தாழம்பூ குங்குமம் தயாரிப்பது எப்படி
குங்குமம் என்பது அனைவரும் வீட்டிலும் இருக்க கூடியது, இதனை திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் பொட்டாக வைத்து கொள்வார்கள். கோவில்களிலும் விபூதி மற்றும் குங்குமம் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அதனால் குங்குமம் அதிக ளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனின் பபயன்பாடு அதிகமாக இருந்தாலும் கூட கடைகளில் வாங்கி தான் பயன்படுத்துகிறோம். கடையில் வாங்கிய குங்குமத்தில் கெமிக்கல் கலந்திருக்கும். இதனை பயன்படுத்தும் போது அரிப்பு மற்றும் எரிச்சல் பிரச்சனை ஏற்படும். அதனால் வீட்டிலேயே குங்குமம் தயாரிப்பது சிறந்ததாக இருக்கும். சரி வாங்க குங்குமம் தயாரிப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை பழம்-1
- சுண்ணாம்பு-சிறிதளவு
- மஞ்சள் தூள்-5 தேக்கரண்டி
- நல்லெண்ணெய் அல்லது தாழம்பூ எசென்ஸ்- சிறிதளவு
குங்குமம் செய்முறை:
முதலில் எலுமிச்சை பழத்தை எடுத்து சாறாக பிழிந்து கொள்ள வேண்டும். அடுத்து ஒரு தனி பவுலில் மஞ்சள் தூள் 5 தேக்கரண்டி சேர்த்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி சுண்ணாம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். பின் இதனுடன் பாதி எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை கலங்கும் போதே நிறம் மாறுவதை காணலாம். ஆரத்தி எடுப்பதற்கு தயாரித்தால் ஒரு கலர் வரும் அல்லவா.! அந்த நிறத்திற்கு ஏற்படும்.
இந்த சாற்றை மஞ்சள் தூளில் சேர்த்து கலக்க வேண்டும். எல்லா மஞ்ச தூளிலும் படும் அளவிற்கு கையை பயன்படுத்தி நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். முக்கியமாக வெறும் தண்ணீரை சேர்த்து மிக்ஸ் செய்திடாதீர்கள்.
அதன் பிறகு இதில் நல்லெண்ணெய் அல்லது தாழம்பூ எஸ்என்ஸ் சிறிதளவு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை 1 மணி நேரம் காய வைக்க வேண்டும். அதன் பிறகு மூடி போட்ட பாட்டிலில் ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும்.
நெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் வைப்பதில் இப்படி ஒரு அறிவியல் காரணம் இருக்கிறதா
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |