குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம் | Good luck Baby Birth in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் அதிர்ஷ்டம் என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பொதுவாக வீட்டில் குழந்தை இருந்தாலே அதிர்ஷ்டம் தான் அது ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ எந்த குழந்தையாக இருந்தாலும் அதிர்ஷ்டம் தான். அந்த வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.
குழந்தை பிறப்பதே அதிஷ்டம் தான், இருந்தாலும் குழந்தை எந்த கிழமைகளில் பிறந்தால் அதிர்ஷ்டம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம். கிழமை என்பது உறவுகள் என்று பொருள், அனைத்து கிழமைகளும் ஒவ்வொரு கடவுளுடைய தொடர்புடையது என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது எந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் என்று பார்ப்போம்.
ஆண் குழந்தை எந்த கிழமையில் பிறந்தால் நல்லது.?
- திங்கட்கிழமை – ஆண் குழந்தை திங்கட்கிழமை பிறந்தால் செல்வாக்குடன் இருப்பான்.
- செவ்வாய்க்கிழமை – செவ்வாய்க்கிழமை பிறந்தால் கற்பனைத் திறன் மிக்கவன்.
- புதன் கிழமை – புதன் கிழமை பிறந்தால் ஆர்வமிக்கவனாய் திகழ்வான்.
- வியாழக்கிழமை – வியாழக்கிழமை பிறந்தால் தியாக மனப்பான்மை கொண்டவன்.
- வெள்ளிக்கிழமை – வெள்ளிக்கிழமை பிறந்தால் குடும்பத்தை தாங்கி பிடிப்பான்.
- சனிக்கிழமை – சனிக்கிழமை பிறந்தால் தந்திரசாலியாக திகழ்வான்.
- ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் எதிலும் வெற்றி பெறுவான்.
பெண் குழந்தைகள் எந்த கிழமையில் பிறந்தால் நல்லது.?
- திங்கட்கிழமை – பெண் குழந்தைகள் திங்கட்கிழமை பிறந்தால் அழகு மிக்கவர்களாகவும், சொல் வன்மையும் உடையவளாக திகழ்வாள்.
- செவ்வாய்க்கிழமை – செவ்வாய்க்கிழமை பிறந்த பெண் குழந்தைகள் சிரித்த முகத்துடன் இருப்பாள். எப்போதும், பிறருடன் பழகும்போது சிரித்த முகத்துடன் பழகுவாள்.
- புதன்கிழமை – புதன்கிழமை பிறந்த பெண் குழந்தைகள் ஆற்றலுடன், புகழுடனும் இருக்கும்.
- வியாழன்கிழமை – வியாழன்கிழமை பிறகும் பெண் குழந்தைகளுக்கு பயணம் செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
- வெள்ளிக்கிழமை – வெள்ளிக்கிழமை பிறந்த பெண் குழந்தைகள் செல்வ வளம் உடையவளாகவும், தெய்வீக ஆற்றல் நிறைந்தவளாகவும், பிறருக்கு உதவும் தன்மை கொண்டவளாகவும் திகழ்வாள்.
- சனிக்கிழமை – சனிக்கிழமை பிறந்த பெண் பிள்ளைகள் எப்போதும் உழைப்பாளியாகவும் செல்வ வளத்துடனும் இருப்பாள்.
- ஞாயிற்றுக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை பிறந்த குழந்தைகள் அறிவு திறன் மிக்கவளாகவும், சமூக சேவை அதாவது பொதுத்தொண்டு செய்யும் குணத்துடனும் இருப்பாள்.
பொதுவான பலன்கள்:
ஞாயிற்று கிழமை:-
ஒருவர் ஞாயிற்று கிழமை பிறந்தால் செல்வ செழிப்பு விருத்தியாகும், செல்வாக்கும் அதிகரிக்கும். மேலும் அவரது நடுப்பகுதி வாழ்க்கையில் மத்திய வயதில் அதாவது 40, 45 வயதிற்கு மேல் மிகுந்த பேரும், புகழுடன் மிகுந்த சந்தோடத்துடன் வாழ்வார்கள்.
எதிலும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையான குணமுள்ளவர்களாகவே இருப்பார்கள். ஞாயிற்று கிழமையில் பிறந்தவர்கள் மனசில் என்ன தோன்றுகின்றதோ அதைத்தான் செய்வார்கள், அதைத்தான் சொல்வார்கள்.
மற்றவர்கள் கடினம் என்று நினைத்து செய்யும் வேலையை இவர் போறபோக்கில் செய்து முடித்துவிடுவார்கள். ஞாயிற்று கிழமைக்கு உரிய கிரகம்.. சூரியன்.
திங்கள் கிழமை:-
திங்கள் கிழமைக்குரிய கிரகம் சந்திரன், திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் பேரும், புகழுடன் அனைவரும் மதிக்கக்கூடிய வாழ்க்கையை வாழ்பவர்கள். இவர் முயற்சிக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறுவார்கள். திங்கள் கிழமை பிறந்தவர்கள் வசீகரமான தோற்றத்தையும், நகைச்சுவை மிகுந்த பேச்சாலும் மற்றவர்களை கவர்ந்துவிடுவார்கள்.
இவருக்கு நண்பர்கள் அதிகம் இருப்பார்கள், இவர் வீட்டில் இருக்கும் நேரங்களை விட நண்பர்களிடம் பொழுது போக்கும் நேரம்தான் அதிகமாக இருக்கும்.
உதவி கேட்கும் அனைவர்க்கும் உடனே உதவி செய்யும் மனமுள்ளவர்கள். பின் தனக்கு செலவு செய்ய பணம் இல்லையே என அவதிப்படுவதும் உண்டு.
செவ்வாய் கிழமை:-
இந்த கிழமைக்கு உரிய கிரகம் செவ்வாய், செவ்வாய் கிழமையில் பிறந்தவர்கள் தனது கடுமையான உழைப்பினால் முன்னேற்றம் அடைந்து குறிப்பிட்ட இலக்கினை அடைவார்கள். உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்றும் அனைவராலும் பாராட்டப்படுவார்கள்.
இவர் வம்பு சண்டைக்கு போகமாட்டார் இருந்தாலும் வந்த சண்டையை விடவும் மாட்டார். இவர்களுடன் பேசும் பொழுது சற்று கவனமாக பேசவேண்டும். அதேபோல் இவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்.
இவருக்கு சற்று அடிக்கடி கோவம் வரும் என்றாலும், அனைவருடனும் அன்பாகவே இருப்பார்.
புதன் கிழமை:-
புதன் கிழமைக்குரிய கிரகம் புதன், புதன் கிழமை பிறந்தவர்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறப்பு வாய்ந்தவராக திகழ்வார்கள். சிறந்த கல்வி, கேள்வி, ஞானம், பட்டம் படிப்பு பெற்று உயர்ந்த பதவியை அடைவார்கள். புதன் கிழமையில் பிறந்தவர்கள் எதையாவது எழுதி கொண்டும், படித்து கொண்டும் இருப்பார்கள்.
தனக்கு தேவை இல்லை என்றாலும் அதை அறிந்துகொள்ள அதிக ஆர்வம் உடையவர்கள். இவர்கள் இயற்கையாகவே கொஞ்சம் கூச்சசுபாவம் உடையவர்கள், இவர்கள் நண்பர்களை கூட தேர்ந்தெடுத்துதான் பழகுவார்கள்.
ஆனால் ஒருவரிடம் நன்றாக பழகிவிட்டார்கள் என்றால் அந்த நட்புக்காக உயிரையே கொடுக்க தயங்கமாட்டார்கள்.
வியாழக்கிழமை:
வியாழக்கிழமைக்குரிய கிரகம் குரு பகவான், இந்த வியாழக் கிழமையன்று பிறந்தவர்கள் மற்றவர்களை நன்றாக மதிப்பார்கள். மேலும் இவர் மற்றவர்களுக்கு உதவி செய்து தியாக வாழ்க்கையை வாழ்பவர்கள், வியாழக் கிழமை பிறந்தவர்கள் நன்னெறிக்கு இருப்பிடமாக திகழ்வார்கள்.
எனவே இவர் தேவையில்லாத பிரச்சனைகளில் அவ்வளவு சீக்கிரமாக மாட்டிக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக தன்னடக்கம் கொண்டவராக இருப்பார்கள்.
இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் தெரிந்தவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக சிலர் இவரை கர்வம் பிடித்தவர்கள் என்று சொல்வார்கள்.
தெய்வ வழிபாடுகளிலும், ஆன்மிக சொற்பொழிவுகளை கேட்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருப்பார்கள். வாழ்க்கையை குறித்து தெளிவான திட்டமிடுதலும், முறையான அணுகுமுறையும் இவரை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
வெள்ளி கிழமை:-
வெள்ளி கிழமைக்குரிய கிரகம் சுக்கிரன், வெள்ளி கிழமை பிறந்தவர்கள் வாழ்க்கையில் சகல சுகங்களையும் அனுபவிக்க பிறந்தவர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்பவர்கள். எனவே இவர்கள் மனதில் எதனை விரும்புகிறார்களோ அதனை எந்த சூழ்நிலையிலும் அடைந்தே தீருவார்கள். இவர்கள் காலில் சக்கரம் கட்டாதவாறு அலைந்து திரிந்து சம்பாரித்தாலும் இவர்களுடைய உழைப்பு முழுவதும் மற்றவர்களையே போய் சேரும். இவர்கள் புகழ்ச்சியை அதிகம் விரும்புபவர் என்பதால் மற்றவர்களை எளிதாக நம்பிவிடுவார்கள். அதேபோல் அதிக தெய்வ நம்பிக்கை கொண்டவராக திகழ்வார்கள். பொதுவாக பெண் குழந்தைகள் வெள்ளி கிழமையில் பிறந்தால் அந்த குழந்தை வளர வளர செல்வம் பெருகும் என்று சொல்வார்கள்.
சனி கிழமை:-
இந்த கிழமைக்குரிய கிரகம் சனி பகவான், சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு அதிகளவு சமயோஜித புத்தி உள்ளவராக திகளப்படுவார். இவர்கள் தூங்கினால் கும்பகர்ணன் போல் தூங்கிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் எழுந்து நின்றாள் இந்திரஜித் போன்றவர்களாக திகழ்வார்கள். நண்பர்களுக்கு எதையும் செய்யும் எண்ணம் கொண்டவராக திகழ்வார்கள். மற்றவர்களிடம் இருந்து எப்பொழுது வேறுபட்டவர்களாவே இருப்பார்கள். ஆனால் அனைவரிடமும் எப்பொழுதும் அன்பாகவே இருப்பார்கள். இதனால் இவர்களை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் |
![]() |
![]() |
![]() |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |