Best Way to Check IMEI Number in Tamil
நம் அனைவருக்கும் இந்த நவீன காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதாவது, அனைத்தையும் எளிமையாக்கும் வகையில் உலகம் முன்னேற்றம் அடைந்து வருகிறது. நம் கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் இருந்தே இடத்தியிலே நமக்கு தேவையான அணைத்தையும் செய்து விடலாம். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டு வருகிறது.
இக்காலத்தில் அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்படுவது ஸ்மார்ட் போன் தான். ஸ்மார்ட் போனில் பல அம்சங்கள் உள்ளது. அதில் ஒன்றினை பற்றி இப்பதிவில் பார்ப்போம். அதாவது, போனின் IMEI நம்பரை கண்டுபிடிப்பது எப்படி.? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக போன் காணாமல் போய்விட்டால் உங்கள் போனின் IMEI தெரியுமா என்று பலபேர் கேட்டு இருப்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். அதனால், போனின் IMEI நம்பரை தெரிந்து கொள்வது அவசியம். ஆகையால், உங்கள் போனின் IMEI நம்பரை எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
IMEI என்றால் என்ன.?
IMEI என்பது International Mobile Equipment Identity ஆகும். இது 15 இலக்க எண்களுடன் இருக்கும். உங்கள் மொபைல் ஆனது எந்த நாட்டைச் சேர்ந்த தயாரிப்பு என்பதையும் எந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளது என்பதை கண்டறியவும் உதவும் எண்ணாகும். IMEI நம்பரை பயன்படுத்தி காணாமல் போன செல்போன் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கண்டறிய பயன்படுகிறது.
How to Find IMEI Number in Phone in Tamil:
முறை 1:
போனின் IMEI நம்பரை கண்டறிவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. அதாவது, SETTING மூலமாகவும் மற்றும் கால் செய்தும் உங்கள் போனின் IMEI கண்டறியலாம். அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.
உங்கள் போனில் போன் ஆப்ஷனை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் *#06# என்ற நம்பரை டைப் செய்து கால் செய்தால் உங்கள் போனுக்கான IMEI நம்பர் உட்பட பல நம்பர்கள் காண்பிக்கப்படும். அதனை பார்த்து உங்கள் IMEI நம்பரை தெரிந்து கொள்ளலாம்.
முறை 2:
உங்கள் போனை ஆன் செய்து SETTING ஆப்சனுக்கு செல்ல வேண்டும். அதில் About Phone என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு, About Phone பேஜில் கீழே SCROLL செய்தால் IMEI நம்பர் இருக்கும். அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அல்லது இந்த ஆப்சன் இல்லையென்றால் பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.
2023-ல 7 கோடி மக்களின் Whatsapp Account-ஐ Ban பண்ண இது தான் காரணமா?
முறை 3:
உங்கள் போனை ஆன் செய்து SETTING ஆப்சனுக்கு செல்ல வேண்டும். அதில் About Phone என்பதை கிளிக் செய்யவும். அதில் ALL SPECS என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கீழே SCROLL செய்தால் STATUS என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து கீழே SCROLL செய்தால் IMEI நம்பர் இருக்கும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |