Multipurpose of Ponnanganni Keerai in Tamil
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் நமக்கு பல வகைகளில் பயன்படுகிறது. ஆனால் அவற்றின் பல்வேறு பயன்பாடுகள் நம்மில் பலபேருக்கு தெரியாது. அந்த வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் ஒவ்வொரு பொருட்களும் நமக்கு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்பதனை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பொன்னாங்கண்ணி கீரை எப்படி எல்லாம் நமக்கு பயன்படுகிறது என்பதனை இப்பதிவில் பார்க்கலாம். பொதுவாக கீரை வகைகளில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இதனை நம் உணவில் மட்டுமே சேர்த்து கொள்வோம். ஆனால் சமையலுக்கு மட்டுமில்லாமல் பலவற்றிற்கும் பொன்னாங்கண்ணி கீரை பயன்படுகிறது. ஓகே வாருங்கள் அவற்றின் பல்வேறு பயன்பாடுகளை இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம். நீங்கள் பொன்னாங்கண்ணி கீரை பயன்படுத்துபவராக இருந்தால் பொன்னாங்கண்ணி கீரையின் முழு விவரம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பொன்னாங்கண்ணி கீரையின் பல்வேறு பயன்பாடுகள்:
பொன்னாங்கண்ணி கீரை:
பொன்னாங்கண்ணி கீரையை ஆங்கிலத்தில் Sessile Joyweed என்று அழைப்பார்கள். பொன்னாங்கண்ணி கீரையில் இரண்டு வகை உள்ளது.
- பச்சை நிற “நாட்டு பொன்னாங்கண்ணி”
- சிவப்பு நிற “சீமை பொன்னாங்கண்ணி”
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வெற்றிலை செடியை வளர்க்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
பொன்னாங்கண்ணி கீரையில் உள்ள சத்துக்கள்:
- கால்சியம்
- இரும்புச்சத்து
- புரோட்டீன்
- பாஸ்பரஸ்
- நார்ச்சத்து
- வைட்டமின் ஏ
- வைட்டமின் சி
- வைட்டமின் பி
பொன்னாங்கண்ணி கீரை பூவின் பயன்கள்:
பொன்னாங்கண்ணி கீரை பூ இரவில் ஏற்படும் கண் பார்வை குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருந்தாக இருக்கிறது.
இப்பூவினை ஆவியில் வேகவைத்து சாப்பிட்டால் கண்பார்வை மேம்படும்.
பொன்னாங்கண்ணி கீரை எதற்கெல்லாம் பயன்படுகிறது..?
சமையலுக்கு பொன்னாங்கண்ணி கீரை:
பொன்னாங்கண்ணி கீரையை பயன்படுத்தி சூப், பொரியல், கடையல், ரசம் போன்ற பல உணவுகளை சமைக்கலாம்.
சருமத்திற்கு பொன்னாங்கண்ணி கீரை:
பொன்னாங்கண்ணி கீரையை பொறியலாகவோ அல்லது சூப்பாகவோ செய்து சாப்பிட்டு வருவதன் மூலம் சுருங்கிய சருமம், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை நீங்கி சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் வைக்கிறது.
பொன்னாங்கண்ணி கீரை கூட்டு,பொரியல், சூப் செய்வது எப்படி? |
கண் பார்வையை மேம்படுத்தும் பொன்னாங்கண்ணி கீரை:
பொன்னாங்கண்ணி கீரையை சமைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் அல்லது 2 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்றது:
கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் தேவைப்படுகிறது. எனவே அவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
மேலும், பொன்னாங்கண்ணி இலைகளை சுத்தம் செய்து அதனுடன் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து சமைத்து சாப்பிடுவதன் மூலம் தாய்ப்பால் சுரக்கும்.
உடல் எடையை அதிகரிக்கிறது:
பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்பு மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து வேகவைத்து கடுகு, சீரகம், வர மிளகாய், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை அதிகரிக்கும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்க வீட்ல வல்லாரை கீரை இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!
எடை குறைப்பிற்கும் பயன்படுகிறது:
பொன்னாங்கண்ணி கீரையை உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை குறையும்.
பைல்ஸ் உள்ளவர்களுக்கு ஏற்றது:
பைல்ஸ் உள்ளவர்களுக்கு, பொன்னாங்கண்ணி கீரை சாறு மற்றும் முள்ளங்கி சாறு இரண்டையும் கலந்து தினமும் காலை மாலை என இருவேளைகளிலும் 2 ஸ்பூன் அளவிற்கு குடித்து வந்தால் பைல்ஸ் விரைவில் குணமாகும்.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |