வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் / Gastric problem home remedies..!
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருவது, வாயு பிரிதல், நெஞ்செரிச்சல், வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் வாயு பிரச்சனை வருவதற்கான அறிகுறிகளாகும். இந்த பிரச்சனை வயிற்றில் மட்டுமே ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாகும். இந்த வாயு பிரச்சனையானது எப்படி உருவாகின்றது என்றால் நாம் சாதாரணமாக பேசிக்கொண்டே சாப்பிடும் போதும் அல்லது ஏதாவது பானத்தை அருந்தும் போது நம்மை அறியாமல் காற்றையும் சேர்த்து விழிங்கிவிடுவோம். இந்த காற்று 80% இரைப்பையில் இருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது, மீதி 20% காற்று குடலுக்கு சென்று ஆசனவாய் வழியாக வெளியேறிவிடுகிறது. விரைவில் செரிமானம் ஆகாத உணவுகளை சாப்பிடுவதன் காரணமாக அதில் இருக்கும் பக்டீரியாக்கள் வயிற்றில் கேஸ் சேர செய்யும் பின் அதுவே வாயு தொல்லையாக ஏற்படுகிறது. இந்த வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம் (Gastric problem home remedies) சிலவற்றை பார்க்கலாம் வாங்க.
வாயு தொல்லை நீங்க வீட்டு மருத்துவம்..! |
வாயு தொல்லை தீர:
இந்த வாயு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு பெருஞ்சீரகம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த பெருஞ்சீரகத்தை ஒரு ஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள், அதனை ஒரு கிளாஸ் நீரில் கலந்து நன்றாக கொதிக்கவைத்து, அந்த நீரை தினமும் வெது வெதுப்பான சூட்டில் அருந்தலாம். இவ்வாறு அருந்துவதினால் சாப்பிடும் உணவானது எளிதில் ஜீரணம் ஆகும். இதனால் வாயு தொல்லை சரியாகும்.
இந்த பெருஞ்சீரகத்துடன் சிறிதளவு புதினா இலைகளையும் சேர்த்து கொதிக்கவைத்து அருந்தலாம்.
வாயு கோளாறு சரியாக:
பூண்டு நாம் சாப்பிடும் உணவை செரிமானம் செய்வதற்கும், வாயு தொல்லை நீங்கவும் ஒரு சிறந்த மருந்தாகும். எனவே தினமும் மூன்று வறுத்த பூண்டுகளை சாப்பிடுவதனால் வாயு கோளாறு சரியாகும்.
அல்லது சீரகம், மிளகு மற்றும் பூண்டு மூன்றையும் நீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து தினமும் அருந்தலாம்.
வாயுத்தொல்லை நீங்க:
அதேபோல் தினமும் இரண்டு வேளை ஒரு கிளாஸ் நீரில் சிறிதளவு பெருங்காயம் தூள் சேர்த்து அருந்தலாம் இதனால் வாயு தொல்லை சரியாகும்.
சைனஸ் குணமாக பாட்டி வைத்தியம் |
வாயு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்
பானம் தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:
- சீரகம் தூள் – 1/4 ஸ்பூன்
- ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
- பச்சைக்கற்பூரம் தூள் – 1/2 ஸ்பூன்
- பனைவெல்லம் – தேவையான அளவு
- தண்ணீர் – 1 1/2 கிளாஸ்
பானம் செய்யும் முறை:
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அவற்றில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிடுங்கள்.
பின் அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும் பின் அடுப்பில் இருந்து இறக்கி வடிகட்டி இந்த பானத்தை மிதமான சூட்டில் அருந்த வேண்டும். இவ்வாறு அருந்துவதால் வாயு தொல்லை நீங்கும்.
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆரோக்கியமும் நல்வாழ்வும் |