திருக்குறள் நீதி கதை….

Advertisement

நீதிக்கதைகள் 

திருக்குறள்-138

“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.”

குறல் பொருள்:

நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

அதிகாரம்: ஒழுக்கமுடைமை

திருக்குறள் கதை:

ஒரு கிராமத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். அவனிடம் 2 வேலைக்காரர்கள் இருந்தனர். இருவரையும் செல்வந்தன் மிகவும் நம்பினர். தனது நம்பிக்கையின் பத்திரமாக இருவரும் விளங்குவார்கள் என்று அனைவரிடமும் கூறிவந்தார்.

ஒரு நாள் அந்த செல்வந்தனின் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும் போது அதன்  கையில் இருந்த பொன் வளையல் கழன்று கீழே விழுந்தது. அதனை இரு வேலைக்காரர்களும் பார்த்தனர். அதில் ஒருவனான சின்னையன் அந்த குழந்தையின் பொன் வளையலை எடுத்து மறைத்து வைத்தான். அதனை மற்ற ஒரு வேலைக்காரனாக கண்ணையன் பார்த்துக்கொண்டிருந்தான்.

குழந்தை கையில் இருந்த வளையல் காணாமல் போனதை சில நாட்களுக்கு பிறகு தான் செல்வந்தன் அறிந்தான். உடனே தனது வேலைக்காரர்களை அழைத்து, காண போன வளையலை எங்கேனும் கண்டீர்களா என்று கேட்டான்.

அதற்கு சின்னையன் ” தான் அதனை கண்டதே இல்லை ” என்று கூறினான். அதனையும் செல்வந்தன் நம்பினான்,

அடுத்தது கண்ணயனிடம் கேட்ட்டபோது அவன் சின்னயனை பார்த்து “அண்ணா! நல்லொழுக்கமாக நடந்துகொண்டால் மேலும் இன்பமாக இங்கேயே வாழலாம்; வீணாகப் பொய் சொல்லி மறைத்தால் இங்கும் வாழ முடியாது ; எங்கே சென்றாலும் பழிச்சொல் தான் நம்மை வந்து சேரும்; அவ்வித நீங்காத துன்பத்தை அனுபவிப் பதைவிட எடுத்து மறைத்துவைத்துள்ள பொருளை கொடுப்பது நல்லது”ன் என்று கூறினான்.

இதைக் கேட்டுப் சின்னையன் தான் மறைத்து வைத்திருந்த வளையலை எடுத்துவந்து செல்வந்தனிடம் கொடுத்து மன்னிப்பு வேண்டினான்.

தான் செய்த தவறை ஒப்புக்கொண்ட சின்னயனை மன்னித்துவிட்டார் செல்வந்தர்.

நீதி:

நல்லொழுக்கம் இன்பத்தையும், தீயொழுக்கம் துன்பத்தையும் உண்டாக்கும்.

திருக்குறள் கதை “சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை”

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story

 

 

Advertisement