விசா வகைகள் | Types of Visa in India

Types of Visa in India

விசா வகைகள் | விசா என்றால் என்ன?

விசா என்பது அந்த நாட்டு குடிமகன் அல்லாத வெளிநாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டிற்கு செல்லவும், அந்த நாட்டில் குறிப்பிட்ட நாட்கள் தங்கவும் அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகளால் உங்கள் நுழைவுக்கு அனுமதி வழங்கி கொடுக்கப்படும் ஒரு ஆவணச்சீட்டு அல்லது முத்திரை பதித்த ஒரு சிறு தாள் ஆகும். இது உங்களுக்கு தாளாகவும் அல்லது உங்கள் கடவுச்சீட்டில் (பாஸ்போர்ட்) ஒட்டியோ கொடுக்கப்படும். இவ்வாறு வழங்கப்படும் விசாக்களில் பல வகைகள் இருக்கிறது.

ஒவ்வொரு வகையான விசாவுக்கு, ஒவ்வொரு விதமான செல்லுபடியாகும் காலங்களும் வழங்கப்படுகிறது. அதனை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. சரி என்னென்ன வகையான விசா இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

விசா வகைகள் | அதன் கால அவகாசங்கள்

மாணவர் விசா (Student Visa):

வசதியானவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்க விரும்புகின்றன, ஆகவே ஒரு மாணவனோ/ மாணவியோ வெளிநாடுகளில் உள்ள பல்கலைகழகத்தில் தங்கி படிக்க அதன் நிர்வாகத்தில் இருந்து அந்த நாட்டின் பேரில் அவருக்கு வழங்கப்படும் விசா ஆகும். இருப்பினும் மாணவர்களுக்கு அவர்களது கல்லூரி காலம் முடியும் வரை மட்டுமே இந்த விசாவிற்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.

பார்வையாளர் விசா (visit visa):

இது தனக்கான பணியை வேறு ஒரு நாட்டினில் தேடும் நோக்குடன் அந்த நாட்டின் பேரில் கேட்கபடுவது. இந்த விசாவின் கால அவகாசம் அந்த நாட்டில் தங்க 2 வாரங்கள் முதல் 1 மாதம் வரை வழங்கப்படுகிறது. ஏற்கனவே சென்ற நாடாக இருந்தால் இந்த விசா திரும்ப கிடைப்பது மிகவும் கடினம்.

சுற்றுலா விசா (Tourist Visa):

சுற்றுலா விசா என்பது நீங்கள் செல்ல விரும்பும் நாட்டின் சுற்றுலாத் தளங்களை காண விரும்பி கேட்கப்படும் ஒரு வகையான விசா ஆகும். இந்த சமயம் நீங்கள் வேறு ஏதும் வணிகம் செய்ய உரிமையில்லை. இந்த சுற்றுலா விசாவிற்கு 3 நாட்கள் முதல் 1 வாரம் வரையிலான அவகாசம் வழங்கப்படுகிறது.

குடும்ப விசா (Family Visa):

குடும்ப விசா என்பது தன் மனைவியோ/கணவனோ வேறு நாட்டில் வேலை செய்யும் பட்சத்தில் மற்றவர்க்கும் பரிந்துரை செய்து அவருடன் சேர்ந்து தங்குவதற்கான அனுமதி கேட்கும் ஒரு விசா ஆகும். இந்த விசா அவர்களது கால அவகாசத்தை பொருத்தது.

பணி அனுமதி விசா (Work Permit Visa):

இந்த விசா நேராக ஒரு வெளிநாட்டு நிறுவனம் உங்களை தனது நிறுவனத்தில் தேர்வு செய்து உங்களுக்கு பணி நியமனம் கொடுத்து வழங்கப்படும் அனுமதி. இது பெரும்பாலும் 1 வருடத்தில் இருந்து 2 வருடங்களுக்கான ஒப்பந்தம் இருக்கும். இது அந்த அவகாசத்திற்கு பிறகும் புதிப்பித்து கொள்ளலாம்.

உரிமையாளர் விசா (Sponsor Visa):

இந்த விசா அங்குள்ள ஒரு நிறுவனமோ அல்லது தனி நபரோ தங்கள் சொந்தபரிந்துரையின் பேரில் உங்களை அங்கு கொண்டு வந்து உங்களுக்கான செலவுகளையும் /அனைத்தையும் பெறுப்பு ஏற்று வழங்கப்படுவது. இதற்கு 1 மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்படுகிறது.

நாடு கடப்பு விசா (Transit Visa):

ஒரு நாட்டின் வழியாக கடந்து மூன்றாம் நாட்டிற்கு செல்கையில் உங்களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த விசாவிற்கு மூன்று நாட்கள் வரை அவகாசம் இருக்கும்.

அலுவல் விசா (Official Visa):

இது நாட்டுத் தலைவர்கள், பிரதிநிதிகள் வேறு நாடுகளுக்கு சந்திப்பிற்காகவோ/கூட்டத்திற்காகவோ செல்கையில் வழங்கப்படுவது. இது பொதுமக்களுக்கு கிடையாது.

விசா இல்லாமல் செல்லும் நாடுகள் என்னென்ன தெரியுமா?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com