தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்கள்..!

Powerful Amman Temples in Tamilnadu

தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்கள்..! Powerful Amman Temples in Tamilnadu..!

Powerful Amman Temples in Tamilnadu: பெண் தெய்வங்களை அதிகம் வணங்கும் நாடு நம் நாடு. பெண் தெய்வங்களில் மிகவும் புகழ் பெற்ற தெய்வம் அம்மன். நம்முடைய தமிழ்நாட்டில் சக்தி வாய்ந்த பல அம்மன் கோவில்கள் உள்ளன. அவற்றில் இங்கு மிகவும் புகழ்பெற்ற 10 அம்மன் கோவில்களை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!

Powerful Amman Temple in Tamilnadu..!

1. மீனாட்சி அம்மன் கோவில் மதுரை:-

madurai meenatchi amman temple

அம்மன் கோவில்கள் / Powerful Amman Temples in Tamilnadu:-

மதுரையின் மிக முக்கிய அடையாளம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவில் வைகை ஆற்றின் தென் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது. சுந்தரேஸ்வரர் என்ற பெயரிலுள்ள சிவபெருமானின் மனைவி மீனாட்சியின் பெயரிலேயே குறிப்பிடப்படுவது மற்றும் பெண் சக்தியை முன்னிறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இங்கு முதல் பூஜை மீனாட்சி அம்மனுக்கே.

முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சிறப்பு..!

2. காமாட்சி அம்மன் கோவில் காஞ்சிபுரம்:-

kamatchi amman temple kanchipuram

அம்மன் கோவில்கள் / Powerful Amman Temples in Tamilnadu:-

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது காமகோடி சக்தி பீடமாகும். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

3. சமயபுரம் மாரியம்மன் கோவில்:-

trichy samayapuram temple

அம்மன் கோவில்கள் / Powerful Amman Temples in Tamilnadu:-

சமயபுரம் மாரியம்மன் கோவில் திருச்சி மாவட்டத்தில் கண்ணபுரம் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் பூச்சொரிதல் என்னும் நிகழ்வு மிகவும் பிரபலம். மாசி மாதத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள். மேலும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரபலம். ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் செவ்வாய் அன்று சித்திரை தேரில் பவனி வந்து அம்மன் அருள்பாலிப்பதை பார்க்க 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள்.

காஞ்சிபுரம் ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு..!

4.புன்னை நல்லூர் மாரியம்மன் கோவில்:-

punnainallur mariamman kovil

அம்மன் கோவில்கள் / Powerful Amman Temples in Tamilnadu:-

புன்னை நல்லூர் மாரியம்மன் கோவிலானது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக புற்று வடிவில் அருள்பாலிக்கிறார். இங்கு அம்மன் துர்க்கை, மாரியம்மன் அதாவது முத்துமாரி எனவும் அழைக்கப்படுகிறார்.

5.மாசாணியம்மன் திருக்கோவில், பொள்ளாச்சி:-

masani amman pollachi

அம்மன் கோவில்கள் / Powerful Amman Temples in Tamilnadu:-

அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி, ஆனைமலையில் அமைந்துள்ளது. இங்கு தை மாதத்தில் 18 நாள்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இங்குள்ள அம்பாள் மயானத்தில் சயனித்த நிலையில் காட்சி தருவதால் மயானசயனி என்றழைக்கப்பட்டாள்.

6. பண்ணாரி மாரியம்மன் கோவில்:-

bannari amman erode

அம்மன் கோவில்கள் / Powerful Amman Temples in Tamilnadu:-

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் சுயம்புவாக அருள் பாலிப்பதால் விபூதி கிடையாது. புற்று மண்தான் பிரசாதமாக தரப்படுகிறது. இங்கு 20 நாள் கொண்டாடப்படும் பங்குனி குண்டம் திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

7. பகவதி அம்மன் கோவில் மண்டைக்காடு:-

bhagavathi amman temple in kanyakumari

அம்மன் கோவில்கள் / Powerful Amman Temples in Tamilnadu:-

அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது. பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கோவில் இது. 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டி கொண்டிருக்கும் புற்றுதான் பகவதி அம்மன். இங்கு நடைபெறும் மாசித்திருவிழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரள்வார்கள்.

8.ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில், கொல்லங்கோடு:-

Sree Badhrakali Temple in kollemcode

அம்மன் கோவில்கள் / Powerful Amman Temples in Tamilnadu:-

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

இங்கு நடைபெறும் தூக்க நேர்ச்சை மிகவும் பிரபலம். தூக்க நேர்ச்சையில் 45 அடி உயர தூக்க வில்லில் குழந்தையை சுமந்தபடி கோயிலை வலம் வருவார்கள். இங்கு அம்மனுக்கு இரண்டு கோவில்கள் இருப்பது சிறப்பு.

பல்லி விழும் பலன் – நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா

9.ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் மேல்மலையனூர்:-

sri angala parameswari temple melmalayanur

அம்மன் கோவில்கள்:-

அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் விழுப்புரம் மாவட்டத்தில் மேல்மலையனூரில் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இங்குள்ள தேவியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள்.

கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு வருகின்றனர். அங்காள பரமேஸ்வரிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் இருந்தாலும் மேல்மலையனூர் ஆலயமே மிக முக்கியமான ஆலயமாகும்.

10.தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில்:-

devi kanyakumari amman temple

அம்மன் கோவில்கள்:

தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கடல்கள் சங்கமிக்கும் குமரி கடற்கரையின் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் கன்னி அம்மன்.

51 சக்தி பீடங்களில் இது தேவியின் முதுகு பகுதி விழுந்த சக்தி பீடமாகவும் கருதப்படுகிறது. இங்கு உள்நாட்டு பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பக்தர்களும் தொடர்ந்து வருகை புரிகிறார்கள்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்