1/2 மணி நேரத்தில் 1 ரூபாய் செலவு இல்லாமல் முகத்தை மின்ன வைக்கலாம்..!

iyarkai face mask in tamil

இயற்கை பேசியல்

அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்படும் வகையில் சுலபமான மிகவும் ஈஸியான அழகு குறிப்புகள். பொதுவாக அனைவருமே முகத்தை அழகாக வைத்துக்கொள்ள ஆசை படுவார்கள். அதனால் அனைவருமே பியூட்டி பார்லரை நோக்கி படையெடுக்கிறார்கள். அப்படி அங்கு சென்று நம் முகத்திற்கு அந்த நேரம் மட்டுமே அழகு சேர்ப்போம் ஆனால் அதன் பின் விளைவுகள் அதிகமாகி இருக்கும் பட்சத்தில் அதனை இனி யாரும் செய்யாதீர்கள் அப்படி உங்களுக்கு எப்போதும் அழகா இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.

இயற்கை பேசியல்:

டிப்ஸ் -1

முதலில் வீட்டில் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள நன்மையை தெரிந்துகொள்ள வேண்டும். அதிலும் மிகவும் முக்கியமான பொருள் என்றால் அது தேங்காய் எண்ணெய். இப்போது முகத்தில் ஏதேனும் மேக்கப் போட்டு இருந்தீர்கள் என்றால் அதனை கலைத்துவிட்டு இரண்டு கையிலும் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை தடவி கொள்ளவும்.

பின்பு அதனை முகத்தில் தடவி 1/2 மணி நேரம் மசாஜ் செய்யுங்கள். இதன் மூலம் முகத்தில் உள்ள கிருமிகள் நீங்கிவிடும்.

டிப்ஸ் -2

பின்பு தேங்காய் எண்ணெய்விட்டு முகத்தை மசாஜ் செய்த பிறகு அதில் ஒரு காட்டன் துணியை கொண்டு வெந்நீரில் நனைத்து முகத்தில் உள்ள  எண்ணெய்யை துடைக்கவும்.

டிப்ஸ் -3

பின்பு காய்ச்சாத பால் இருக்கும் அதில் காட்டன் துணியை கொண்டு நனைத்து முகத்தில் அந்த துணியால் நன்றாக 3 நிமிடங்கள்  வரை மசாஜ் செய்ய வேண்டும். அந்த பச்சை பாலுடன் சிறிது தேன் கலந்து கொண்டால் நல்லது.

டிப்ஸ் -4

அதன் பின் தக்காளியை இரண்டாக வெட்டிக்கொண்டு கொஞ்சம் சர்க்கரையை அந்த தக்காளியில் தொட்டு உங்கள் முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். இதனை வைத்து மசாஜ் செய்யும் போது மிருதுவாக செய்வது முக்கியம்.

டிப்ஸ் -5

அதன் பின்பு கோதுமை மாவு, ஒரு ஸ்பூன், காபி பவுடர் அரை ஸ்பூன், தக்காளி விழுது, இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து பேஸ்டாக கலந்துகொள்ள வேண்டும். அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி பாருங்கள் முகம் அழகா காட்சி அளிக்கும்.

ஆரஞ்சு பழ தோலை வைத்து முகத்தை ஜொலிக்க வைக்க முடியுமா..? 

 இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil..!