இதுதான் சர்க்கரை சத்தும், கொழுப்பு சத்தும் இல்லாத உணவுகள் !!!

சர்க்கரை நோய் குணமாக மற்றும் கொழுப்பு குறைய (Low sugar fruits and vegetables)

சுகர் வந்துட்டேனு கவலைப்படுறீங்களா? இனிமேல் நிம்மதியா ஆசைப்பட்ட உணவுகளை சாப்பிட முடியாதுன்னு கவலைப்படுவீங்க. அதுவும் மருத்துவரிடம் போனீங்கன்னா மருத்துவர் பரிந்துரைப்பது என்னவென்றால் முக்கியமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது என்று பரிந்துரைப்பார்கள்.

எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சர்க்கரை சத்தும், கொழுப்பு சத்தும் இல்லாத உணவுகளை பற்றி இவற்றில் காண்போம்.

சர்க்கரை நோய் குணமாக – லெட்டூஸ் கீரை (Low sugar vegetables):

இது கீரை வகையாகும், இவற்றை அதிகமாக சாலட்களில் பயன்படுத்தப்படுகிறது.

இது அதிகமாக எவ்வளவு சாப்பிட்டாலும் உங்களது இடுப்பு எடை அதிகரிக்கவே அதிகரிக்காது.

இவற்றில் ஃபோலேட் மற்றும் மாங்கனீஸ் ஆதரவாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இவற்றில் அத்தியாவசிய வைட்டமின்களான A, C, D, E மற்றும் K உள்ளது.

இந்த லெட்டூஸ் கீரை 100 கிராமில் 0.8 கிராம் சர்க்கரை மட்டுமே உள்ளது. எனவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த லெட்டூஸ் கீரையை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்வதினால் சர்க்கரை நோய் குணமாக பெரிதும் உதவும்.

தோள்பட்டை வலி நீங்க எளிய வீட்டு வைத்தியங்கள்..!

சர்க்கரை நோய் குணமாக – அஸ்பாரகஸ் (Low sugar vegetables):

அஸ்பாரகஸில் உள்ள மருத்துவ குணத்தால் பலவகையான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

முக்கியமாக அஸ்பாரகஸில் சுத்தமாக சர்க்கரை சத்து கிடையாது. மேலும் உடலுக்கு நன்மையளிக்க கூடிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால் அதிக பயனளிக்கக்கூடியது.

குறிப்பாக உயிரணு வளர்சிதை மாற்றத்திற்கு பயன்படுகிறது.

இதில் வைட்டமின் A, C, E, K, B6 மற்றும் இரும்பு, காப்பர், ஃபோலேட் போன்ற கனிமங்கள் உள்ளன. மேலும் இதில் நிறைய புரதச்சத்து உள்ளது.எனவே சர்க்கரை நோயாளிகள் தாராளமாக இந்த அஸ்பாரகஸை உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ள சர்க்கரை நோய் குணமாக வழிவகுக்கும்.

கொழுப்பு குறைய – ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் கொழுப்பு சத்து இல்லை மற்றும் சர்க்கரை சத்து குறைந்த அளவு(Low sugar vegetables) உள்ளது.

இவற்றில் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

ப்ரோக்கோலியில் வைட்டமின்கள் A, C, D, E, K, உணவு நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட மற்ற சத்துக்கள் கொண்டது.

சர்க்கரை நோய் குணமாக – முளைகட்டிய பயறு:

ப்ருசல் ஸ்ப்ரவுட்ஸில் (முளைகட்டிய பயறு) இவற்றில் சுத்தமாக கொழுப்பு சத்து இல்லை, ஆனால் குறைந்த அளவு சர்க்கரை சத்து உள்ள தானிய வகையாகும்.

இவற்றில் தாவர ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் இந்த சர்க்கரை சத்து குறைவாக உள்ள மற்றும் கொழுப்பு சத்து இல்லாத பயறு தினமும் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமாகும்.

சர்க்கரை நோய் குணமாக – முட்டைகோஸ் (Low sugar vegetables):

முட்டைகோஸ் சர்க்கரை சத்து மற்றும் கொழுப்பு சத்து இல்லாத உணவு பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இவற்றில் குறைந்த அளவில்தான் சர்க்கரை சத்து மற்றும் கொழுப்பு சத்து உள்ளது.

மேலும் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

முட்டைக்கோஸில் வைட்டமின்கள் A, C, D, E மற்றும் K உள்ளன.

மேலும் கால்சியம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் சோடியம் போன்ற இதர கனிமங்களைக் கொண்டுள்ளது.

கொழுப்பு குறைய – திராட்சை பழம் (Low sugar fruits):

திராட்சைப்பழம், இருமல் மற்றும் குளிர் ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த சிகிச்சையாகும். இந்த பழத்தில் உள்ள வைட்டமின் உங்களை  பாதுகாக்க உதவுகிறது. இந்த பழமும் சீரோ கொழுப்பு கொண்டுள்ளது. அதனால் நீங்கள் இதை சாப்பிட யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

சர்க்கரை நோய் குணமாக – அவகோடா (Low sugar fruits):

 

அவகோடாவில் அதிக ஊட்டசத்திகள் நிறைந்துள்ளது மற்றும் குறைந்த அளவிலேயே சர்க்கரை சத்து மற்றும் கொழுப்பு சத்து உள்ளது

குறிப்பாக நார் மற்றும் பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற கனிமங்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் வைட்டமின் E, A, K, B6 C  உள்ளது

அவகோடோவில் புரதம், காப்பர், ஃபோலேட்,  இதில் நிறைய சுகாதார நலன்கள் உள்ளன. குறிப்பாக, தோல் மற்றும் முடி சிகிச்சைகளுக்கு வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. எனவே சர்க்கரை நோய் குணமாக அதிகளவு அவகோடா பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

கால் விரல் நகம் சொத்தை காரணம் மற்றும் குணப்படுத்தும் முறை !!! முழு விளக்கம் !!!

சர்க்கரை நோய் குணமாக – பப்பாளிப்பழம் (Low sugar fruits):

 

பப்பாளிப்பழத்தில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இது மிகவும் சுவையாக இருக்கும், செரிமானத்தை மேம்மடுத்த மிகவும் உதவுகிறது.

மேலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

முக்கியமாக இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் கரோட்டின் இருப்பதால் புற்று நோயை தடுக்கும் வல்லமை பெற்றது.

இவற்றில் இருக்கும் சோடியம் கொழுப்பு சத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. எனவே சர்க்கரை நோய் வராமல் தடுக்க அதிகளவு பப்பாளிப்பழத்தை சப்பிலடம்

சர்க்கரை நோய் குணமாக – தக்காளி (Low sugar vegetables):

தக்காளியில் சர்க்கரை சத்து கிடையாது, ஆனால் குறைந்த அளவு கொழுப்பு சத்து உள்ளது.

இவற்றல் எலும்புகளுக்கு வலிமை அளிக்கக்கூடிய வைட்டமின் K உள்ளது.

ஆஸ்டியோகாலிசின் என்றழைக்கப்படும் நான்-கொலாஜன் புரதத்தை தூண்டுகிறது. இது ஒரு ஊக்கியாக செயல்பட்டு, கால்சியத்தை உங்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

தக்காளியில் கிட்டத்தட்ட அதிகளவு வைட்டமின் A உள்ளது. எனவே இரவு குருட்டு தன்மை மற்றும் பிற பிரச்சனைகளை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.

சர்க்கரை நோய் குணமாக – பீட்ரூட் (Low sugar vegetables):

பீட்ரூட் பலவகையான நோய்களை குணப்படுத்தும் தன்மைவாய்ந்தது.

குறைந்த சர்க்கரை பட்டியலில் இதுவும் ஒன்றாகும். பொட்டாசியம், இரும்பு, நார்  போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன.

பீட்ரூட்டில் இனிப்பு சுவை உள்ளது. எனவே, நீங்கள் இனிப்புகள் மற்றும் பிற சர்க்கரை உணவுகள் தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் அதற்கு பதிலாக பீட்ரூட் சாப்பிடலாம். எனவே சர்க்கரை நோய் வராமல் தடுக்க உணவில் அதிகளவு பீட்ருட்டை சேர்த்துக்கொள்ளுங்கள்.

காலை வெயில் நல்லதா?… மாலை வெயில் நல்லதா?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> Whatsapp Group Link.