Forget Fingerprints Or Face Recognition
இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். இதில் லாக் செய்யும் வசதி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்தது. இந்த லாக் செய்யும் வசதி பலவை இருக்கிறது. அதில் ஒன்றான நம்பர்ஸ் போட்டு லாக் செய்வது, கைரேகை மூலம் லாக் செய்வது, நமது முகத்தை காட்டி லாக் செய்வது என்று வெவ்வேறு இருக்கிறது. இவை ஒவ்வொருவருக்கும் பிடித்தமானதை தேர்வு செய்து லாக் செட் செய்து கொள்கிறார்கள். இதில் அடுத்த கட்ட வளர்ச்சியாக மூச்சு காற்றை வைத்து லாக் செய்யும் வசதியை சோதனை செய்து வருகிறது, இதனை பற்றி காண்போம்.
Soon Your Breath Can Be Used To Unlock Smartphones
ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள் மனிதர்களின் மூச்சு காற்றை பயன்படுத்தி பயோமெட்ரிக்காக பயன்படுத்த முடியும் எனக் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவத்துறை, தொழில்நுட்பத் துறை போன்ற பல துறைகளில் பல புதுமையான விஷயங்களை செய்ய முடியும் என்கின்றனர்.
February 29-கு பிறகு வழக்கம் போல் தொடங்கும் PAYTM சேவை
மெட்ராஸ் ஐஐடியில் உள்ள அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் பேராசிரியர் மகேஷ் பஞ்சகுனுலா தலைமையிலான ஆய்வுக் குழு, மனித மூச்சைப் பயன்படுத்தி ஒரு தனித்துவமான கையொப்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. தொழில்நுட்பம் நடைமுறை பயன்பாடுகளாக உருவாக்கப்படும்போது, அது மருத்துவத் துறையிலும், செல்போன் துறையிலும் மற்றும் மனித சுவாசத்தின் தகவல்களை வைத்து கொண்டு பயோமெட்ரிக் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படலாம்.
முக்கியமாக இதனை வைத்து ஸ்மார்ட்போன்க்ளில் அன்லாக் செய்வதற்கு எப்படி கைரேகையை பயன்படுத்துகிறமோ அதே போல மனிதர்களின் மூச்சு காற்றையும் பயன்படுத்தலாம்.
மனிதர்களின் நுரையீரலில் இருந்து வெளியேறும் மூச்சு காற்றானது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். வெளியேற்றும் மூச்சு காற்றானது, அல்காரிதமாக மாற்றம் செய்யப்பட்டு, பிறகு அவர்களின் அடையாளமாக மாற்றப்படும். 94 நபர்களின் சுவாச மாதிரிகளை சோதனை செய்வதற்கு ஆய்வாளர்கள் பயன்படுத்திதினார்கள். இதில் பயோமெட்ரிக் ஆனது 97% துல்லியமாக அல்காரிதம்களை உருவாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |