இந்த வார ராசிபலன் | Vara Rasi Palan

Vara Rasi Palan 2021

Vara Rasi Palan 2021

இந்த வாரம் எப்படி இருக்கும்? நாம் நினைக்கும் காரியங்கள் நடக்குமா? நமது எண்ணங்கள் நிறைவேறுமா? உங்களின் இது போன்ற கேள்விகளுக்கு பதில் காண திங்கள் முதல் ஞாயிறு வரையிலான வார ராசி பலன்களை படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த வார ராசிபலன் படிப்பவர்கள் நீங்களாக இருந்தால் தங்களுக்கான பதிவு தான் இது. இந்த பதிவில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான வார ராசி பலன்களை பதிவு செய்துள்ளோம் அந்த வகையில் ஜூலை 26 முதல் ஆகஸ்டு 01 வரை.. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன் பதிவு செய்துள்ளோம். அவற்றில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை படித்து அதன்படி நடந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியானதாக அமையும். சரி வாங்க ஒவ்வொன்றாக இப்பொழுது 12 ராசிகளுக்கான இந்த வார ராசி பலன்களை படிக்கலாம்.

மேஷம்:

Vara Rasi Palan 2021 – இந்த வாரம் உங்களுக்கு தேவையான அளவிற்கு பணவரவு இருந்தாலும் சேமிக்க முடியாத அளவிற்கு செலவுகளும் ஏற்படும். கடன் கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனமாக இருக்கவும். தந்தை வழி உறவினர்களால் உங்களுக்கு பலன் கிடைக்கும். வியாபாரிகளுடன் சில பிரச்சனை வரக்கூடும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். தங்கள் பிள்ளைகள் மூலம் பணவரவு வருவதற்கு வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நாள்கள்:04, 07
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6
சந்திராஷ்டம நாள்கள்:

 

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இன்றைய ராசி பலன்கள் 2021
நாளைய ராசி பலன் | Tomorrow Rasi Palan in Tamil

ரிஷபம்:

இந்த வாரம் பணவரவு உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். வெளிப்பயணத்தின் போது கவனத்துடன் இருக்கவும். தங்கள் பிள்ளைகளால் சில பிரச்சனைகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க அதிகமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும். பக்கத்து வீட்டாரின் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:02, 05
அதிர்ஷ்ட எண்கள்: 7, 9
சந்திராஷ்டம நாள்கள்:

மிதுனம்:

Vara Rasi Palan 2021 – இந்த வாரம் திருமண முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் அதிகரிக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையாக இருப்பது நல்லது. இந்த வாரம் வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் அதிகமாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த சுப காரியம் நடக்க வாய்ப்புள்ளது. இந்த வாரம் பணவரவும் மனதிற்கு திருப்திகரமாக இறுக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:5, 6
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சந்திராஷ்டம நாள்கள்:

கடகம்:

இந்த வாரம் ஓரளவுக்கு நன்மைகள் கிடைக்கும். தங்கள் பிள்ளைகளின் உடல்நலத்தில் சற்று கவனமாக இருக்கவும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காது. தன் கணவருடன் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் அணைத்தும் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்ப நிர்வாகத்தைக் கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நாள்கள்:3, 4
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
சந்திராஷ்டம நாள்கள்:

சிம்மம்:

Vara Rasi Palan 2021 – சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணவரவு அதிகமாக இருக்கும். திருமண வயதில் உள்ள பிள்ளை அல்லது பெண்ணுக்கு வரன் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். இந்த வாரம் தாயின் உடல்நலனில் அதிகமாக கவனம் தேவை. கடையை வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கலாம். வாடிக்கையாளருடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தை கட்டிக்காக்கும்  பெண்களுக்கு உற்சாகமான வாரம். புகுந்த வீட்டு உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி, அவர்களுடன் உறவு சுமுகமாகும்.

அதிர்ஷ்ட நாள்கள்:3, 5
அதிர்ஷ்ட எண்கள்:  1, 4
சந்திராஷ்டம நாள்கள்:

கன்னி:

கன்னி ராசி அன்பர்களுக்கு இந்த வாரம் பொருளாதாரம் மனதிற்கு திருப்திகரமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் அதிகரிக்கும். தாய்வழியை சேர்ந்த உறவு முறைகளால் வீண் குழப்பங்கள் ஏற்படும். சிலருக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்மீக வழிபாடுகள் செய்ய வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் லாபமானது சுமாராகத்தான் இருக்கும். மற்றவர்களிடம் கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமம் ஏற்பட்டாலும் அதனை சமாளித்துவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நாள்கள்:6 , 7
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
சந்திராஷ்டம நாள்கள்:

துலாம்:

Vara Rasi Palan 2021 – இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு உற்சாகமாக இருக்கும். புதிதாக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். வெளியில் எதிர்பார்த்த நல்ல தகவல் வந்தடையும். வீட்டிற்கு உறவினர்களின் வருகை உங்களுக்கு பலன் தருவதாக இருக்கும். வியாபாத்ல் விற்பனை இருந்தாலும் அதற்கேற்ற லம்பம் கிடைக்காது. வாரப் பிற்பகுதியில் பிள்ளைகள் மூலம் எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

அதிர்ஷ்ட நாள்கள்:7, 8
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
சந்திராஷ்டம நாள்கள்:ஆகஸ்ட் 2, 3

விருச்சிகம்:

இந்த வாரம் புதிதாக எடுக்கும் முயற்சிகளை தள்ளிப்போடவும். உறவு முறைகளுடன் மன வருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப விஷயத்திற்காக வெளிப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக கிடைக்கும். வியாபாரிகளால் ஏற்பட்ட அனைத்து இடையூறுகளும் நீங்கும். தாய்வழியை சேர்ந்த உறவினர்களால் அதிகமாகப் பொருள் சேர்வதற்கு வாய்ப்புள்ளது.

அதிர்ஷ்ட நாள்கள்:2, 4
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7
சந்திராஷ்டம நாள்கள்:ஆகஸ்ட் 4, 5, 6 பிற்பகல் வரை

தனுசு:

Vara Rasi Palan 2021 – பணவரவு இந்த வாரம் உங்கள் மனதிற்கு திருப்திகரமாக இருக்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் இருந்தாலும் போதியதளவு பணவரவு இருப்பதால் பிரச்சனைகளை சமாளித்துவிடுவீர்கள். கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். புதிதாக முதலீடு செய்யும்போது நன்றாக யோசித்து முடிவு எடுக்கவும். சகோதர வகையில் உங்களுக்கு பயன் கிடைக்கும் வாரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட நாள்கள்:04, 06
அதிர்ஷ்ட எண்கள்: 01, 07
சந்திராஷ்டம நாள்கள்:ஆகஸ்ட் 6 பிற்பகல் முதல் 7, 8

மகரம்:

இந்த வாரம் உங்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிகமாக பணவரவு இருக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்தடையும். திருமண முயற்சிகளில் ஏற்பட்டிருந்த அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து திருமணம் கூடி வரும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தந்தை வழியை சேர்ந்த உறவினர்களால் அதிகமாக செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும், லாபமும் எதிர்பார்த்த படியே மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு மனதில் சிறு சிறு கஷ்டங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட நாள்கள்:05, 06
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7
சந்திராஷ்டம நாள்கள்:

கும்பம்:

Vara Rasi Palan 2021 – போதுமான அளவு பணவரவு உங்களுக்கு திருப்திகரமாக  இருக்கும். வாழ்க்கைத்துணை வழியால் உங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். தடைபட்டு வந்த சுப காரியம் மீண்டும் கைக்கூடி வரும். வெளியில் கொடுத்து வராது என்ற பணம் கைக்கு வந்தடையும். வியாபாரத்தில் கடுமையாக உழைத்தால் மட்டுமே விற்பனையை அதிகரிக்க முடியும். பணியாளர்களுடைய ஒத்துழைப்பு உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த வாரம் கணவருடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையாக இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நாள்கள்:07, 08
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
சந்திராஷ்டம நாள்கள்:

மீனம்:

பணவரவு போதியதளவு இருக்கும். இந்த வாரம் தேவையில்லாத செலவுகள் ஏற்படாது. உங்களை வேண்டாம் என்று விலகி சென்ற உறவினர்கள் மீண்டும் தேடி வருவார்கள். திருமணத்திற்காக எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தந்தையுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கும். வியாபாரத்தில் லாபமும், விற்பனையும் அதிகமாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக சிலருக்கு வெளிப்பயணம் ஏற்படும். சிலருக்கு இந்த வாரம் மற்றவர்களிடம் கடன் வாங்க வாய்ப்பு உண்டாகும்.

அதிர்ஷ்ட நாள்கள்:2, 3
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்கள்:

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்