நெற்றியில் பொட்டு
பொதுவாக நாம் தினமும் நம்முடைய நெற்றியில் மறக்காமல் பொட்டு வைக்கும் பழக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி பொட்டு வைப்பதோடு மட்டும் இல்லாமல் சாமியின் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இவற்றையும் சேர்த்து நெற்றியில் வைப்போம். ஆனால் நாம் நெற்றியில் விபூதி தானே வைக்கிறோம் என்று நினைப்பதற்கு பின்னால் ஒரு பெரிய அறிவியல் காரணமும் இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் அதற்கான அறிவியல் காரணம் என்னவென்று தெறிந்துகொள்ளலாம் வாங்க..!
கோவிலில் ஏன் தேங்காய் உடைக்கிறார்கள் காரணம் தெரியுமா..? |
நெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் வைப்பதின் அறிவியல் காரணம்:
திருநீறு:
இயற்கையாகவே நமது இருபுருவங்களிற்கு இடையிலும் மிக நுண்ணிய நரம்புகள் இருக்கிறது. அந்த இடத்தில் நாம் திருநீறை வைப்பதனால் நம்முடைய மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நல்ல சிந்தனையை நமக்கு அளிக்கும் என்பது நெற்றியில் திருநீறு வைப்பதற்கான அறிவியல் காரணம் ஆகும்.
அதுமட்டும் இல்லாமல் பொதுவாக திருநீறு என்பது நமது உடலிற்கு தேவையான நல்ல ஆற்றல்களை ஏற்றுக்கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதனால் திருநீறை நமது உடலில் கை, நெற்றி மற்றும் கழுத்து போன்ற இடங்களிலும் திருநீறை பூசி கொள்ளலாம்.
நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக:
ஆண், பெண் இருவரும் நெற்றியில் குங்குமம் வைப்பதனால் நாம் சிலநேரத்தில் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது தலைவலி, தலை சுற்றல் மற்றும் மயக்கம் போன்றவற்றை எதுவும் ஏற்படாமல் புருவத்தில் உள்ள நரம்புகள் நம்மை பாதுகாக்கிறது.
அதேபோல சுண்ணாம்பு, படிகாரம் மற்றும் மஞ்சள் இவற்றில் இருந்து தயாரிக்க படும் குங்குமத்தை நெற்றியில் வைப்பதனால் நமக்கு பாக்டீரியா தொற்று வராமலும் மற்றும் உடலை குளிர்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.
இந்த இரண்டு காரணங்களும் நெற்றியில் குங்குமம் வைப்பதற்கான அறிவியல் காரணம் ஆகும்.
கோவிலில் மணி அடிப்பதற்கு பின் இருக்கும் ரகசியம் உங்களுக்கு தெரியுமா..? |
சந்தனம்:
நாம் நெற்றியில் சந்தனம் வைப்பதால் அது நம்முடைய மூளையில் உள்ள முன் புறணியை நன்றாக செயல்பட செய்து மூளையின் பின் புறமேடு என்ற இடத்திற்கு ஞாபகங்களை செலுத்தி நமக்கு ஞாபக மறதி பிரச்சனை எதுவும் வராமல் இருக்கவும் மற்றும் மூளை புத்துணர்ச்சியுடனும் இருக்க செய்யும். இதுவே நெற்றியில் சந்தனம் வைப்பதற்கான அறிவியல் காரணம் ஆகும்.
இது உடல் சூட்டை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம் | Facts |