என்ன இலவச Whatsapp Chat Backups 2024-ல் முடிவடைகிறதா?

Advertisement

2024-ல் முடியும் Whatsapp-ன் இலவச Chat Backups!

ஒவ்வொரு மாதமும் ஏன் ஒவ்வொரு நாளிலும் கூட WhatsApp தளமானது மேம்பாட்டுதான் வருகிறது. நாள்தோறும் நிறையவிதமான WhatsApp ரூல்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம். அதில் மிகமுக்கியமான ஒன்று தான் இந்த Chat Backups. இதை நாம் எதற்காக பயன்படுத்திறோம் என்றால் இது உங்களது அரட்டை வரலாற்றின் ஒரு நகலாகும். உங்கள் மொபைலை இழந்தால், புதிய மொபைலுக்கு மாறினால் அல்லது பயன்பாட்டை மீண்டும் நிறுவினால் அதை மீட்டெடுக்க இந்த Chat Backups-ஆனது உதவுகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில், கூகுள் டிரைவின் வரம்பற்ற chat backups அம்சத்தை ஆதரிப்பதை விரைவில் நிறுத்துவதாக கூகுள் மற்றும் வாட்ஸ்அப் தெரிவித்தன. கூகுளின் கூற்றுப்படி, டிசம்பர் 2023 இல் WhatsApp பீட்டாவின் பயனர்கள் மாற்றங்களைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்கள். நீங்கள் உங்களது WhatsApp-ல் அரட்டைகள் அனைத்தையும் Google Drive-வில் மிக எளிதாக backups எடுத்துவிடுவார்கள். இப்பொழுது அதுக்கும் சில கோட்பாடுகள் வந்துவிட்டது. அது என்னவென்று இந்த பதிவை முழுவதுமாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Use free backup WhatsApp chats

நீங்கள் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் என்றால், 2024-ன் முதல் காலாண்டிலிருந்து WhatsApp chat storage கணக்கிடப்படும். நாம் Google Drive பயன்படுத்தியே நமது datas-ஐ எப்பொழுதுவேனாலும் backup எடுத்துக்கொள்வோம். இப்பொழுது இதற்கும் ஒரு அளவு உள்ளது. பயனர்கள் 15ஜிபி டேட்டா வரை மட்டுமே இலவசமாக WhatsApp chat backup செய்ய உபயோகிக்க முடியும். 

WhatsApp-ல் chats மட்டும் இருக்காது அதில் புகைப்படங்களும் இருப்பதால், 15GB என்பது மிகவும் சிறியதுதான். 

2023-ல 7 கோடி மக்களின் Whatsapp Account-ஐ Ban பண்ண இது தான் காரணமா?

Do you want to backup your WhatsApp chats?

இருப்பினும், பயனர்களுக்கு சாதகமான செய்தியும் உள்ளது. ஒரு மாதத்திற்கு தோராயமாக ரூ.35-க்கு, உங்கள் Google Drive சேமிப்பகத்தை மேம்படுத்தலாம். ஒவ்வொரு திட்டத்தை பொருத்தும் பணம் மாதத்திற்கு மாறும்.

whatsapp chat backups plan

உங்களுக்கு இந்த storage பத்தாது என்று நினைத்தீர்கள் என்றால் Google One-ஐ subscribe செய்து 100GB இலவச storage-ஐ பெறலாம். Google One என்பது Google Drive-வுடன் இணைக்கப்பட்ட சந்தா தொகுப்புகளைக் குறிக்கிறது. இதில் மூன்று திட்டங்கள் உள்ளன 100GB, 200GB மற்றும் 2TB. 

உங்களுக்கு எவளோ தேவைப்படுகிறதோ அதற்கேற்றவாறு உங்கள் plans-ஐ தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
எங்கள் Telegram Channel-ஐ பின்தொடர 👉👉

Link
Advertisement