ஏன் அதிகமாக சிரிக்கும் போது வயிறு வலிக்கிறது

Advertisement

ஏன் சிரிக்கும் போது வயிறு வலிக்கிறது

பொதுவாக வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்ற பழமொழி இருக்கிறது. சிரிப்பதனால் நம்முடைய உடலானது புத்துணர்ச்சி அடைகிறது. அதுமட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் ஓடும் காமெடி அல்லது யாரும் பேசும் பொது ஜோக்ஸ் ஏதும் கூறினார்கள் என்றால் சிரிப்போம்.

சில நேரங்களில் நம்முடைய சிரிப்பை நிறுத்த முடியாது, அதிகமாக சிரிப்போம். அப்படி நாம் சிரிக்கும் போது நமக்கு வாய் மற்றும் தலை, வயிறு பகுதி எல்லாம் வலிக்கும். இவை எதற்காக இப்படி வலிக்கிறது என்று பலருக்கும் தெரியாது. அதனால் தான் இந்த பதிவில் நாம் சிரிக்கும் போது ஏன் வயிறு வலிக்கிறது என்று அறிந்து கொள்வோம்.

 சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

சிரிப்பதால் ஏற்படும் நன்மைகள்

நம்முடைய வேலை மற்றும் வீட்டில் இருக்கும் டென்ஸனால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்கு உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை பின்பற்றுகிறோம். ஆனால் இதனை தவிர்ப்பதற்கு நீங்கள் மனம் விட்டு சிரித்தாலே போதுமானது. நீங்கள் சிரித்தாலே  மன அழுத்தம் குறையும்.

மேலும் இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களும் வாய் விட்டு சிரிக்க வேண்டும். இப்படி சிரிப்பதனால் இரத்த அழுத்தம் குறையும்.

இதயத்தில் எந்த பிரச்சனையும் வராமல் நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது. நம்முடைய உடலில் டி செல்களை அதிகரிக்கசெய்கிறது. டி செல்கள் அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்துவதற்கும் உதவுகிறது.

எண்டோர்பின்கள் உடலின் இயற்கையான வலி நிவாரணிகள். சிரிப்பதன் மூலம், நீங்கள் எண்டோர்பின்களை வெளியிடலாம், இது நாள்பட்ட வலியைக் குறைக்கவும், உங்களை முழுவதும் நன்றாக உணரவும் உதவும்.

சாப்பிடும் போது கையை தரையில் வைத்து சாப்பிட கூடாது ஏன் தெரியுமா..?

சிரிக்கும் போது வயிறு வலிக்க காரணம்:

கொஞ்சமாக சிரிக்கும் போது நமக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் அதிகமாக சிரிக்கும் போது வயிறு வலிக்க ஆரம்பித்து விடும். இவை எதனால் வலிக்கிறது என்று அறிந்து கொள்வோம்.

நாம் ஆரம்பத்திலிருந்தே வயிறு வயிறு குலுங்க குலுங்க சிரிக்கிறோம். நாம் இப்படி சிரிக்கும் போது நம் உடலிருந்து endorphins வெளியேறும். இவை நன்றாக வெளியேறும் போது நம் வயிற்றில் வலி இருந்தால் கூட வயிறு குலுங்குவதால் தெரிவதில்லை.

எண்டோர்பின்கள் என்பது மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி மற்றும் ஹைபோதாலமஸால் வெளியிடப்படும் நரம்பியக்கடத்திகள் ஆகும். இயற்கை ஹார்மோன்களாக, அவை வலியைக் குறைக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை மேம்படுத்தவும், உங்கள் நல்வாழ்வை மேம்படுத்தவும் முடியும். உங்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை செய்யும் போது endorphins ஆனது வெளியேறுகிறது.

இந்த endorphins ஆனது வெளியற்றுவது குறைகிறதோ அப்போது தான் வயிறு வலிக்கிறது என்பதை உணர முடிகிறது.

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement