Advertisement
பெரியார் வாழ்க்கை வரலாறு | Periyar History in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பெரியாரின் வாழ்க்கை வரலாறை பற்றி பார்க்கலாம் வாங்க. இந்த உலகில் சமுக சீர்திருத்தத்தையும், இனப்பாகுபாடு, மூடநம்பிக்கை போன்றவற்றை களைவதற்காக போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். சமுதாயத்திற்கும், மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரு உன்னத மனிதர். இப்படி உலகிற்கு பல நன்மைகளை செய்த பெரியார் பற்றிய வரலாறை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
பிறப்பு:
- பெரியார் அவர்கள் செப்டம்பர் 17-ம் தேதி 1879-ம் ஆண்டு தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் வெங்கட்ட நாயக்கர், தாயார் பெயர் சின்னதாயம்மை. இவருடைய இயற்பெயர் ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு பெயர் கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.
- இவர் ஒரு வணிக குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை பெரியார் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்தார். இவருக்கு 19 வது வயதில் திருமணம் நடைபெற்றது. இவருக்கு பெண் குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.
- இவர் இனப்பாகுபாடு, வேற்றுமை எதுவும் இல்லாமல் அனைவருடனும் சரிசமமாக பழகுவார். கலப்பு திருமணங்களை 1902-ம் ஆண்டு தொடங்கினார் இதில் அவரின் பெற்றோருக்கு விருப்பமில்லை, இந்த செயலால் இருவருக்கும் சண்டை வந்தது, அதனால் பெரியார் துறவு பூண்டார்.
Thanthai Periyar History in Tamil:
- பெரியாருக்கு காந்தியின் கொள்கைகளில் அதிக ஈடுபாடு இருக்கும் அதனால் 1919-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அதில் நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார். பின் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக 1922-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.
- பெரியார் அரசு பணியிலும், கல்வியிலும் இடஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார் இந்த கோரிக்கையை காங்கிரஸ் ஏற்காததால் காங்கிரஸ் கட்சியை விட்டு 1925-ம் ஆண்டு விலகினார்.
வைக்கம் வீரர்:
- வைக்கம் எனும் ஊர் கேரளாவில் உள்ளது, அந்த ஊரில் உள்ள கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதை எதிர்த்து போராட்டம் நடத்தி பெரியார் சிறை சென்றார், இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அழைக்கப்பட்டார்.
- மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளை போக்குவதற்காக 1925-ம் ஆண்டு சுயமரியாதை இயக்கம் மற்றும் குடியரசு நாளிதழை தொடங்கினார். இது மட்டுமல்லாமல் மாநாடு, கூட்டங்கள் போன்றவற்றை நடத்தியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பெரியார் கட்டுரை |
பெரியார் வேறு பெயர்கள்:
- இவருடைய இயற்பெயர் ஈரோடு வெங்கட்ட இராமசாமி இதனை சுருக்கி ஈ.வே.இராமசாமி என்று அழைப்பர்.
- பகுத்தறிவு பகலவன், ‘வைக்கம் வீரர்’ மற்றும் ‘தந்தை பெரியார்’ போன்ற பெயர்களாலும் அழைக்கபடுவார்.
திராவிட கழகம்:
- 1937-ம் ஆண்டு இந்தி மொழி பள்ளிகளில் கட்டாய மொழியாக்கப்பட்டது, இதனை எதிர்த்து 1938-ம் ஆண்டு பெரியார் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தி 1 வருடம் சிறை சென்றார். 1939-ம் ஆண்டு பெரியார் விடுதலையானதும் நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். 1944-ம் ஆண்டு நீதிக்கட்சி என்ற பெயர் திராவிட கழகம் என மாறியது.
- திராவிட கழகத்தின் முக்கிய கொள்கையே பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்காக செயல்பட்டனர்.
கடைசி சொற்பொழிவு:
- பின்னர் அண்ணாதுரை அவர்கள் பெரியாரிடமிருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். 1962-ம் ஆண்டு கி. வீரமணி என்பவரை திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக நியமித்தார்.
- வைக்கம் வீரர் என்று அழைக்கபடும் தந்தை பெரியாருக்கு அமைச்சர் திரிகுனா சென் அவர்களால் ஜூன் 27-ம் தேதி 1973-ம் ஆண்டு யுனஸ்கோ விருது வழங்கப்பட்டது.
- சாதி பாகுபாடு, மூடநம்பிக்கை போன்றவற்றை அடியோடு வெறுக்க வேண்டும் என்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார், இதுவே ஈ.வெ. ராமசாமியின் கடைசி கூட்டமாகும்.
மறைவு:
- சமூகத்திற்கு பல நன்மைகளை செய்த பகுத்தறிவு பகலவன் என்று அழைக்கப்படும் பெரியார் 94-வது வயதில் 1973-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் பெரியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .
- பெரியாரின் நினைவை போற்றும் வகையில் ஈரோடு இல்லத்தை பெரியார் – அண்ணா நினைவு இல்லமாக மாற்றியுள்ளது. தமிழ்நாட்டில் அவருக்கு முன்போ அல்லது பின்போ ஒரு ‘சீர்திருத்தச் செம்மல்’ தோன்றியதில்லை என்றே சொல்ல வேண்டும்.
பெரியார் பொன்மொழிகள் |
இது போன்ற வரலாறு சார்ந்த பதிவுகளை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் >> | Varalaru |
Advertisement