மிதுன ராசி குணங்கள்..! Mithuna Rasi Characteristics in Tamil Language..!
Mithuna Rasi Characteristics in Tamil:- வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம் பதிவில் மிதுன ராசிக்காரர்களின் பொதுவான குணங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. இரட்டையர் சின்னத்தில் பிறந்த மிதுன ராசி அன்பர்களின் அதிபதி புதன் பகவான் ஆவர். இவர்கள் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 3, 4ம் பாதங்களும், திருவாதிரை நட்சத்திரத்தில் 1,2,3,4 ம் பாதங்களும், புனர்பூசம் நட்சத்திரத்தில் 1,2,3-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மிதுன ராசிக்காரர்கள் ஆவர். சரி இவர்களின் பொதுவான குணங்களை பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
மிதுனம் ராசி வாழ்க்கை எப்படி இருக்கும்?
Indraya Rasi Palan Mithuna Rasi |
Mithuna Rasi Palan 2024
மிதுனம் ராசி குணங்கள் – உடல் அமைப்பு:
பொதுவாக மிதுன ராசியில் பிறந்தவர்கள் உயரமான தோற்றமும், சதைப்பிடிப்பு இல்லாத ஒல்லியான உடல் அமைப்பும், நீள்வட்டம் முகமும், நேரான சற்று உயர்ந்த மூக்கும் கொண்டவர்களாக இருப்பார்கள், சற்று இரக்கம் கொண்ட பற்களும், விரிந்த மார்பும், மார்பில் ரோமமும், வயதான பிறகு தொப்பையும் கொண்டவர்களாக இருப்பார்கள். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு அழகான மீன் போன்ற கண்கள் இருக்கும், இவர்கள் உயரமாக இருந்தாலும் ஒல்லியான தேகத்தை கொண்டவர்களாகவே இருப்பார்கள். மேலும் அகன்ற நெற்றியும் கொண்டவர்களாக திகழ்வார்கள்.
Mithunam characteristics in tamil – நட்பும் பகையும் கொண்ட ராசிகள்:-
இந்த மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மேஷம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகிய ராசிகள் நட்பாகவும், மற்ற அனைத்து ராசிகளும் பகையாகவும் அமையும்.
மிதுன ராசி பொதுவான குணங்கள் 2024 – Mithuna Rasi 2024 Tamil
மிதுன ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் எதையாவது சிந்தித்து கொண்டே இருப்பார்கள். அந்த சிந்தனைகளை செயல்படுத்த வேண்டும் என்றும் நினைப்பார்கள். ஆழ்ந்த சிந்தனையுடையவர்கள் என்பதால் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுபவர்களாக இருப்பார்கள்.
சூழ்நிலைக்கு தகுந்தது போல் தங்களுடைய குணத்தை மாற்றி கொள்வார்கள். இவர்களுடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே இவர்களைப்பற்றி புரிந்துகொள்ள முடியும். அதே சமயத்தில் எளிதில் மாறக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
யாருக்கும் அடிபணியாத தன்மை இவர்களிடம் காணப்படும். எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சனையில் துல்லியமாக செயல்பட்டு அந்த பிரச்சனைக்கு நீதி வழங்குவார்கள்.
குறிப்பாக மிதுன ராசியில் பிறந்தவர்கள் பம்பரம் போல் சுழன்று வேலை செய்ப்பவர்களாக இருப்பார்கள். எப்பொழுதும் சோம்பேறி தனமாக இருக்க விரும்பமாட்டார்கள். இருப்பின் சில சனி பெயர்ச்சி நடைபெறும் பொழுது சோம்பலாக காணப்படுவார்கள்.
மிதுன ராசியில் பிறந்தவர்கள் யாருடைய தயவும் இல்லாமல் தனிமையாகவே வாழ நினைப்பார்கள். குறிப்பாக யாரிடமும் உதவி என்று கேட்டு நிக்கமாட்டார்கள். ஆனால் தங்களிடம் யாரவது உதவி என்று கேட்டு வந்தார்கள் என்றால் எந்த வேலையாக இருந்தாலும் சரி அதனை விட்டுவிட்டு அவர்களுக்கு உதவி செய்துவிட்டுத்தான் அடுத்த வேலையை செய்ப்பவர்களாக திகழ்வார்கள்.
இவர்களை நம்பி ஒரு காரியத்தை ஒப்படைத்தால் அதனை கண்ணும் கருத்துடன் பொறுப்பாக செய்து முடிப்பார்கள்.
இவர்கள் அதிக ஞாபக சக்தியுடைவர்கள் என்பதால் இவர்களுக்கு ஏதாவது ஒன்றை சொன்னால் அல்லது கேட்டால் அதனை உடனே புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்களாக திகழ்வார்கள்.
எந்த விஷயமாக இருந்தாலும் அவற்றில் நிதானமாக இருப்பார்கள். எப்பொழுதும் விழுப்புணர்வுடனும், கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருப்பார்கள். இவர்கள் விரும்பியதை வெறியுடன் அடையும் தன்மையுடைவர்கள்.
பார்ப்பதற்கு ரொம்ப இன்னசென்ட் போன்றவர்கள் போல் இருந்தாலும் இவர்களுடைய காரியங்களில் சாதித்து கொள்வதில் வல்லமை வாய்ந்தவர்கள்.
தன்மனதில் உள்ளதை வெளிப்படையாக சொல்பவர்கள், இவர்களுக்கு பிடிக்காத விஷயங்களில் என்றும் மூக்கை நுழைக்கமாட்டார்கள்.
பிறரை கேலியும் கிண்டலும் செய்வது என்பது இவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயமாகும்.
இவர்கள் ஆடம்பரமான வாழவே மிகவும் ஆசைப்படுவார்கள். அனைத்து சுகபோகங்களையும் பெற்று சுகபோகமாக வாழ நினைப்பார்கள். கருணை நிறைந்தவர்கள், பெற்றோர்களை அதிகம் நேசிப்பார்கள், உறவினர்களை மதிப்பார்கள், நண்பர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்வார்கள்.
மிதுன ராசிகார்கள் சேமிப்பில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். எவ்வளவு பணம் இருந்தாலும் அதை செலவு செய்து விடுவார்கள். இவர்கள் எதிலும் அவசரமாக முடிவு செய்து பின்பு சிக்கலில் மாட்டி கொள்வார்கள். கடின உழைப்பை தவிர்த்து புத்திசாலிதனமான வேலையையே தேர்ந்தெடுப்பார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் மத்தவர்களிடம் எவ்வளவு எளிதில் நட்பு வைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு எளிதில் அவர்களுக்கு அந்த நட்பு பிடிக்கவில்லை என்றால் அந்த நட்பினை முறித்து கொள்ளவும் தயங்கமாட்டார்கள்.
இவர்களுக்கு பத்தாம் அதிபதி குருபகவான் இருப்பதால் இவர்கள் ஒரே இடத்தில் பணிபுரிவது என்பது மிகவும் கடினம். கலை சார்ந்த துறைகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். கலை சம்பந்தப்பட்ட துறைகளில் அதிக நாட்டம் இருக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் அழுத்தமான மனம் படைத்தவர்கள் என்பதால் யாரிடமும் இவர்களுடைய ரகசியங்களை பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். நல்லவர்களிடம் நல்லவர்களாகவும், கெட்டவர்களிடம் கெட்டவர்களாகவும் பழகும் தன்மை கொண்டவர்கள்.
மிதுன ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு:-
அலுவலக மற்றும் அரசியலை அரைவே விரும்பாத தாங்கள் பதவிக்காக ஆசைப்பட்டு மற்றவர்களிடம் சண்டை போட மாட்டிர்கள். சொந்தமாக தொழில் துவங்க அதிக ஆர்வம் இருக்கும். அதேபோல் எங்கு தாங்கள் தனியாக வேலை செய்ய முடியுமோ, எங்கு தாங்கள் விரும்பியதை விரும்புபடி செய்ய முடியுமோ அந்த வேலைகளில் மட்டுமே அதிக நாட்டம் இருக்கும்.
மிதுனம் ராசி குணங்கள் – உடல் நலம்:-
தலைவிதியை விட உங்களின் ஆயுள் காலத்தை தீர்மானிப்பது என்பது நீங்கள் தான் என்று கூறலாம். நீண்ட நாட்களுக்கு வாழும் வாழ்க்கை தங்களுக்கு உள்ளது. அப்படி தாங்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசை பட்டால் நுரையீரலில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மிதுன ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை:-
காதல் வாழ்க்கையை பொறுத்த வரை உங்களின் இளமை காலத்திலேயே வெகு தீவிரமான காதல் வரும். காதலில் பலமுறை தோல்வி அடைந்தாலும் சிறந்த வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பீர்கள்.
இவர்களுக்கு திருமணம் என்பது மிகவும் தாமதமாக நடைபெற்றாலும் மிகவும் சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையும்.
மிதுன ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை:-
திருமண வாழ்க்கையை பொறுத்தவரை ஆண்களுக்கு சுக்கிரன், பெண்களுக்கு செவ்வாய் இந்த கிரகங்கள் மட்டும் நல்ல நிலையில் அமைந்திருந்தால் இவர்களுக்கு அமையும் வாழ்க்கை துணை அழகும் அந்தசும் நிறைந்திருப்பார்கள். இடைஇடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இவர்களுக்குள் தோன்றினாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைத்துவிடுவார்கள். அதாவது இவருக்கு என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வெளி பார்வைக்கு ஒற்றுமையாகவே தெரிவார்கள்.
மிதுன ராசிக்காரர்களின் கல்வி – mithuna rasi pothuvana rasi palan
கல்வியை பொறுத்தவரை தங்களின் கூர்மையான புத்தியினால் தாங்கள் எப்பொழுதும் முன்னிலையில்தான் சிறந்து விளங்குவீர்கள். கடின உழைப்பின் மூலம் ஒவ்வொரு செயல்களிலும் தாங்கள் வெற்றி பெற முடியும்
இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். | ஆன்மீக தகவல்கள் |