இனிமேல் Google-லில் எதையும் தேட வேண்டாம்.! வட்டம் போட்டால் மட்டும் போதும்..

Advertisement

Google Circle Search Feature

நம் முன்னோர்களின் காலத்தில் எதையாவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் புத்தகம் படித்தார்கள்மற்றும் dicitiory-யை படித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் புத்தகம் யாரும் படிப்பதில்லை, ஸ்மார்ட் போன் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதிலேயே தெரியாதவற்றை தெரிந்து கொள்கிறார்கள்.

இந்த ஸ்மார்ட் போனில் Google தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு 8 பில்லியனுக்கும் அதிகமாக பிராசஸ் செய்யப்பட்டு ஒரு நொடிக்கு 1 லட்சத்திற்கும் அதிகமான சர்ச்சஸ் நடைபெறுகிறது. மக்களிடம் பிரபலமாக உள்ளதால் இதில் புதிய அம்சம் வந்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

Google-ன் புதிய அம்சம்:

இதுவரை நீங்கள் எதையாவது தேட வேண்டுமென்றால் Google-லில் டைப் செய்து சர்ச் செய்ய வேண்டும். அதன் பிறகு நாளடைவில் Google lens அறிமுகம் செய்யப்பட்டது, இதன் மூலம் போட்டோவை வைத்து தேடுவதற்கு உதவியாக இருந்தது. இந்த மாசம் மட்டுமில்லாமல் இப்போது அனைவரும் Google-யை பயன்படுத்த வேண்டும் என்பதால் ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய அம்சமானது நீங்கள் எதையாவது Google-லில் சர்ச் செய்ய வேண்டுமென்றால் டைப் செய்ய தேவையில்லை, அதற்கு பதிலாக வட்டமிட்டு காண்பித்தாலே அது என்ன என்பதை Google காண்பித்து விடும்.

Google Map-க்கு நிகரான ஒரு சூப்பரான Govt App

How to use the Circle to Search feature:

How to use the Circle to Search feature

நீங்கள் எதை சர்ச் செய்ய வேண்டும் அதை உங்கள் போனில் டெக்ஸ்ட் அல்லது இமேஜ், வீடியோ போன்று எதை தேட வேண்டுமோ அதனை எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு உங்களுடைய போனில் ஹோம் பட்டனை லாங் பிரஷ் செய்ய வேண்டும். இதன் மூலம் Circle to Search அம்சம் ஆக்டிவேட் ஆகிவிடும்.

இப்போது டிஸ்ப்ளேவில் தெரிவதை வடம்மிட்டு காட்டினாலே அவை என்னவென்று Google கண்டுபிடித்துவிடும். இவை முழுக்க முழுக்க AI தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது.

இதில் இந்த வசதி இருக்கிறது:

இந்த Circle to Search வசதியானது முதல்முறையாக சமீபத்தில் வெளியான சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்துள்ளனர். மேலும் இந்த அம்சத்தை ஜனவரி 31-ம் தேதி முதல் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 4 போன்றவற்றிழும் இந்த வசதி கிடைக்கும். இந்த ஆண்டின் இறுதிக்குள் மற்ற பிரிமியம் ரக ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த வசதி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link

 

 

Advertisement