புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (Cancer Fighting Foods)..!

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

(Cancer Fighting Foods)

புற்றுநோய் செல்களை அழிக்கும் 30 உணவுகள்: நீங்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களா கவலையை விடுங்க, ஏனென்றால் இப்போதேல்லாம் அதிகமாக புற்றுநோயால் இறப்பதற்கு என்ன காரணம் என்றால், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தான், அதாவது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் சரி, புற்று நோய் வராமல் இருப்பதற்கும் சரி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவு பழக்கங்கள், தினந்தோறும் ஏதேனும் சில உடற்பயிற்சி ஆகியவற்றை தினமும் பின்பற்றினாலே போதும் இந்த புற்று நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

அந்த வகையில் ஒருசில உணவுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாக உள்ளன. நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், உடலில் எந்த ஒரு நோய் வந்தாலும், எளிதில் குணமாக்கலாம்.

யாருக்கெல்லாம் கருப்பைவாய் புற்றுநோய் வரும்..!

சரி வாங்க இப்போது அத்தகைய புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் என்னவென்று இங்கு பட்டியலிட்டுள்ளோம். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

புற்றுநோயை குணப்படுத்தும் உணவுகள் – ப்ராக்கோலி:

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (cancer fighting foods)- ப்ராக்கோலி சாப்பிட்டால், மார்பக புற்றுநோயிலிருந்து விடுபடலாம்.

ப்ராக்கோலியில் இன்டோல் 3-கார்பினோல் என்னும் இரசாயனம், பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் மற்ற வகை புற்றுநோய்களையும் வராமல் தடுக்கும்.

எனவே ப்ராக்கோலி சாப்பிட்டு, புற்றுநோயிலிருந்து விலகியிருங்கள்.

புற்றுநோயை குணப்படுத்தும் உணவுகள் – பூண்டு:

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (cancer fighting foods) பூண்டு – ஏற்கனவே ஆய்வு ஒன்றில் பூண்டு சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு சக்தி, மற்ற நோய்கள் வருவதை மட்டுமின்றி, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களையும் அழிக்கிறது. எனவே நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்து வாருங்கள்.

புற்றுநோயை குணப்படுத்தும் உணவுகள் – கேரட் :

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (cancer fighting foods) கேரட் – தினமும் கேரட் சாப்பிட்டு வந்தால், நுரையீரல், வயிறு, குடல், சிறுநீர்ப்பை மற்றும் புரோஸ்ட்ரேட் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

புற்றுநோயை குணப்படுத்தும் உணவுகள் – காளான்:

காளான் சாப்பிட்டால், உடலில் உள்ள செல்கள் வலுவுடன் இருப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்த்துப் போராடும்.

காளானில் உள்ள புரோட்டீனான லெக்டின், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, அவை பரவாமலும் தடுக்கும்.

தைராய்டு பிரச்சனை எதனால் வருகிறது? இதற்கான சிச்சை? முழு விளக்கம்..!

புற்றுநோயை குணப்படுத்தும் உணவுகள் – நட்ஸ்:

புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நட்ஸ் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான க்யூயர்சிடின் மற்றும் காம்ப்பெரால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும். அதிலும் பிரேசில் நட்ஸில் புரோஸ்ட்ரேட் புற்றுநோயை எதிர்க்கும் பொருளான செலினியம், நல்ல அளவில் நிறைந்துள்ளது.

புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள் – பப்பாளி:

புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள்: தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள் மார்கெட்டில் அதிகம் விற்கப்படுகிறது. எனவே அதனையே மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். உண்மையில் அந்த உணவுகளை சாப்பிட்டால், புற்றுநோய் தான் அதிகரிக்கும்.

ஆகவே மார்கெட் சென்றால், பழங்களுள் ஒன்றான பப்பாளியை வாங்கி அதிகம் சாப்பிட்டால், புற்றுநோய் வரும் அபாயத்தை தவிர்க்கலாம்.

மேலும் இதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்திருப்பதால், அது புற்றுநோயை எதிர்த்துப் போராடும்.

புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள் – அவகோடோ:

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் (cancer fighting foods) அவகோடோ – அவகோடோவை தொடர்ந்து சாப்பிடுவதால், அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளானது, உடலில் உள்ள புற்றுநோய்க்கு வழிவகுக்கும் தேவையற்ற கொழுப்பு செல்களை உறிஞ்சி வெளியேற்றிவிடும்.

அதுமட்டுமல்லாமல், ஆய்வு ஒன்றிலும், அவகோடோவில் வாழைப்பழத்தை விட அதிகமான அளவில் பொட்டாசியம் உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படுள்ளது.

புற்று நோயை குணப்படுத்தும் பழங்கள் – திராட்சை:

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் திராட்சை – திராட்சையில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோயெதிர்ப்பு சக்தி, அதன் தோலில் மறைந்துள்ளது. அதிலும் சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சையில் உள்ளது.

மேலும் ஆய்வு ஒன்றிலும், திராட்சை சாப்பிட்டால், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கும் என்றும் சொல்கிறது.

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் – தக்காளி:

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்  தக்காளி: – தக்காளியில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், செல்லுலாரில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோயை உண்டாக்கும் வாய்ப்பைத் தடுக்கிறது.

அதுமட்டுமின்றி, ஆய்வு ஒன்றில் தக்காளியில் லைகோபைன் இருப்பதால், அவை வாய் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள் – ரெட் ஒயின்:

ரெட் ஒயினில் பாலிஃபீனால் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் உள்ளது. இருப்பினும், இது ஆல்கஹால் என்பதால், இந்த பானத்தை அளவாக பருகி வர வேண்டும். இல்லாவிட்டால், அதுவே நிலைமையை மோசமாக்கிவிடும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இதுபோன்ற மேலும் பல ஆரோக்கியகுறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>உடல் நலம் பெற சிறந்த ஆரோக்கிய குறிப்புகள்..!