கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய சூப்பர் டிப்ஸ்..!

Advertisement

கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய..!

கழுத்து கருமை மறைய டிப்ஸ் – பல பெண்களுக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை எது என்றால் கழுத்தில் இருக்கும் மிக அடர்த்தியான கருமை நிறம் (Dark Neck) தான். இந்த கருமை நிறம் எப்படி தோன்றுகின்றது என்றால் அதிகமாக வெயிலில் அலைவதினாலும், அதிகளவு மாத்திரை போடுவதியானலும், முறையற்ற உணவு முறை மற்றும் அதிகளவு கழுத்தில் ஜெயின் போடுவதினால் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையை வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சரி செய்ய முடியம்.

newஅக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..!

சரி வாங்க வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து கழுத்தில் இருக்கும் கருமையை (Dark Neck) எப்படி நீக்கலாம் என்பதை பற்றி இந்த பகுதியில் நாம் காண்போம்.

கழுத்து கருமை மறைய / கழுத்து கருமை நிறம் மறைய – பால்:

காய்ச்சாத பாலை ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் எடுத்து கொள்ளவும், அவற்றை ஒரு காட்டன் துணியால் நனைத்து, அந்த துணியை கழுத்தில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

இந்த முறையை 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை செய்ய வேண்டும்.

பாலில் இருக்கும் விட்டமின் கழுத்தை மிருதுவாக வைப்பதுடன் கழுத்தில் படிந்து இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்ய உதவுகிறது.

newஆண்களுக்கான ஹேர் ஸ்டைல்..! Latest Men Hairstyles..!

கழுத்து கருமை மறைய – வெந்நீர்:

ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் தண்ணீரை சூடு படுத்தி எடுத்து கொள்ளவும்.

அவற்றில் சுத்தமான காட்டன் துணியை நனைத்து, கழுத்தில் சிறிது நேரம் ஒத்தி எடுத்தோம் என்றால் கழுத்தில் கருமை மறையும்.

பொதுவாக கழுத்திற்கு ஏதேனும் பேக் போடுகின்றோம் என்றால், அப்போது இந்த முறையை செய்து விட்டு பின்பு பேக் போட்டு கொண்டோம் என்றால் நல்ல பலன் கிடைக்கும்.

கழுத்து கருமை மறைய – சர்க்கரை:

கழுத்தில் இருக்கும் கருமையை நீக்குவதற்கு சர்க்கரை மற்றும் எலுமிச்சை இரண்டும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து கொள்ளவும்.

பின்பு எலுமிச்சை பழத்தை பாதியாக அறிந்து, சர்க்கரையில் நனைத்து கழுத்தில் 5 முதல் 10 நிமிடம் வரை மசாஜ் செய்து வந்தால் கழுத்தில் இருக்கும் கருமை மறைந்து விடும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வரவும்.

கழுத்து கருமை நிறம் மறைய – கடலை மாவு:

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் கடலை மாவை எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பாலை கலந்து கொள்ளவும்.

பின்பு நான்கு துளி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இந்த கலவையை கழுத்தில் தடவி 10 முதல் 15 நிமிடம் வரை வைத்திருந்து, பின்பு குளிர்ந்த நீரால் கழுவவும் இவ்வாறு செய்தால் கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து விடும்.

newகலாக்காய் பயன்படுத்தி தலைமுடி நீளமாகவும் மற்றும் முகம் சிகப்பழகு பெறலாம்..!
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement