யாசகனும் மன்னனும் திருக்குறள் கதை

Advertisement

திருக்குறள் கதைகள் 

தமிழின் தலையார்ந்த நூல் திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை உலகப் பொதுமறை என்று அழைப்பது எவ்வளவு உகந்தது. திருக்குறள் காலத்தால் அழியாதது என்றும் வியந்து பாராட்டுகிறோம். வாழ்க்கை நெறிமுறைகளை கூறும் நூலாகவும் இன்னும் பல நூற்றாண்டு நிலைத்து இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  தமிழினத்தின் பழம்பெரும் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பற்றி உலகம் வியக்கிறது அதற்கு திருக்குறளும் ஒரு காரணம். ஒட்டுமொத்த மனிதனின் சிந்தனையில் பிறந்த ஒரு நூலக என்றும் திருக்குறள் விளங்குகிறது.

குறள் சொல்லாத கருத்தேயில்லை என்னும் சொல்லும் அளவுக்கு 1330 குறள்களும் விளங்குகிறது. ஒவ்வொரு குறளும் கூறும் அர்த்தத்தை திருக்குறள் படித்து தெரிந்துக்கொள்ளும் அளவுக்கு இன்றைய குழந்தைகளுக்கு நேரமும் இல்லை பொறுமையும் இல்லை, ஆனால் திருக்குறளை அனைவரும் தெரிந்ததுவைத்திருப்பது நல்லது. ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை கூறினால் கண்டிப்பாக குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.  அந்த வகையில் இன்று இன்னா செய்யாமை தலைப்பில் உள்ள குறள் 314 இன்னா செய்தாரை குறளுக்கான கதையை பார்ப்போம்.

இரத்தலும் ஈதலே திருக்குறள் கதை:

திருக்குறள் – 1054

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

திருக்குறள் பொருள் :

உள்ளத்தை மறைத்து கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவனிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்குக் கொடுப்பதே போன்ற சிறப்பாகும்.

திருக்குறள் கதைகள்:

யாசகனும் மன்னனும் 

ஒரு கிராமத்தில் எங்கும் இருள் சூழ்ந்த இரவு நேரத்தில் தெருவில் மக்கள் நடமாட்டமில்லை. அனைத்து வீடுகளும் தாழ்பாள் போடப்பட்டிருந்தது. அப்போது ஒரு நாடோடி அந்த கிராமத்தில் நுழைந்து, அனைத்து வீட்டு கதவுகளையும் தட்டி ஒரு நாள் இரவு தங்க இடம் கேட்டான். ஆனால் யாரும் கதவை திறக்க வில்லை.

அவனுக்கு உதவிசெய்ய ஒரு நபரும் முன்வரவில்லை. கலைத்த நாடோடி கிராமத்திற்கு சிறிது தொலைவில் ஒரு குடிசை இருப்பதை கண்டு, அங்கு சென்று “ஐயா, நான் தங்குவதற்கு இடம் கிடைக்குமா ?” என்று கெஞ்சி கேட்டான்.

அப்போது உள்ளே இருந்து வெளியே வந்த ஒரு முதியவர். “ஐயா, உள்ளே வாருங்கள், நான் ஒரு யாசகன், எனது குடிசையில் ஒருவர் மட்டுமே உறங்க முடியும், அதனால் நீங்கள் உள்ளே உறங்குங்கள், நான் வெளியே உறங்குகின்றேன். நீங்கள் அச்சமின்றி உறங்குங்கள் ” என்று கூறிவிட்டு குடிசைக்கு வெளியே வந்து படுத்துகொண்டான் குடிசையின் சொந்தக்காரன்.

இருவரும் படுத்து உறங்கினர்.  அதிகாலையில் எழுந்த யாசகன் தனது விருந்தாளியான நாடோடியே காண குடிசைக்குள் சென்றான்.

அங்கு நாடோடி இல்லாமல் அவர் படுத்திருந்த இடத்தில் ஒரு கடிதம் இருந்தது. அதில்” ஐயா, எனக்கு யாரும் இடம்கொடுக்காதபோது அன்போடு நீங்கள் உங்கள் இல்லத்தில் எனக்கு இடமளித்திர்கள். உங்கள் இரக்கம் கொண்ட உள்ளத்தை கொண்டு பாராட்டுகின்றேன். நீங்கள் இந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு காலையில் என்னை வந்து பாருங்கள். இப்படிக்கு இந்நாட்டு மன்னன்.” என்று மன்னன் முத்திரையிட்டு கடிதத்தை எடுத்துக்கொண்டு யாசகன் அரசவை சென்றான்.

யாசகனை கண்ட மன்னன் அவரின் கருணை உள்ளத்தை கட்டி தழுவி பாராட்டினர். பாராட்டியது மட்டும் அல்லாது அவருக்கு விலைமதிப்பில்லாத பரிசுகளையும் வழங்கினார்.

திருக்குறள் கதை “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்”

இதுபோன்று தமிழில் கதைகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil story

 

Advertisement