சரும அழகை அதிகரிக்க 3 வகையான பியூட்டி டிப்ஸ்..!

Daily skin care tips at home

சரும அழகை அதிகரிக்க மூன்று வகையான அழகு குறிப்பு..!

Daily skin care tips at home:- சரியான சரும பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களுக்கு அழகும், இளமையும் என்றும் நீடித்திருக்கும். இருப்பினும் இப்பொழுது உள்ள அவசர உலகில் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுடைய சருமத்தை பராமரிக்க அதிக கவனம் செலுத்துவது இல்லை. குறிப்பாக காற்று  மாசுபாடு, சூரிய கதிர்கள் போன்றவற்றில் இருந்து சரும அழகை பாதுகாக்க கடைகளில் விற்கப்படும் அதிகம் கெமிக்கல் நிறைந்த பொருட்களை சருமத்திற்கு பயன்படுத்துகின்றன. அவையெல்லாம் பயன்படுத்தும் பொழுது முகத்தை அழகாக காட்டுமே தவிர. அதன் பிறகு சந்திக்க இருக்கும் பின்விளைவுகள் ஏராளம் என்று யாருக்கும் தெரிவதில்லை.

இருப்பினும் கெமிக்கல் நிறைந்த ஃபேஸ் கிரீமை முகத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில், சரும அழகை பராமரிக்க இயற்கை தந்த பொருட்கள் ஏராளம் இருக்கிறது. அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தினாலே சருமம் என்றும் இளமையாக மற்றும் ஆரோக்கியமாக இருக்கும். சரி அந்த வகையில் இந்த பதிவில் வேலைக்கு செல்லும் பெண்கள் வீட்டில் இருக்கும்பொழுது செய்யக்கூடிய பியூட்டி டிப்ஸினை பற்றி தெரிந்து கொள்ளலாமா..?

தலைமுடி அடர்த்தியாக வளர சிறந்த எண்ணெய்..!

Daily skin care tips at home: 1 (Mint Leaves for Skin Whitening in Tamil )

puthina

ஒரு கப் கொத்தமல்லி இலை அல்லது புதினாவை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள் பின் அதனுடன் 1/2 கப் தயிர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.

இந்த பேக்கை சருமத்தில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும். பிறகு 15 முதல் 20 நிமிடங்க வரை காத்திருக்கவும்.

பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை செய்து வர சருமம் மிகவும் சாப்டாகவும், முகம் பளிசென்றும் காணப்படும். மேலும் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி, சருமத்திற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும்.

Daily skin care tips at home: 2 (Cinnamon Powder for Skin Whitening)

cinnamon powder

சமையலின் சுவை மற்றும் மனத்தை அதிகரிக்க உதவும் லவங்கப்பட்டையின் சிறப்பை பற்றி நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த இலவங்கப்பட்டையை பயன்படுத்தி நமது சரும அழகையும் பராமரிக்கலாம் என்று எவருக்காவது தெரியுமா? ஆம் இலவங்க பட்டையின் பொடியை பயன்படுத்தி சரும அழகை அதிகரிக்கலாம்.

அதாவது ஒரு ஸ்பூன் லவங்க பட்டை பொடியும், ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 5 நிமிடங்கள் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வர சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும், மேலும் இலவங்கப்பட்டை சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை என்றும் இளமையாக வைத்துகொள்ள உதவும்.

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கற்றாழை அழகு குறிப்புகள்..!

Daily skin care tips at home: 3 (Potato Juice Benefits for Face)

potato juice

சிலருக்கு சருமத்தில் அதிகளவு கரும்புள்ளிகளாக இருக்கும் அப்படிப்பட்டவர்கள், ஒரு உருளைக்கிழங்கை எடுத்து கொள்ளுங்கள். அவற்றில் இருக்கும் தோல் பகுதியை நீக்கி விட்டு, நன்றாக துருவி கொள்ளுங்கள் பின் மிக்சியில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக பேஸ்ட்டு போல் அரைத்து கொள்ளுங்கள்.

பின் அதனை அப்படியே முகத்தில் அப்ளை செய்யலாம் அல்லது அவற்றில் இருக்கும் சாறினை மட்டும் வடிகட்டி கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளை செய்யலாம். பின் 1/4 மணி நேரம் காத்திருந்து பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும் நீங்கி முகம் வெள்ளையாக மற்றும் பொலிவுடன் காணப்படும். இந்த முறையை தினமும் செய்து வரலாம் அல்லது வாரத்தில் இரண்டும் முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil