வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் ஆன்லைனில் செய்வது எப்படி?

Advertisement

How to Change Voter id Address Online

நம்முடைய வாழ்க்கையில் ஆதார், வாக்காளர் அட்டை , குடும்ப அட்டை போன்றவை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆவணங்களை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியமானது. அதாவது இதில் பெயர்கள், முகவரி, பிறந்த தேதி போன்றவை சரியாக உள்ளதா என்பதை பார்த்து அதனை சரியாக வைத்திருப்பது அவசியமானது. இதனை சாதாரண நாட்களில் பார்க்க மாட்டார்கள். தேர்தல் நேரம் வந்தால் தான் வாக்காளர் அட்டையில் எல்லாம் சரியாக உள்ளதா என்று கவனிப்பார்கள். அந்த வகையில் வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றுவது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

Voter id Address:

முதலில் voters.eci.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். பின் இதனை Login செய்ய வேண்டியிருக்கும். அதற்கு மேலே Login என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மொபைல் நம்பர் மற்றும் Password பதிவிட வேண்டும். அதன் கீழே captcha இருக்கும் அதனை பதிவிட வேண்டும். இவை செய்த பிறகு உங்களுக்கென்று user name மற்றும் Password இரண்டையும் Save செய்து வைக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி

அதன் பிறகு இந்த வலைத்தளத்தில் நிறைய ஆப்ஷன்கள் இருக்கும் அதில் Fill Form 8 இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Application type இரண்டு வரும், அதாவது self மற்றும் Other elector என்று வரும். அதில் எதை choose செய்ய வேண்டுமோ அதனை choose செய்து கொள்ளுங்கள்.

பின் அதில் Voter id நம்பர் கொடுத்து Submit கொடுக்க வேண்டும். அதன் பிறகு இரண்டாவதாக இருக்கும் Correction of entries in existing roll கிளிக் செய்து ok கொடுக்க வேண்டும்.

பிறகு Form 8 என்ற பக்க ஓபன் ஆகும். அதில் Address என்பதை கிளிக் செய்து பெயர், தெரு மற்றும் முகவரி, மாநிலம், தொகுதி மற்றும் உங்கள் புதிய முகவரி போன்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

பிறகு இதில் ஏதாவது Document பதிவேற்றம் செய்து next என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Captcha fill செய்து Preview and Sumbit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு நீங்கள் Correction செய்தவை எல்லாம் Form வடிவத்தில் வரும், அவை எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும். சரியாக இல்லையென்றால் back கொடுத்து அதனை சரி செய்து விட்டு submit என்று கொடுக்க வேண்டும்.

Reference Number ஜென்ரேட் ஆகும், அதனை நோட் செய்து வைத்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இதன் மூலம் உங்களின் வோட்டர் ஐடியின் ஸ்டேட்டஸ் பார்த்து கொள்ள முடியும்.

How to Track Voter id Card Status:

மேல் கூறப்பட்டுள்ள வலைத்தளத்தில் Track application status என்ற ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்து Reference நம்பர் மற்றும் மாநிலம் போன்றவை  பதிவிட்டு submit கொடுக்க வேண்டும். அதன் பிறகு உங்களுடைய வாக்காளர் அட்டை என்ன ஸ்டேட்டஸில் இருக்கிறது என்பது தெரியும்.

Voter ID Card ஆன்லைனில் Download செய்வது எப்படி

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉
Link 

 

Advertisement