நாய்கள் இரவு நேரங்களில் அழுவதற்கு என்ன காரணம் தெரியுமா.?

Advertisement

நாய் அழுவது ஏன்

இரவு நேரங்களில் எப்போதாவது நாய்கள் ஊளையிடுவதை அல்லது அழுவதை நாம் அனைவருமே கவனித்து இருப்போம். அதுமட்மில்லாமல் ஏன் நாய் இரவு நேரங்களில் மட்டும் அழுகிறது.? என்று யோசித்து இருப்போம். அப்படி யோசித்து இருக்கும் அனைவருக்கும் இப்பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆமாங்க.. இப்பதிவில் இரவு நேரத்தில் மட்டும் ஏன் நாய்கள் அழுகுவதற்கான காரணத்தை பதிவிட்டுள்ளோம். ஓகே வாருங்கள் அதனை பற்றி பின்வருமாறு விவரமாக பார்க்கலாம்.

பொதுவாக, நம் இருக்கும் இடத்தை சுற்றி நேர்மறை ஆற்றலும் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் இருக்கிறது. இதில் எதிர்மறையான ஆற்றல் இருப்பதை ஏதொவொன்றின் மூலம் நமக்கு  உணர்த்தும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அதில், இரவில் நாய் அழுவதும் ஒன்றாக கூறப்படுகிறது. ஆனால், இரவில் நாய் அழுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அக்காரணங்களை இப்பதிவில் படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Why Do Dogs Sometimes Howl at Night in Tamil:

Why Do Dogs Sometimes Howl at Night in Tamil

நாய்கள் ஊளையிடுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அவை பின்வருமாறு:

எதிர்மறை ஆற்றல்:

நாய்கள் இரவில் குரைக்கும் போதெல்லாம், அதனைச் சுற்றி ஒருவித எதிர்மறை ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் ஏதோவொன்று தவறாக நடக்க போகிறது என்பதை உணர்ந்து ஊளையிடுகிறது. வாஸ்து நம்பிக்கையின்படி, நாய்கள் ஊளையிடுவது வரவிருக்கும் ஆபத்து அல்லது மோசமான நிகழ்வுகளை முன்கூடியே உணரக்கூடியது ஆகும். ஆகவே, நாய் இரவில் அழுவதற்கு முதல் காரணம் அதனை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல் தான்.

பைக்கில் செல்லும் போது நாய்கள் ஏன் துரத்துகிறது

வலிகள்:

நாய்கள் தனியாக இருக்கும்போதும், ஏதேனும் உடலில் வலி ஏற்பட்டாலும் அழதொடங்குகிறது. மூட்டுவலி, செரிமான பிரச்சனை உள்ளிட்ட பல வலிகளால் நாய்கள் அழுகின்றது.

துணைநாய்களை வரவழைக்க:

நாய்கள் தாம் இருக்கும் இடத்தை துணைநாய்களுக்கு தெரிவிக்க வேகமாகவும் தொடர்ந்தும் அழுகின்றன. அதாவது, ஒரு நாய் தனிமையில் இருக்கும்போது, அதன் இடத்திற்கு மற்ற நாய்களை வரவழைக்க அதிக சத்தத்துடன் அழுகிறது.

பசி:

பெரும்பாலான நாய்கள் பசியினால் தான் அழுகிறது. வயிற்றில் எந்த ஒரு உணவும் இல்லாத நேரங்களில் அது உடலில் ஏற்படும் சில அசௌகரியங்களால் அழுகிறது.

பைக்கில் செல்லும் போது நாய்கள் ஏன் துரத்துகிறது

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து  கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement