Upload High Quality Image on Instagram
ஸ்மார்ட்போன் தான் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துகிறார்கள். இதில் வீடியோ மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறர்கள். அப்படி பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் வாட்சப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளது. இதை;ல் அன்றாட நிகழ்வுகளை போஸ்ட் மற்றும் ஸ்டோரி மூலம் பகிறுகிறார்கள். இதனால் இன்ஸ்டாகிராம் பிரபலமாக இருக்கிறது. இதில் பகிரப்படும் போட்டோவின் தரம் குறைவாக தான் இருக்கிறது. போட்டோவின் தரத்தை உயர்த்துவதற்காக பல ஆப்களை இன்ஸ்டால் செய்து போட்டோவின் தரத்தை உயர்த்துகிறார்கள். எந்த வித ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமல் போட்டோவை தரமாக போஸ்ட் செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
Upload High Quality Image on Instagram:
போன் கேமராவில் போட்டோ எடுக்கும் போது தரமாக தான் இருந்திருக்கும். ஆனால் அதனை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடும் போது அதனின் தரம் குறைவாக காணப்படும். இதனை நீங்கள் போட்டோ எடிட் ஆப் மூலம் எடிட் செய்து போட்டோவை அப்லோடு செய்வார்கள். இப்படி செய்தாலும் எடிட் செய்த போட்டோ என்று வெளிப்படையாக தெரியும். அதனால் இந்த பதிவில் உள்ள செட்டிங்ஸ்யை ஆன் செய்வதன் மூலம் போட்டோவை தரம போஸ்ட் செய்யலாம்.
இளைஞர்களே உஷார்! Instagram-ன் நைட் டைம் ரீல்ஸ், மேசேஜ்-கு இனி ஆப்பு
முதலில் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து கொள்ள வேண்டும், பின் அதில் உங்கள் Profile-யை கிளிக் செய்யவேண்டும்.
பின் அதில் வலது பக்கத்தில் இருக்கும் மூன்று கோடுகளை கிளிக் செய்து Settings and Privacy என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Media Quality என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு இதில் இருக்கும் ஆப்ஷன்களில் இரண்டாவதாக Upload at the Highest Quality என்ற ஆப்ஷனைஆனில் வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு இதனை close செய்துவிட வேண்டும்.
அதற்கு பிறகு நீங்கள் இன்ஸ்டாகிராமில் போட்டோ அப்லோடு செய்தால் அதன் தரம் குறைவாக இருக்கும். இதனை ஆனில் வைத்திருப்பதால் உங்கள் போனில் உள்ள டேட்டா வீணாகலாம். அதனால் நீங்கள் போட்டோ அப்லோடு செய்யும் போதும் மட்டும் இதனை ஆனில் வைத்து கொள்ள வேண்டும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉 |
Link |