Mookirattai Keerai Maruthuvam Tamil..!
mookirattai keerai benefits in tamil:- நாம் அனைவரும் உணவே மருந்தாக அக்காலம் முதல் தற்போதைய காலம் வரை கீரைகளை தவறாமல் சாப்பிட்டு வருகின்றோம். உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கக்கூடிய பலவகையான கீரைகள் நமது நாட்டில் விளைகின்றது. கீரைகள் என்றால் நினைவுக்கு வருவது முளைக்கீரை, அரைக்கீரை, அகத்திக்கீரை போன்றவைதான் முதலில் நினைவுக்கு வரும்.
அதிக மக்களுக்கு தெரியாத, மக்கள் பயன்படுத்தப்படாத ஒரு வகையான கீரை தான் இந்த “மூக்கிரட்டை” இந்த மூக்கிரட்டை கீரை (mookirattai keerai) நம் வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும் இந்த கீரை தரையில் படர்ந்திருக்கும்.
இந்த மூக்கிரட்டை கீரையில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த மூக்கிரட்டை கீரை மூலம் பல நோய்களை குணப்படுத்திவிடலாம்.
உடல் எடை வேகமாக அதிகரிக்க – SUPER TIPS |
மூக்கிரட்டை கீரையின் பயன்கள்..! Mookirattai Keerai Maruthuvam Tamil..!
சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க:-
மூக்கிரட்டை கீரையின் பயன்கள் / Mookirattai Keerai Maruthuvam Tamil: 1
mookirattai keerai benefits in tamil:- ஒருவரின் உடலுக்கு இதயத்தின் நலம் எவ்வளவு முக்கியமோ, அதே போல் சிறுநீரகத்தின் நலனும் முக்கியம். எனவே சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு டம்ளர் அளவுக்கு வரும் வரை நன்றாக காய்ச்சி வாரம் இரண்டு முறை பருகிவர, சிறுநீரகத்துக்கு மிகவும் நல்லது. மேலும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகுவது, சிறுநீரக தொற்றுநோய்களுக்கு சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
கண் பார்வை அதிகரிக்க:-
மூக்கிரட்டை கீரையின் பயன்கள் / Mookirattai Keerai Maruthuvam Tamil: 2
பல்வேறு காரணங்களினால் இப்பொழுது பலருக்கு கண் பார்வையில் தெளிவின்மை, கிட்டப்பார்வை, எட்டப்பார்வை மற்றும் சில குறைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைக்கு மூக்கிரட்டை செடியின் வேரினை நன்கு காயவைத்து அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.
இவற்றை இளம் சூடான நீரில் கலந்து பருகிவந்தால் கண்கள் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகும். கண்கள் மிக தெளிவாக தெரியும்.
புற்று நோய் செல்களை அழிக்கும்:
மூக்கிரட்டை கீரையின் பயன்கள் /mookirattai keerai benefits in tamil : 3
மூக்கிரட்டை கீரை புற்று நோய்கள் மற்றும் புற்று நோய்களை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.
செரிமான பிரச்சனை சரியாக:-
மூக்கிரட்டை கீரையின் பயன்கள் / Mookirattai Keerai benefits in tamil: 4
தினந்தோறும் மலம் கழிப்பது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். இருப்பினும் சிலருக்கு காலையில் மலம் கழிப்பதில் சில பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த பிரச்சனை சரியாக மூக்கிரட்டை கீரையை தினமும் பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடுவதினால் வயிற்றில் செரிமான சக்தியை மேப்படுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்னையும் சரியாகிவிடும்.
மலட்டுத்தன்மை நீங்க:
மூக்கிரட்டை கீரையின் பயன்கள் / Mookirattai Keerai Maruthuvam Tamil: 5
மலட்டுத்தன்மை என்பது வயது வந்த ஆண் மற்றும் பெண் இருவருக்கும் உடல் நலம் நன்றாக இருந்து சில காரணங்களினால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையே மலட்டுத்தன்மை என்று கூறப்படுகிறது.
இந்த மலட்டுத்தன்மை நீங்க மூக்கிரட்டை கீரையை வாரத்தில் ஒருமுறையாது உணவில் சேர்த்து வர ஆண், பெண் இருபாலருக்கும் மலட்டுத்தன்மை நீங்கும்.
இரத்தம் சுத்தமாக:
மூக்கிரட்டை கீரையின் பயன்கள் / Mookirattai Keerai benefits in Tamil: 6
மாதத்தில் ஒருமுறை மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை காயவைத்து அவற்றை பொடிசெய்து நீரில் வேகவைத்து பருகிவந்தால் இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகள் அனைத்தும் நீங்கி இரத்தம் சுத்தமாகும்.
குதிகால் வலி குணமாக பாட்டி வைத்தியம்..! |
உடல் எடை குறைய:-
மூக்கிரட்டை, சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மிளகு, சீரகம், திப்பிலி இவற்றை சமமாக எடுத்துக் கொண்டு, தூளாக்கி, தினமும் இரு வேளை தேனில் கலந்து உண்டு வர, உடல் எடை குறைந்து, உடல் வனப்பு மிகுந்து காணப்படும்.
மூக்கிரட்டை கீரையின் தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Tamil maruthuvam tips |