2023-ல் தங்களது அடையாளத்தை நிலைநிறுத்திய டாப்-5 AI சாட்போட்கள்..!

Advertisement

Top 5 Popular AI Chatbots in Tamil

இன்றைய சூழலில் நமது உலகம் ஆனது பல துறைகளில் மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கின்றது. அதேபோல் போல் தான் தொழில்நுட்ப துறையிலும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கின்றது. அப்படி தொழில்நுட்ப துறையின் மிகவும் முக்கியமான வளர்ச்சி என்றால் செயற்கை நுண்ணறிவு (AI) தான். அதாவது இந்த AI ஆனது எதிர்காலத்தில் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு புதிய முயற்சி ஆகும்.

அதேபோல் இந்த AI-ன் மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான வளர்ச்சி என்றால் அது AI சாட்போட்கள் தான் இவை மக்களின் மனதில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது. இந்த சாட்போட்கள் மக்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் துல்லியமான பதிலை அளிக்கும். இப்படிப்பட்ட சிறப்புடைய AI சாட்போட்களில் டாப் 5 இடத்தில உள்ள AI சாட்போட்கள் பற்றிய முழுவிவரங்களையும் இன்றைய பதிவில் காணலாம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Top 5 Best AI Chatbots in Tamil:

Top 5 Best AI Chatbots in Tamil

ChatGPT:

இந்த பட்டியலில் ChatGPT ஆனது முதலிடத்தில் உள்ளது. இந்த ChatGPT ஆனது மனித அளவிலான செயல்திறனை வழங்குவதன் மூலம் அதன் திறனைக் காட்டுகிறது. அதேபோல் இதன் துல்லியமான பதில்களின் மூலம் மக்களின் மனதில் மிகவும் ஆழமான இடத்தை பிடித்துள்ளது.

அதாவது இது பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் துல்லியமான பதில்களை அளிக்கின்றது. இதுவே இதன் வெற்றிக்கான காரணம் ஆகும்.

Bing Chat:

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில உள்ளது Bing Chat ஆகும். இந்த Bing Chat ஆனது AI சாட்போட் தேடுபொறி Bing இல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இது எட்ஜ் உலாவியிலும் கிடைக்கிறது. மேலும் இது ஒரு அசல் தன்மையைக் கொடுக்கிறது, இது பாடல்கள் மற்றும் பிற காட்சி கூறுகளை கலவையை அளிக்கிறது.

எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam

Google Bard AI:

அடுத்து நமது பட்டியலில் இடம்பெற்றுள்ளது Google Bard AI தான். இதுவும் மக்களின் கேள்விகளுக்கு துல்லியமான மற்றும் வேகமான முறையில் பதில்களை அளிக்கின்றது. இதனால் இந்த Google Bard AI-ம் மக்களின் மனதில் இடம் பெற்றுள்ளது.

Grok AI:

ட்விட்டர் அல்லது எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தக்காரரான எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமானது தான் இந்த Grok AI ஆகும். எலோன் மஸ்க் இதனை பற்றி கூறுகையில் மற்ற பிரபலமான சாட்போட்கள் பதிலளிக்காமல் தவிர்க்கும் காரமான கேள்விகளுக்கு கூட இந்த  Grok AI அளிக்கும் என்று கூறினார்.

DALL-E 3:

இந்த DALL-E 3 ஆனது AI இன் உலகில் மற்றொரு முக்கிய வளர்ச்சி ஆகும். இது OpenAI ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது. DALL-E 3 என்பது டெக்ஸ்ட்-டு-இமேஜ் உருவாக்கும் AI மென்பொருளாகும். மேலும் இதனால் சிக்கலான தூண்டுதல்களிலிருந்து காட்சிகளை உருவாக்க முடியும்.

இனி வாட்ஸ் அப் வெப்பிலும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement