கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள்..! Mustard oil uses in tamil..!

கடுகு எண்ணெய் பயன்கள்..! Mustard Oil Benefits In Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் நம் அன்றாட சமையலில் பலவகையான எண்ணெய்களை பயன்படுத்துகின்றோம். அந்த வகையில் உணவில் கடுகு எண்ணெயை(Mustard oil uses) சேர்ப்பதினால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம்.

newபாதங்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்..! Foot Massage Benefits..!

கடுகு எண்ணெய் மருத்துவ பயன்கள்:

பயன்கள் 1:

இந்த கடுகு எண்ணெயில் HDL என்ற குட் கொலெஸ்ட்ரால் அதிகமா உள்ளது. இந்த எண்ணெயில் ஒமேகா 3 மற்றும் 6 ஃப்பேட்டி அசிட் அதிகமாக இருக்கிறது. மற்ற எண்ணெயை விட கடுகு எண்ணெய் மிகவும் சிறந்தது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE" சேனல SUBSCRIBE" பண்ணுங்க: Pothunalam Youtube

இந்த கடுகு எண்ணெயை மீன் குழம்பு, மீன் வருவலில் சேர்க்கலாம் காட்டம் தெரியாது. இந்த எண்ணெய்க்கு நுண்ணுயிர் கொல்லி இயற்கையாகவே உள்ளது.

பயன்கள் 2:

அடுத்து பதப்படுத்தி வைக்கும் பொருள்களில் இந்த எண்ணெயை சேர்க்கலாம். சீக்கிரம் வீணாக கூடிய அதாவது தேங்காய், தேங்காய் பால் சேர்க்கும் உணவுகளில் இந்த எண்ணெயை சேர்க்கலாம்.

அதிகமான உடல் எடை உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் கொலெஸ்ட்ரால் கம்மியான நிலையில் உள்ளது. சிலருக்கு வயிற்று பகுதியில் தொப்பை குறையாது. அதற்கு இந்த கடுகு எண்ணெயை மசாஜ் செய்துவர வேண்டும்.

இந்த எண்ணெய் பயன்படுத்துவதால் ஹீட் ப்ரொடெக்ஷன் ஆகும். வயிறுக்கு கீழ் அதிகமாக இரத்த சுழற்சி இருக்கும். உங்களுக்கு எந்த இடத்தில் உடல் எடை குறைய வேண்டுமோ அந்த இடத்தில் மசாஜ் செய்யவேண்டும்.

உடலில் எந்த வலி இருந்தாலும் இந்த கடுகு எண்ணெயை பயன்படுத்தலாம். அதுவே உடலில் ரொம்ப வலி உள்ளவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் பலன் அளிக்காது.

newதேவையற்ற கொழுப்பு குறைய பாட்டி வைத்தியம் !!!

பயன்கள் 3:

அடுத்து கைகளில் அரிப்பு, புண்கள், தேமல், போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த கடுகு எண்ணெயை தேய்த்து வந்தால் இதுபோன்ற பிரச்சனைகள் வராது. இந்த கடுகு எண்ணெயில் Anti Fungal ப்ராபர்ட்டிஸ் இருக்கிறது.

வறண்டசருமம் உள்ளவர்கள் உங்கள் முகத்திற்கு ஃபேஸ் பேக் போடும்போது இந்த கடுகு எண்ணெயை 2 சொட்டு எடுத்து ஃபேஸ் பேகில் கலந்து போட்டால் முகம் நன்றாக பளபளப்பாக இருக்கும்.

அடுத்து சிலருக்கு பற்களில் இரத்த சிதைவு இருக்கும். அந்த பிரச்சனை சரியாக 1 ஸ்பூன் தூள் உப்பு, கடுகு எண்ணெய் 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து மிக்ஸ் செய்து தினமும் காலையில் பல் துலக்குனதுக்கு பின் இந்த கலவையை பற்களில் தடவி வந்தால் பற்களில் உள்ள ஈறு பிரச்சனைகள் சரியாகிவிடும்.

பயன்கள் 4:

அடுத்து இந்த கடுகு எண்ணெய் முடி சம்மந்தமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது. வெந்தயத்தை பொடி செய்து கடுகு எண்ணெயுடன் பேஸ்ட் போல் மிக்ஸ் செய்து உங்கள் முடிகளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து அதன் பின்னர் தலையை ஷாம்பு போட்டு வாஷ் செய்துகொள்ளலாம்.

இந்த முறையை பின்பற்றினால் பொடுகு தொல்லை இருக்காது. அதுமட்டும் இல்லாமல் சிறிய வயதிலே இளநரை பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த கடுகு எண்ணெயை வாரத்தில் 1 முறை தேய்த்து மசாஜ் செய்து அதன் பின்னர் தலையை ஷாம்பு போட்டு வாஷ் செய்யலாம். விரைவில் இளநரை குணமடையும்.

பயன்கள் 5:

இந்த கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது. இந்த எண்ணெய் சூடாக இருப்பதால் தலை வலி, தலையில் நீர் கோர்த்தல், இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.

இந்த கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் தலை முடி நன்றாக வளரும்.

இந்த எண்ணெயை உடலில் மசாஜ் செய்து வந்தால் உடலில் தேவையில்லாத டாக்சின்ஸ்  வியர்வையில் வெளியேறிவிடும்.

இந்த எண்ணெயை அதிகமாக  உணவுகளில் சேர்க்க முடியாது. தேவைப்படும் இடங்களில் சேர்த்துக்கொள்ளலாம்.

newஇடுப்பு வலி முற்றிலும் நீங்க இந்த 5ல் ஒன்னு போதும்
இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Health tips tamil