலும் கூட பாதிப்புகள் உள்ளாகும் சூழல் ஏற்படலாம்.
உலக சுற்றுச்சூழல் தினம் கட்டுரை |
முடிவுரை:
புவி வெப்பமடைவதலை தவிர்க்க வேண்டும் என்றால் அதற்கு முதலாவதாக கார்பன்-டை-ஆக்ஸைடு வாயு அதிகமாக வெளிவருவதை தவிர்க்க வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல் மனிதர்களால் போதுமான அளவு தீங்கு ஏற்படுவதை நிறுத்த வேண்டும். எந்த விதமான ஆபத்தான சுழலும் ஏற்படாதவாறு முன்னெச்செரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.
குறிப்பாக மரங்களை அழிக்காமல் அதிகமாக மரம் வளர்க்க வேண்டும்.
இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Katturai |