தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை!!! best home remedy..!

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய்

 முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் / தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய்

முடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் best home remedy உங்களுக்கு நீளமான அழகான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசையா? அதனுடன் சேர்த்து உங்கள் சருமமும் பொலிவாக இருக்க வேண்டுமா?

அப்படி என்றால் நீங்கள் கேரட் எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். இந்த கேரட் எண்ணெய்யைப் பயன்படுத்துவதால் நீங்கள் இளமையாகவும் தோன்ற முடியும்.

newபீட்ரூட் Face Pack – இவ்வளவு அழகு தருமா ?

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் தயார் செய்யும் முறை:

தேவையான பொருட்கள்:

  1. வீட்டில் விளைந்த கேரட் அல்லது ஆர்கானிக் கேரட் – 2 அல்லது 3
  2. ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு.
  3. கேரட் துருவி
  4. வடிகட்டி
  5. கிராக் பாட் அல்லது பேன்
  6. ஒரு சுத்தமான கண்ணாடி ஜார்

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை:

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை ஸ்டேப்: 1

கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

துருவிய கேரட்டை ஒரு பேன் அல்லது கிராக் பாட்டில் போடவும்.

உங்களுக்கு விருப்பமான ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை சேர்க்கவும்.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை ஸ்டேப்: 2

கேரட் துருவல் முழுவதும் மூழ்கும் அளவிற்கு எண்ணெய்யை ஊற்றவும்.

இப்படி செய்வதால் கேரட் முழுவதும் எண்ணெயில் ஊறி அடியில் தங்கி விடும்.

நன்றாக ஊறியவுடன் கேரட் மிகவும் மென்மையாக மாறி, அந்த எண்ணெய் முழுவதும் ஆரஞ்சு நிறமாக மாறி விடும். அப்போது அடுப்பை நிறுத்திவிட்டு ஆற விடவும்.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்முறை ஸ்டேப்: 3

அடுத்த 24 மணி நேரம் இந்த கேரட் எண்ணெயிலேயே ஊறட்டும்.

ஆறியவுடன், ஒரு வடிகட்டி பயன்படுத்தி எண்ணெய்யை வடிகட்டிக் கொள்ளவும்.

பிறகு அதனை ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைக்கவும். அந்த ஜாரை ஒரு இறுக்கமான மூடி போட்டு மூடி வைக்கவும். குளிர்ந்த இடத்தில் அல்லது தேவைபட்டால் பிரிட்ஜில் கூட இந்த பாட்டிலை வைத்துக் கொள்ளலாம்.

தேவைப்படும்போது இதனை எடுத்து பயன்படுத்தவும்.

தலைமுடி அடர்த்தியாக வளர எண்ணெய் பயன்படுத்தும் முறை..! 

தலைமுடி வளர – இப்படி தயாரிக்கும் கேரட் எண்ணெய் கூந்தலுக்கு பல அற்புதங்களை செய்கிறது. தலைக்கு ஷாம்பூ தேய்த்து குளிப்பதற்கு முன்னால் இந்த எண்ணெய்யை தலையில் தடவிக் கொள்ளலாம்.

இப்படி செய்வதால் உங்கள் கூந்தல் எண்ணெய்யை உறிஞ்சி, தலை முடிக்கு ஈரப்பதம் அளித்து, அழகாக்குகிறது.

இந்த கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோடின் போன்றவை சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஈ சத்து, உங்கள் கூந்தல்(தலைமுடி வேகமாக வளர) மற்றும் உச்சந்தலையை சேதங்களில் இருந்து பாதுகாக்கிறது.

மேலும் இது முடி உதிர்வைத் தடுத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

newபொடுகு தொல்லையிலிருந்து விடுபட டிப்ஸ் !!!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil