பொன்னாங்கண்ணி கீரை நன்மைகள் | Ponnanganni Keerai Nanmaigal

Advertisement

சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் – Ponnanganni Keerai Benefits in Tamil

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவுகளை உட்கொள்கிறோம். அதில் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது கீரை தான். கீரையில் அதிகப்படியாக சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக கீரையில் இரும்பு சத்துக்கள் உள்ளது. அதனால் தான் குழந்தைகளுக்கு தினம் ஏதாவது ஒரு கீரையை சேர்த்து கொள்வது அவசியம். கீரையில் நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொரு கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆகவே இந்த  வாயிலாக பொன்னாங்கண்ணி கீரை பயன்கள் பற்றி பார்ப்போம் வாங்க..!

Ponnanganni Keerai Benefits in Tamil:

இந்த பொன்னாங்கண்ணி கீரையில் நிறைய சத்துங்கள் உள்ளது. அப்படி என்ன சத்துக்கள் இருக்கிறது அதனை பார்க்கலாம். நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல் சத்து, இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், , சுண்ணாம்பு சத்துக்கள் வைட்டமின் ஏ, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

அழகு தரும் உணவுகள்:

பொன்னாங்கண்ணி கீரை தினமும் எடுத்துக் கொள்வதால் உடல் பொலிவு பெறும். எப்போதும் முகம் பொலிவாக இருக்கும்.

கண் சிவப்பு நீங்க | Kan Sivappu Neenga Tips in Tamil:

சிலருக்கு கண்கள் திடீரென்று சிவப்பாக இருக்கும். இரவு நேரத்தில் தூங்காமல் சிலர் வேலை பார்ப்பார்கள். அவர்களுக்கு கண்கள் சிவப்பாக மாறிவிடும். அதேபோல் அதிக போன் பயன்படுத்துவது எலட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதால் தான் கண்கள் சிவப்பாக மாறும். அதனை போக்குவதற்கு பொன்னாங்கண்ணி கீரை கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டால் கண் சிவப்பு நீங்கும்.

இரத்தம் சுத்தமாக இயற்கை வைத்தியம்:

பொன்னாங்கண்ணி கீரை தண்ணீரில் கழுவி அதனை சிறிய சிறியதாக நறுக்கி பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து அதனை இறக்கி மசித்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தம் ஆகும்.

பொன்னாங்கண்ணி கீரையை எளிய முறையில் இப்படியும் மாடித்தோட்டத்தில் பயிரிடலாம் 

கண் பார்வை அதிகரிக்க:

கண் பார்வை அதிகரிக்க

பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பகல் நேரத்தில் சிலருக்கு  நிலா சரியாக தெரியாது. ஆனால் இதனை 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தெளிவாக பார்க்கலாம்.

உடல் எடை அதிகரிக்க கீரை:

உடல் எடை அதிகரிக்க

பொன்னாங்கண்ணி கீரை உடல் எடையை அதிகரிக்கும். அதுவும் வாரம் ஒரு முறை பருப்பு, நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும். அதேபோல் பொன்னாங்கண்ணி கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெரும்.

அதேபோல் மலசிக்கல், மூலநோய் வாய் துர்நாற்றம் போக, இது போல் நிறைய நன்மைகள் இதில் அடங்கியுள்ளது. ஆகவே கடைகளில் கீரைகளை பார்த்தால் உடனே வாங்கிட்டு வந்திடுங்கள்.

நீங்கள் பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுபவர்களா  அப்போ இந்த விஷயமெல்லாம் உங்களுக்கு தெரியுமா

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆரோக்கியமும் நல்வாழ்வும்
Advertisement