ஆதார் கார்டுக்கு பதிலாக அனைத்து இடங்களிலும் இந்த கார்ட பயன்படுத்திக்கலாம்.. அது என்ன கார்டு தெரியுமா..?

Advertisement

Masked Aadhaar Card Details in Tamil

நமது இந்திய நாடானது பலவகையில் மற்றும் பல துறைகளில் பல்வேறு வளர்ச்சிகளை அடைந்து கொண்டே தான் உள்ளது. அப்படி நமது நாடு பல வளர்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கும் பொழுது நமது நாட்டில் உள்ள மக்கள் மிகவும் பாதுகாப்பான வாழ்க்கை வாழ்வதற்கு உதவும் வகையில் நமது இந்திய நாட்டின் அரசானது பலவகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அப்படி எடுக்கப்பட்ட பலவகையான முயற்சிகளில் ஒன்று தான் நமது நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் கார்டை அளித்தது.

நமது நாட்டில் இந்த ஆதார் அட்டை அறிமுகம் ஆன பிறகு நமது பல பரிவர்த்தனைகள் மிகவும் எளிமையாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட மிகவும் முக்கியமான ஆதார் அட்டையை யாரேனும் தவறாக பயன்படுத்தினால் அது நமக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்து என்பது உண்மை. அதிலிருந்து நாம் தப்பிக்க உதவும் ஒரு வலியினை பற்றி தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம் அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மாஸ்க் ஆதார் கார்டு என்றால் என்ன..?

Masked aadhaar card benefits in tamil

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமானது என்பதும் அனைவருக்கும் 12 இலக்க ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது என்பது தெரிந்த ஒன்று தான்.

இந்த ஆதார் அட்டையானது ரேஷன் கார்டு, வங்கி கணக்கு, பான் அட்டை உள்பட அனைத்திலும் இணைக்கபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஆதார் அட்டையை யாரேனும் தவறாக பயன்படுத்தி விடாமல் இருப்பதற்காக சில பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.

அப்படி செய்யப்பட்டுள்ள பல பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒன்று தான் இந்த மாஸ்க் ஆதார் கார்டு. பொதுவாக ஆதார் அட்டையில் உள்ள 12 இலக்க எண் தான் மிகவும் முக்கியமான ஒன்று ஆகும். அதனால் தான் 12 இலக்க முழு எண்களையும் எந்த நிறுவனத்திலும் பகிர்ந்து பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக ஆதார் அட்டையில் உள்ள கடைசி 4 இலக்கங்களை மட்டும் பதிவு செய்தால் போதும் என்று அறிவிப்பு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI ) மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் MOBILE எண் மாற்றம் செய்வது எப்படி

பாதுகாக்கும் முறை:

இந்த மாஸ்க் ஆதார் அட்டை முதல் 8 எண்களை மறைத்து கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டுவதால் பாதுகாப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. முதல் எட்டு எண்களுக்கு பதிலாக xxxx xxxx போன்ற குறியீடுகள் மட்டும் இருக்கும் என்பதும் கடைசி நான்கு இலக்க எண்கள் மட்டுமே வெளியே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டை பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் பெயரின் முதல் நான்கு எழுத்துக்கள் கேபிடல் எழுத்துக்களிலும், பிறந்த ஆண்டையும் பதிவு செய்வதன் மூலம் PDF மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையை ஓப்பன் செய்து பார்க்கலாம்.

மாஸ்க் ஆதார் கார்டு டவுன்லோடு செய்முறை:

மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் அட்டையை UIDAI வலைத்தளம் மூலம் டவுன்லோடு செய்ய வேண்டும்.

எனவே myaadhaar.uidai.gov.in க்குச் சென்று ‘Login’ செய்ய வேண்டும். அதன் பின் உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை கொடுத்த பிறகு , ஓடிபி என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

இதனையடுத்து உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த ஓடிபியை பதிவு செய்து லாகின் செய்த பிறகு “Services” என்ற ஆப்சனை கிளிக் செய்து அதில் “Download Aadhaar” என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அதன்பின் Review your Demographics Data என்ற பிரிவின் கீழ் உள்ள ‘Do you want a masked Aadhaar?’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு டவுன்லோடு என்பதை கிளிக் செய்தால் புதிய மாஸ்க்ட் ஆதார் கார்டை டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த ஆதார் அட்டை நமக்கு PDF வடிவத்தில் கிடைத்துவிடும்.

அந்த PDF-யை நீங்கள் பாஸ்வேர்டு மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.

புதிய விதிமுறை ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement