வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கார்த்திகை தீபம் வரலாறு | Karthigai Deepam History in Tamil

Updated On: December 1, 2025 5:03 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் வரலாறு | Tiruvannamalai Karthigai Deepam History in Tamil

கார்த்திகை தீபம் வரலாறு: கார்த்திகை தீபமானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. திருக்கார்த்திகை அன்று வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளை அகல் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கார்த்திகை திருநாளில் மாலை 6 மணி அளவில் அகல் விளக்கினால் வீடுகள் தோறும் ஜொலித்து காணப்படும். இந்த தீப திருநாளானது 3 நாட்கள் அனைவராலும் கொண்டாடப்படும். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணெயும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக் கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியை தருகிறது. இது போல மனிதர்களும் தன்னலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.

கார்த்திகை தீபம் முறையாக ஏற்றுவது எப்படி..?

கார்த்திகை தீப விழா:

கார்த்திகை தீப விழா

  • கார்த்திகை தீபத் திருவிழா தேதி: கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. கார்த்திகை தீப விழாவினை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து கோவில் மற்றும் வீடுகளில் கொண்டாடுவர்.
  • குமராலய தீபம்: கார்த்திகை மாதத்தில் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.
  • விஷ்ணுவாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் விஷ்ணு கோவில்களில் கொண்டாடப்படும் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.
கார்த்திகை தீபம் பற்றிய கட்டுரை

சர்வாலய தீபம்: ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்:

 karthigai deepam history in tamil

  • கார்த்திகை தீபம் வரலாறு: திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றிய பிறகு, மாலையில் மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் திருவண்ணாமலை மலையானது 2668 அடி உயரத்தை கொண்டுள்ளது.
  • இந்த மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.

கார்த்திகை தீப வரலாறு:

கார்த்திகை தீப வரலாறுகார்த்திகை தீப வரலாறு

திருவண்ணாமலையில் தான் சக்தியும், சிவனும் அர்த்தநாரிஸ்வர கோலத்தில் கலந்தனர். கார்த்திகை தீபமன்று நாம் வீட்டில் ஏற்றும் தீப விளக்கானது தீப ஒளியானது யார் மீது படுகிறதோ அவர்களுக்கு மறுபிறவியில் எந்த ஒரு துன்பமும் நடக்காது. இறைவன் மகாபலிக்கு முக்தி அளித்தபோது ‘கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற மகாபலியின் விருப்பத்தினை, நிறைவேற்றி இறைவன், மகாபலியை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். இப்படியாக மகாபலியின் வாழ்க்கையானது இறைவனின் திருவருளை சென்றடைந்தது.

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை:

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை

கார்த்திகை தீப திருநாள் அன்று வீட்டில் கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றினால் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். மேற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றினால் கடன் தொல்லை முற்றிலும் நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத் தடை நீங்கும். தெற்குத் திசை நோக்கி எப்போதும் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.

கார்த்திகை (karthigai deepam history in tamil) தீபமன்று வீட்டில் 27 விளக்குகள் ஏற்றி வைத்தால் நல்லது. சிலர் தங்களுடைய வீட்டில் கார்த்திகை அன்று குத்து விளக்குகளில் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த நாளில் நைவேத்தியமாக இறைவனுக்கு அவல், கடலை நெல்பொரி, அப்பம் போன்ற உணவுகளை படைத்தது மகிழ்வார்கள்.

  • விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் நீங்கள் மனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் நடக்கும்.
  • விளக்கில் இரண்டு முகம் வைத்து ஏற்றினால் வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோசம் நிலைக்கும்.
  • மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
  • ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றி வர அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

கார்த்திகை அன்று வீடு அலங்காரம்:

 கார்த்திகை தீபம் வரலாறு

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீட்டின் உள் புறம் மற்றும் வெளியிலும் சிறிய விளக்குகளில் தீபமேற்றி அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

விரதம் இருக்கும் முறை:

விரதம் இருக்கும் முறை

கார்த்திகை விளக்கீடு: கார்த்திகையின் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேலை உணவு சாப்பிட்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.

மறுநாள் காலையில் நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாத சிறப்பு:

 tiruvannamalai karthigai deepam history in tamil

திருவண்ணாமலை தீபம் வரலாறு: தமிழ்நாட்டில் கார்மேகம் எனும் சோணைமழை பொழியும் மாதத்தை தான் கார்த்திகை மாதம் என்று சொல்கிறோம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலை நேரத்தில் தோன்றக்கூடியதை கார்த்திகை மாதம் என்று சொல்லப்படுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா கதை:

கார்த்திகை தீபத் திருவிழா 2021 தேதி

கார்த்திகை மாத பண்டிகைகளில் முக்கியமானதாக விளங்குவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் இட்டுக் கட்டுக் கதைகளுக்குப் பின்னால் இருக்கும் புராணக் கதைகளையும் உண்டு.

முதல் கதை: கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ள சான்றினைத்தான் முக்கியச் சான்றாக இந்த புராண கர்த்தாக்கள் காட்டுகிறார்கள். அதன்படி, தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும், அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தை தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார்.

இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.

இரண்டாம் கதை: சூரனை கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதை ஏற்ற அவர் அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தமது படைப்பை உருவாக்க தமது மனைவி சக்தியுடன் புணரத் தொடங்குகிறார். புணர்ச்சி நிற்கவில்லை. யுகம் யுகமாகத் தொடர்கிறது. அப்படி தொடரும் போது மானாகவு, யானையாகவும் இன்னும் பல மிருகங்களாவும் உருவெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் சக்தியும் சிவனும். இவர்களின் செய்கையினால் தேவலோகம் தடுமாறுகிறது. இவர்களின் புணர்ச்சியை எப்படி நிறுத்துவது என்றுத் தெரியாமல் தேவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இருவரின் புணர்ச்சியினால் உருவான வியர்வை துளிகள் லட்சக்கணக்கில் பெருகி வழிகின்றன, அதிலிருந்து தேவ கணங்கள் உருவாகின்றன, முன்னணி படையணிகள் தோன்றுகின்றன, இறுதியில் சிவன் தனது சுக்கிலத்தை தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்திகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள்.

அரசாளும் வரம் வேண்டுமா? கார்த்திகை தீப திருநாளில் விரதமிருந்து  விளக்கேற்றுங்கள் | Karthikai Deepam Purana story important and benefits -  Tamil Oneindia

அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.

மூன்றாவது கதை: சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து போனாள். அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும் சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள் என்று பெயர். இப்பெண்கள்தான் கார்த்திகேயனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

இப்படியாக நாம் கார்த்திகை தீப விழாவன்று விளக்கேற்றி நாம் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளாமல், இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எந்த கஷ்டமும் இன்றி வாழ இறைவனை வேண்டி இந்த கார்த்திகை தீபத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோம்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now