Brown Rice Benefits
கைக்குத்தல் அரிசி (Brown Rice Benefits) என்பது பழுப்பு அரிசி எனப்படும், இந்த அரிசி மிக குறைவாக தோல் நீக்கப்பட்டு நெல்லின் வெளிப்புற தோலை நீக்கிய பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த கைக்குத்தல் அரிசி (Brown Rice Benefits) மிக சுவையாகவும், வாயில் மெல்லும் தன்மை கொண்டது. இந்த கைக்குத்தல் அரிசியில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது..! ஆனால் மற்ற அரிசியை விட நீண்ட நேரம் வேக கூடியது.
கைக்குத்தல் அரிசியில் (kaikuthal arisi tamil) ஊட்டச்சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துகள் உள்ளது.
மற்றும் இவற்றில் உடல் எடையை குறைக்கும் நார்ச்சத்து மற்றும் பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் மிகுதியாக உள்ளது. இதனை அதிகமாக நாம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு அதிக ஆரோக்கியத்தை தருகிறது. கைக்குத்தல் அரிசியை சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
சரி நாம் கைக்குத்தல் அரிசியை (Brown Rice Benefits) சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் 12 நன்மையைப் பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
அரிசி கழுவிய தண்ணீரில் ஒளிந்திருக்கும் பல நன்மைகள்…!
கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் கிடைக்கும் 12 நன்மைகள்..!
பெருங்குடல் புற்றுநோயை தடுக்க:
நாம் தினமும் கைக்குத்தல் அரிசியை (Brown Rice Benefits) சாப்பிடுவதால், பெருங்குடல் புற்றுநோய் வருவதை தடுத்து, பெருங்குடலை பாதுகாக்கிறது. கைக்குத்தல் அரிசியில் செலினியம் உள்ளதால் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை ஆரம்பத்திலேயே தடுக்ககூடிய தன்மை உள்ளது.
மார்பக புற்றுநோயை தடுக்க:
கைக்குத்தல் அரிசியில் (Brown Rice Benefits) உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்ஸ் லிக்னான் (phytountrients lignan) மார்பக புற்று நோய் மற்றும் இதய நோய் இரண்டையும் வராமல் காத்துக் கொள்ள உதவுகிறது.
வயது அதிகம் உள்ள பெண்களிடம் இருந்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி கைக்குத்தல் அரிசி தினமும் சாப்பிடுவதால் மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
கொழுப்பை குறைக்க:
கைக்குத்தல் அரிசியில் (Red Rice Benefits) இருக்கும் தவுட்டில் கிடைக்கும் எண்ணெய் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து உடலை மெலிதாக காட்டுகிறது.
இதய நோய்:
கைக்குத்தல் அரிசியில் (Red Rice Benefits) நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் மிகவிரைவில் செரிமாணம் அடைய உதவுகிறது. அதுமட்டும் இல்லாமல் இதய நோய் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் கைக்குத்தல் அரிசியை (Brown Rice Benefits) தினமும் சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவித்துள்ளனர். மற்றும் இரத்த குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
அதனால் தினமும் கைக்குத்தல் அரிசி (kaikuthal arisi benefits) சோறு சாப்பிட்டால் இதய நோயில் இருந்து தப்பிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சொத்தை பல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு
உடல் எடை குறைய:
கைக்குத்தல் அரிசியில் (kaikuthal arisi benefits) அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், கலோரி அளவை கட்டுப்படுத்துகிறது. கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து உணவை அதிகம் உட்கொண்டால், உடல் எடை விரைவில் குறையும்.
மலச்சிக்கலை தடுக்க:
இவற்றில் அதிகம் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் சாப்பிட்ட பிறகு, மிக விரைவில் உணவு செரிக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, குடல் ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
சர்க்கரை நோய் அளவை கட்டுப்படுத்த:
கைக்குத்தல் அரிசியில் (kaikuthal arisi benefits) அதிகளவு நார்ச்சத்து உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் இரண்டு வகை நீரிழிவு நோயை சீராக காத்துக்கொள்ள கைக்குத்தல் அரிசி பயனுள்ளதாக இருக்கிறது.
பலமான எலும்புகள்:
கைக்குத்தல் அரிசியில் (kaikuthal arisi benefits) 21% மெக்னீசியம் உள்ளதால், தினமும் ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிடுவதால் நம் எலும்புகள் மிகவும் பலமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.
ஆஸ்துமா:
பல ஆய்வின் மூலம் தினமும் கைக்குத்தல் அரிசி (kaikuthal arisi benefits) சாப்பிட்டால், ஆஸ்துமா நோயை குறைக்கிறது என்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பித்தக்கற்கள்:
கைக்குத்தல் போன்ற கரையாத நார்ச்சத்துக்கள் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டால் (kaikuthal arisi benefits) பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாகுவதை தடுக்க உதவுகிறது.
ஆரோக்கியமான நரம்பு மண்டலம்:
கைக்குத்தல் அரிசியில் (kaikuthal arisi benefits) மாங்கனீசு நிறைந்துள்ளது அதனால் இதை உட்கொள்ளும் போது இவற்றில் உள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலத்தை உருவாக்கி நம் நரம்பு மண்டலத்தில் பல வகையான நரம்புகளில் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.
உணவு முறை:
கைக்குத்தல் அரிசி (kaikuthal arisi benefits) ஒரு முழு தானிய உணவாகும். இதை 3 வேளை தினமும் சாப்பிடலாம், இதை தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், அதிக ஊட்டச்சத்தையும் தருகிறது.
வயிற்றுப்புண் மற்றும் குடல்புண்ணுக்கான மூலிகை வைத்தியம் !!!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம், பயனுள்ள தகவல் மற்றும் ரங்கோலி டிசைன் போன்ற தகவலை Whatsapp – ல் பெற இங்கே கிளிக் செய்யவும் –> | Whatsapp Group Link. |