மகளிர் தின வரலாறு..!

Advertisement

மகளிர் தின வரலாறு

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் மார்ச் 08 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால், மகளிர் தினம் கொண்டாடுவதற்கான வரலாறு பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக மகளிர் தினம் கொண்டாடுவதற்கான வரலாறு பற்றி இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பெண்களை போற்றும் வகையில், மார்ச் 08 ஆம் தேதி மகளிர் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வு ஆகும். இந்நாளில் உலகெங்கிலும் பெண்களை போற்றக்கூடிய பல  நிகழ்வுகள் நடைபெறும்.

Magalir Thinam History in Tamil:

மகளிர் தினம் முதன் முதலில் 1911 ஆம் ஆண்டு ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் கொண்டாடப்பட்டது. அதன் பிறகு, 1975 -இல் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை கொண்டாடத் தொடங்கியபோது அனைத்தும் அதிகாரபூர்வமாக்கப்பட்டன. தற்போது நூற்றாண்டு விழாவாக 2011 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகளிர் தினம் கவிதை

1908 ஆம் ஆண்டில் 15,000 பெண்கள்,  நியூயார்க் நகரத்தின் வழியாக குறுகிய வேலை நேரம், சிறந்த ஊதியம் மற்றும் வாக்களிக்கும் உரிமை ஆகியவற்றைக் கோரி அணிவகுத்துச் சென்றபோது அதன் விதைகள் வேரூன்றப்பட்டன. ஒரு வருடம் கழித்து, அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை அறிவித்தது.

அதாவது, பிப்ரவரி 28, 1909 ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஆர்வலர் தெரசா மல்கியேலின் ஆலோசனையின் பேரில் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி இது ஏற்பாடு செய்யப்பட்டது .மார்ச் 8, 1857 அன்று நியூயார்க்கில் பெண்கள் ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை நினைவுகூரும் தினம் என்று கூற்றுக்கள் உள்ளன, ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இது சர்வதேச மகளிர் தினத்தை அதன் சோசலிச தோற்றத்திலிருந்து பிரிக்கும் ஒரு கட்டுக்கதை என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நாளை சர்வதேசமயமாக்க வேண்டும் என்ற எண்ணம் கம்யூனிஸ்ட் ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகளுக்காக குரல் கொடுத்த கிளாரா ஜெட்கின் என்ற பெண்ணிடமிருந்து தோன்றியது. உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். 

சர்வதேச மகளிர் தினம் ஆனது, பெண்கள் சமூகத்திலும், அரசியலிலும், பொருளாதாரத்திலும்  எவ்வளவு தூரம் முன்னேற்றமடைந்து வந்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டாடும் நாளாக மாறியுள்ளது.

மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை

இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> Varalaru
Advertisement