முடி அடர்த்தியாக வளர வெங்காயம் சாறு..! onion juice for hair growth in tamil..!
முடி வளர வெங்காயம் / onion juice for hair in tamil:– பொதுவாக நாம் அனைவரும் வெங்காயத்தை உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்துவோம். வெங்காயம் சமையலுக்கு மட்டும் தான் பயன்படுகிறதா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. வெங்காயம் முடி வளர்ச்சிக்கு ஒரு சிறந்த மருந்தாக இப்பொழுது பயன்படுத்தப்படுகிறது. வெங்காயத்திற்கு நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது. வெங்காயம் சாறினை தலை முடிக்கு (onion juice for hair in tamil) பயன்படுத்துவதால் முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர செய்கின்றது.
சரி இந்த பதிவில் முடி அடர்த்தியாக வளர வெங்காயம் (onion juice for hair in tamil) சாறினை தலை முடிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க.
![]() |
வெங்காய சாற்றை முடியில் தடவும் முறை:
முடி வளர வெங்காயம் / onion juice for hair growth in tamil:- சிறிதளவு சிறிய வெங்காயத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
பின் அரைத்த இந்த கலவையை ஒரு பவுலில் நன்றாக வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
வெங்காயம் சாறை எடுத்து தலையில் நன்றாக தடவவும். விரல்களால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.
வெங்காய வாசனை முடியில் இல்லாதவாறு வாசனையுள்ள ஷாம்பூவால் தலை நன்றாக அலசவும். வாரம் 1 முறை, என்று 2 மாதங்களுக்கு இந்த முறையை பின்பற்றி நல்ல பலன் பெறலாம்.
வெங்காயம் சாறுடன் வேறு சில பொருட்களை சேர்த்தும் வலுவான மற்றும் பொலிவான கூந்தலை பெறலாம்.
![]() |
வெங்காயம் சாறுடன் தேன்:-
முடி வளர வெங்காயம் / onion juice for hair in tamil:- முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர 1/4 கப் வெங்காயம் சாறுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை தலை முடியின் வேர் பகுதியில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். பின் 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை ஷாம்பு போட்டு நன்றாக அலச வேண்டும்.
இந்த முறையை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கடைப்பிடித்து வர முடி உதிர்வு நீங்கி, முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
வெங்காய சாறுடன் கருவேப்பிலை:-
முடி வளர வெங்காயம் / onion juice for hair growth in tamil:- கருவேப்பிலை முடி வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வலிமையான மற்றும் கருமையான முடியினை வளர செய்யும்.
எனவே ஒரு கையளவு கருவேப்பிலையை நன்கு மைபோல் அரைத்து கொள்ளவும். பின் அரைத்த கருவேப்பிலையுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் வெங்காயம் சாறினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை தலையில் நன்றாக அப்ளை செய்து, ஒரு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும். ஒரு மணி நேரம் கழித்த பின் ஷாம்பு போட்டு தலையலச வேண்டும்.
![]() |
வெங்காயம் சாற்றுடன் ஆலிவ் ஆயில்:-
முடி வளர வெங்காயம் / onion juice for hair in tamil:- ஆலிவ் ஆயில் தலை முடிக்கு மசாஜ் செய்வதற்கு ஒரு சிறந்த பொருளாகும்.
இந்த ஆலிவ் எண்ணெயுடன், வெங்காயம் சாறினை சேர்த்து கலந்து தலை முடியில் அப்ளை செய்யும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
அதாவது மூன்று டேபிள் ஸ்பூன் வெங்காயம் சாறுடன் (onion juice for hair in tamil), 1 1/2 டேபிள் ஸ்பூன் வெங்காயம் சாறினை சேர்த்து நன்றாக கலந்து, தலை முடியில் நன்றாக அப்ளை செய்யுங்கள். இரண்டு மணி நேரம் வரை அப்படியே வைத்திருக்கவும். இரண்டு மணி நேரம் கழித்த பின் ஷாம்பு போட்டு தலையலச வேண்டும்.
இந்த மூன்று முறைகளில் ஏதேனும் ஒரு டிப்ஸினை தொடர்ந்து பாலோ செய்து வர முடி உதிர்வு நீங்கி, முடி அடர்தியாகவும் மற்றும் நீளமாக வளர ஆரம்பிக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | அழகு குறிப்புகள் |