ஸ்கிரீன் லாக்
இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதில் ஸ்கிரீன் லாக் போடாமல் யாரும் இல்லை. ஸ்கிரீன் லாக் மற்றும் ஒவ்வொரு ஆப்பிற்கும் லாக் போட்டு வைத்து கொள்கிறார்கள். தங்களின் தகவல்களை யாரும் திருட கூடாது என்பதற்காக லாக் போட்டு கொள்கிறார்கள். இதில் யாருக்கும் தெரியாத ட்ரிக்ஸை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
Add Emergency Contact to Lock Screen:
சில நேரங்களில் நாம் ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க நேரிடும். அதாவது நீங்கள் ரோட்டில் நடந்து செல்கிறீர்கள் அப்போது மயக்கம் வருகின்றது அதனால் கீழ விழுந்து விடுகிறீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது உங்களை சுற்றி உள்ளவர்கள் ஓடி வந்து உங்களுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பி விடுகிறார்கள். அதன் பிறகு உங்களின் மொபைலில் காண்டாக்ட் ஹிஸ்டரி சென்று அதில் ஒரு நம்பரை கால் செய்து இது மாதிரி உங்களுக்கு தெரிந்தவர்கள் கீழே விழுந்து கிடைக்கிறார் என்ற தகவலை கூறி வர சொல்லுவோம். இவை பட்டன் போனாக இருந்தால் காண்டாக்டை எடுத்து விடுவோம். ஆனால் இப்போது எல்லாம் ஸ்மார்ட் போன் ஆகிவிட்டது. அதில் ஸ்கிரீன் லாக் போட்டு வைத்திருக்கிறார்கள் எப்படி தொடர்பு கொள்வது என்ற சந்தேகம் வரும். அதனால் தான் இந்த பதிவில் ஸ்கிரீன் லாக் போட்டு வைத்திருந்தாலும் எப்படி உறவினரிடம் தொடர்பு கொள்வது பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
இனிமேல் Google-லில் எதையும் தேட வேண்டாம்.! வட்டம் போட்டால் மட்டும் போதும்..
How to Add Emergency Contact on Android Phone in Tamil
முதலில் உங்கள் போனில் settings பகுதிக்கு செல்ல வேண்டும், அதில் Emergency Contact என்று சர்ச் செய்ய வேண்டும்.
Emergency Contact சர்ச் செய்ததும் ஒரு பக்கம் திறக்கும் அதில் இரண்டாவதாக Emergency Contacts என்று இருக்கும் அதை கிளிக் செய்து நீங்கள் யாரெல்லாம் இதில் இணைக்க விரும்புகிறீர்களோ அவர்களுடைய காண்டாக்ட்யை செலக்ட் செய்ய வேண்டும்.
காண்டாக்ட்யை செலக்ட் செய்து OK கொடுக்க வேண்டும். இதன் மூலம் நீங்கள் ஸ்கிரீன் லாக் போட்டு வைத்திருந்தாலும் உங்களின் உறவினர்களுக்கு கால் செய்ய முடியும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |