Vara Rasi Palan 2022
இந்த வாரம் எப்படி இருக்கும்? நாம் நினைக்கும் காரியங்கள் நடக்குமா? நமது எண்ணங்கள் நிறைவேறுமா? உங்களின் இது போன்ற கேள்விகளுக்கு பதில் காண திங்கள் முதல் ஞாயிறு வரையிலான வார ராசி பலன்களை படித்து தெரிந்து கொள்ளலாம். இந்த வார ராசிபலன் படிப்பவர்கள் நீங்களாக இருந்தால் தங்களுக்கான பதிவு தான் இது. இந்த பதிவில் திங்கள் முதல் ஞாயிறு வரையிலான வார ராசி பலன்களை பதிவு செய்துள்ளோம் அந்த வகையில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 3 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன் பதிவு செய்துள்ளோம். அவற்றில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை படித்து அதன்படி நடந்துகொள்வதன் மூலம் உங்களுக்கு இந்த வாரம் மிகவும் மகிழ்ச்சியானதாக அமையும். சரி வாங்க ஒவ்வொன்றாக இப்பொழுது 12 ராசிகளுக்கான இந்த வார ராசி பலன்களை படிக்கலாம்.
Intha Vara Rasi Palan
மேஷம்:
Vara Rasi Palan 2022 – இந்த வாரம் வளமான வாரமாக இருக்கும். இந்த வாரம் பண வரவுக்கு குறைவு இருக்காது. திருமணம் வயதில் உள்ள பெண்களுக்கு நல்ல முறையில் வரன் அமையும். கணவன் மனைவிக்குள் சிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். அலுவலகத்தில் இருந்து வந்த பண நெருக்கடி இப்போது இருக்காது. பெண்களுக்கு இந்த வாரம் நன்றான வாரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 31, ஏப் 1 |
அதிர்ஷ்ட எண்கள்: | 4, 7 |
சந்திராஷ்டம நாள்கள்: | —– |
இன்றைய ராசி பலன்கள் 2022 |
நாளைய ராசி பலன் | Tomorrow Rasi Palan in Tamil |
ரிஷபம்:
intha vara rasi palan: இந்த வாரம் நம்பிக்கை நிறைந்து காணப்படுவீர்கள். செலவுகளை சமாளிக்க நினைத்த பணம் கைக்கு வரும். இந்த வாரம் ஆன்மீகத்தில் முழு ஈடுபாடுடன் இருப்பீர்கள். தந்தை நீங்கள் நினைத்ததை பூர்த்தி செய்வார். அலுவலகத்தில் வேலை செய்ப்பவர்களுக்கு இந்த வாரம் அதிக பணிச்சுமை இருக்கும். வியாபாரம் நினைத்த படி இருக்கும். ஊதிய வாடிக்கையாளரால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பெண்களுக்கு பொறுப்புகளும் சலுகைகளும் வேலையிடத்தில் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 30, ஏப் 2 |
அதிர்ஷ்ட எண்கள்: | 5, 7 |
சந்திராஷ்டம நாள்கள்: | —– |
மிதுனம்:
Vara Rasi Palan 2022 – மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக இருக்காது. நிதி நிலைமை பொறுத்தவரை செலவிற்கு ஏற்ற வரவு கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெரியோர்களின் ஆலோசனை அவசியம். பயணத்தின் போது கவனமாக இருக்கவும். பணியிட சூழல் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் குழப்பம் வந்து நீங்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: | ஏப் 2, 3 |
அதிர்ஷ்ட எண்கள்: | 6, 9 |
சந்திராஷ்டம நாள்கள்: | 28, 29 காலை வரை |
கடகம்:
intha vara rasi palan: இந்த வாரம் யோசித்து செயல்பட வேண்டும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் வழியில் புதிய முயற்சிகலில் ஈடுபட வேண்டாம். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் சுமுகமாக முடியும். சிலருக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பொருள், பண சேர்க்கை கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த பண சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களை மதிப்பார்கள் இதனால் அலுவலகத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: | ஏப் 1, 2 |
அதிர்ஷ்ட எண்கள்: | 3, 5 |
சந்திராஷ்டம நாள்கள்: | 29 காலை முதல் 30, 31 |
சிம்மம்:
Vara Rasi Palan 2022 – சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்காது. உடன் பிறந்தவர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். நிதி நிலைமை பொறுத்தவரை குறைவு இருக்காது. அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகமாக இருக்கும். நீங்கள் நினைத்த படி பதிவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுப்படுத்த நினைப்பவர்கள் இப்போது அதை செய்யலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 28,29 |
அதிர்ஷ்ட எண்கள்: | 2, 6 |
சந்திராஷ்டம நாள்கள்: | ஏப் 1, 2 மாலை வரை |
கன்னி:
intha vara rasi palan: இந்த வாரம் பண வரவு இருந்தாலும் அதற்கேற்ற செலவு அதிகரிக்கும். அதனால் கடன் வாங்க நேரிடும். அலுவலகத்தில் பனிச்சுமை அதிகரிக்கும் அதனால் சோர்ந்து போவீர்கள். பதவி உயர்வு மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டில் மரியாதை கூடும் அதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் தேவையை அறிந்து கணவன் பூர்த்தி செய்வார்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 28,31 |
அதிர்ஷ்ட எண்கள்: | 7, 9 |
சந்திராஷ்டம நாள்கள்: | 2 மாலை முதல் 3 |
துலாம்:
Vara Rasi Palan 2022 – துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். கணவன் மனைவி உறவுக்குள் நல்லிணக்கம் காணப்படும். தந்தை மற்றும் நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும். அலுவலகத்தில் பணியில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரம் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் மகிழ்ச்சியான வாரமாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 31, ஏப் 2 |
அதிர்ஷ்ட எண்கள்: | 5, 6 |
சந்திராஷ்டம நாள்கள்: | —- |
விருச்சிகம்:
இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக இருக்கும். அதிகம் ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்கள் திறமையை வெளிக்காட்ட இந்த வாரம் நன்றான வாரமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று இந்த வாரம் கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரம் லாபம் சுமாரா இருந்தாலும் பற்று வரவில் பிரச்சனையும் இருக்காது. பெண்களுக்கு இந்த வாரம் சற்று சிரமாக இருந்தாலும் சமாளிக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 29, ஏப் 1 |
அதிர்ஷ்ட எண்கள்: | 1, 7 |
சந்திராஷ்டம நாள்கள்: | —— |
தனுசு:
Vara Rasi Palan 2022 – தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக இருக்கும். இந்த வாரம் தங்களுக்கு பொருள் சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தை சாதகமான முடிவுக்கு வரும். வாழ்க்கை துணையிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியிடத்தில் வேலையை செய்யும்பொழுது சற்று கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்கவும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 28, 30 |
அதிர்ஷ்ட எண்கள்: | 2,4 |
சந்திராஷ்டம நாள்கள்: | —- |
மகரம்:
இந்த வாரம் எதிர்பார்த்ததை விட பணவரவு நன்றாக இருக்கும். நீண்ட நாளாக கைக்கு வர வேண்டி இருந்த பணம் கைக்கு வரும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்து வந்த மன கசப்புகள் நீங்கும். பெண்களுக்கு இந்த வாரம் உற்சாகம் தரும் நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த வாரம் பெண்கள் பொறுமையாகவும், விட்டுக்கொடுத்து போவது நல்லது.
அதிர்ஷ்ட நாள்கள்: | 29, ஏப் 2 |
அதிர்ஷ்ட எண்கள்: | 3, 6 |
சந்திராஷ்டம நாள்கள்: | — |
கும்பம்:
Vara Rasi Palan 2022 – இந்த வாரம் வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபர்கள் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எதிர்பார்த்த நல்ல செய்தி இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. இந்த வாரம் அலுவலகத்தில் உங்கள் திறமையை அதிகம் வெளிப்படுத்த வேண்டி இருக்கும். வியாபாரத்தில் நினைத்த லாபம் கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு இந்த வாரம் பண வரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 29, 31 |
அதிர்ஷ்ட எண்கள்: | 2, 5 |
சந்திராஷ்டம நாள்கள்: | ——- |
மீனம்:
இந்த வாரம் நன்றான வரமாக இருக்கும். எந்த முடிவையும் யோசித்து முடிவு எடுப்பது நல்லது. வாரத்தொடக்கத்தில் பண செலவில் திட்டமிட்டு செயல்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணியில் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபம் கிடைக்காது. இந்த வாரம் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று சிரமான வாரமாக இருக்கும். உங்கள் பிரச்சனை அறிந்து கணவன் பக்கபலமாக இருப்பார்.
அதிர்ஷ்ட நாள்கள்: | 30, ஏப் 1 |
அதிர்ஷ்ட எண்கள்: | 2,7 |
சந்திராஷ்டம நாள்கள்: | —— |
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |