திருக்குறள் கதை “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்”

Advertisement

திருக்குறள் கதைகள் 

தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை உலகப் பொதுமறை என்று அழைப்பது எவ்வளவு உகந்தது. திருக்குறள் காலத்தால் அழியாதது என்றும் வியந்து பாராட்டுகிறோம். வாழ்க்கை நெறிமுறைகளை கூறும் நூலாகவும் இன்னும் பல நூற்றாண்டு நிலைத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது அதற்கு திருக்குறளும் ஒரு காரணம். ஒட்டுமொத்த மனிதனின் சிந்தனையில் பிறந்த ஒரு நூலக என்றும் திருக்குறள் விளங்குகிறது.

குறள் சொல்லாத கருத்தேயில்லை என்னும் சொல்லும் அளவுக்கு 1330 குறள்களும் விளங்குகிறது. ஒவ்வொரு குறளும் கூறும் அர்த்தத்தை திருக்குறள் படித்து தெரிந்துக்கொள்ளும் அளவுக்கு இன்றைய குழந்தைகளுக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை, ஆனால் திருக்குறளை அனைவரும் தெரிந்ததுவைத்திருப்பது நல்லது. ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை கூறினால் கண்டிப்பாக குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.  அந்த வகையில் இன்று இன்னா செய்யாமை தலைப்பில் உள்ள குறள் 314 இன்னா செய்தாரை குறளுக்கான கதையை பார்ப்போம்.

thirukkural kathaigal in tamil

திருக்குறள் – 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

திருக்குறள் பொருள் :

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

திருக்குறள் கதைகள்:

காட்டுப்பகுதியில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. ஒருநாள் தண்ணீர் குடிக்க பக்கத்தில்  இருந்த குளத்திற்கு சென்றது.

அந்த குளத்தில் தண்ணீர் குறைவாக இருந்ததால் குளத்தின் நடுப்பகுதிக்கு சென்றது. அங்கு நிறைய சேறும் செகதியுமாக இருந்தது.

சிங்கத்திற்கு தாகம் அதிகமா இருந்ததால் அந்த செகதிய பொருட்படுத்தாமல்  தண்ணிர் குடிக்க இறங்கியது.

தண்ணிர் குடித்துவிட்டு திரும்பும் போது சிங்கத்தின் கால் சேற்றில் மாட்டிக்கொண்டது.

முன் யோசனை இல்லாமல் இறங்கியதால் இப்போது சிங்கம் சேற்றில் மாட்டிக்கொண்டது. தன்னுடைய பலத்தை கொண்டு அதில் இருந்து வெளியேற முயற்சித்தது. ஆனால் சிங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் தோல்விகளில் முடிந்தது.

சிங்கம் கடைசியில் யாரேனும் உதவிக்கு அழைக்கலாம் என்று எண்ணி சத்தமாக கத்த ஆரம்பித்தது. பக்கத்தில் யாரும் இல்லாததால் அதனை காப்பாற்ற யாரும் வரவில்லை இரண்டு நாட்கள் அந்த குளத்திலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இரண்டு நாட்கள் குளத்தில் இருந்ததால் பசியின் காரணமாக சிங்கம் சோர்ந்து காணப்பட்டது. அதனால் யாரையும் காத்தி கூப்பிடமுடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அந்த பக்கமாக ஒரு குள்ளநரி வந்தது. அந்த குள்ளநரி சிங்கத்தை பார்த்தவுடன் அதனை காப்பாற்ற வந்தது.செகதி அதிகமாக இருந்ததால் அதனால் தனியாக சிங்கத்தை காப்பாற்ற முடியவில்லை.

உடனே சிங்கத்திடம் நரி ” தான் சிங்கத்தை இழுப்பதாகவும் தனது பலத்தை பயன்படுத்தி சிங்கம் வெளியேற முயற்சிக்குமாறு கூறியது”.

நரியின் யோசனைக்கேட்டு சிங்கம் சேத்தில் இருந்து வெறியேறியது.

தன்னை கைப்பற்றிய நரியுடன் சிங்கம் நட்பு பாராட்டியது.

இருவரும் ஒன்றாக இணைத்து காடு முழுவதும் சுற்றிவந்தனர்.

ஒரு நாள் நரியின் மனைவி நரியிடம் “உங்கள் நண்பர் சிங்கத்திற்கு உங்களை பிடிக்கவில்லை என்று நம்மை காட்டை விட்டு செல்லும்மாறு சிங்கம் .”குள்ள நரியின் மனைவி கூறியது.

இதைக்கேட்ட அந்த குள்ளநரி யோசிக்க ஆரம்பித்தது. எந்த ஒன்றையும் தீர விசாரிக்குற பழக்கம் உடைய அந்த குள்ளநரி சிங்கத்திடம் இதை பற்றி கேட்டது.

சிங்கராஜா சிங்கராஜா நீங்கள் என்னை காட்டை போக  கூறியது உண்மையா என்று கேட்டது.

அதற்கு சிங்கம் தான் அப்படி சொல்லவே இல்லை, நான் சொன்னதாக யார் உனக்கு சொன்னது என்று கோபமா கேட்டது.

இத கேட்ட அந்த குள்ளநரி தன்னுடைய மனைவியிடம் வந்து நீ பொய்தானே சொன்னாய் என்று கேட்டது.

அதற்கு நரியின் மனைவி ஆமாம் என்று கூறியது.

தன் மனைவியை நினைத்து வருந்திய நரி சிங்கத்திடம் உண்மை கூறி மன்னிப்பு கேட்டது. இனி நமது நட்பை யாராலும் பிரிக்க முடியாது என்று கூறியது.

நீதி:

எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.

திருக்குறள் கதை “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண”

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story

 

Advertisement