இளைஞர்களே உஷார்! Instagram-ன் நைட் டைம் ரீல்ஸ், மேசேஜ்-கு இனி ஆப்பு

Advertisement

Night Time Nudge for Teens on Instagram

இளைஞர்களின் நலன் கருதி மெட்டா நிறுவனம் Instagram-ற்கு புதிய ரூல்ஸ் கொண்டுவந்துள்ளது. இந்த ரூல்ஸ் எதற்காக கொண்டுவரப்பட்டதென்றால் Facebook மற்றும் Instagram-ல் இரவு நேரத்தில் அதிக நேரம் செலவிடும் இளைஞர்களை கட்டுப்படுத்தும் வகையில் மெட்டா நிறுவனம் நைட் டைம் நட்ஜ் செயல்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகள் கூட இப்போதெல்லாம் மொபைல் பார்க்காமல் இருப்பதில்லை, முக்கியமாக அவர்களுக்காகத்தான் இந்த Nudge option. சில பெற்றோர்களும் அவர்களை சமாதானம் படுத்த மொபைலை கொடுத்து விடுகிறார்கள், ஆனால் அவர்களிடம் இருந்து அந்த மொபைல்-ஐ திரும்ப பெறுவது என்பது சற்றே கடினமாகும். 

குழந்தைகளுக்கே இப்படி என்றால் முழுவதுமாக மொபைலில் மூழ்கி இருக்கும் இளைஞர்களை நினைத்து பாருங்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் Instagram-ல் கொண்டுவரப்பட்டது இந்த “Nudge”, இதனுடைய செயல்பாட்டை இந்த பதிவை படித்து முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள்.

Night Time Nudge for Instagram in Tamil

Night Time Nudge for Instagram in Tamil

டீன் ஏஜ் கணக்குகளுக்கான புதிய நள்ளிரவு நட்ஜ்களை (Night Time Nudge) இன்ஸ்டாகிராம் வெளியிடுகிறது என்று நிறுவனம் வியாழக்கிழமை வெளிப்படுத்தியது. இளம் வயதினர் இரவு நேரங்களில் இன்ஸ்டாகிராமில் பத்து நிமிடங்களுக்கு மேல் ரீல்ஸ் அல்லது மேசேஜ் போன்றவற்றிற்கு செலவிட்டால் அவர்களுக்கு நட்ஜ்கள் தோன்றும். Nudge என்பது ஒருவரை புஷ் செய்து ஒரு விஷயத்தை செய்ய தூண்டுவதாகும்.

நீங்கள் நிறைய நேரம் இன்ஸ்டாகிராமில் உங்களது நேரத்தை செலவிட்டீர்கள் என்றால் எச்சரிக்கையின் மூலம் நினைவூட்டப்படுவார்கள், மேலும் பயன்பாட்டை நிறுத்திவிட்டு படுக்கைக்குச் செல்லும்படி ஊக்குவிக்கப்படுவார்கள்.

Instagram Nudge Option Time 

இனி டீன் ஏஜ் பருவத்தினர் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தை மீறி இன்ஸ்டாகிராமை பயன்படுத்தினால் “Time for a break” அல்லது அதனை தொடர்ந்து “It’s getting late. Consider closing Instagram for the night” என்று வந்து கொண்டே இருக்கும். இது இளைஞர்களுக்கு தேவைப்படும் முக்கியமான அம்சமாகும். பொதுவாக டீன் ஏஜ் பருவத்தினர் அதிக நேரம் மொபைல் பார்ப்பது இரவு நேரங்களில் தான், இந்த option மூலம் அவர்கள் இரவு நேரங்களில் சற்று சீக்கிரமாகவே தூங்கி விடுவார்கள் என்று நம்புவோம்.

டீன் ஏஜ் பருவத்தினர், “தாமதமாகிறது” என்று எழுதப்பட்ட எச்சரிக்கையைப் பார்க்கத் தொடங்குவார்கள், அதைத் தொடர்ந்து “இடைவேளைக்கான நேரம்?” மாலையில் Instagram ஐ மூடுவது பற்றி யோசி. ஒரு மின்னஞ்சலில், சமூக வலைப்பின்னல் டெக் க்ரஞ்சிற்குத் தெரிவித்தது, நட்ஜ்கள் இரவு 10 மணிக்குப் பிறகு நடைமுறைக்கு வரும். நள்ளிரவு நட்ஜ்களை பார்க்க வேண்டுமா என்பதை பதின்வயதினர் தேர்வு செய்ய முடியாது, ஏனெனில் அவை எப்போதும் காட்டப்படும் மற்றும் அணைக்க முடியாது. பதின்வயதினர், நிச்சயமாக, தூண்டுதலைப் புறக்கணித்து, நிரலைப் பயன்படுத்துவதைத் தேர்வுசெய்யலாம்.

Instagram Story-ய இவ்ளோ ஈஸியா Hide பண்ணலாமா?

How to Off Nudge Option on Instagram in Tamil

இந்த Nudge option செயல்படுத்திய உடன் டீன் ஏஜ் பருவத்தினர் மிக அதிகமாக தேடுவது  Instagram-ன் Nudge Option-ஐ off செய்வது எப்படி? (Instagram Nudge Option off seivathu eppadi) என்பதை பற்றி தான்.

உங்களுக்கு இந்த Nudge Option-ஐ off செய்வது எப்படி என்று தெரியவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை சற்று பொறுமையாக படியுங்கள்.

ஏற்கனவே இன்ஸ்டாகிராமின் பயன்பாட்டில் “டேக் எ பிரேக்” அம்சம் உள்ளது, அதனால் அவர்களால் இதனை Turn Off செய்ய முடியாது. வேண்டுமானால் அதனை நிராகரித்து தொடர்ந்து பயன்படுத்தலாம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link
Advertisement